தோழமையுடன்

Wednesday, December 29, 2010

வரலாறு படைக்கும் உண்ணா விரதம்

சகோதரர் நாகூர் ரூமி மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இந்த கொடுமைக்கு எதிராக கடந்த பத்தாண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் ஒரு உண்ணாவிரத போராட்டம் பற்றி யாழன் ஆதியவர்களின் கட்டுரையை தன் தளத்தில் மீள்பதிவு செய்திருந்தார். 

பொய்சாட்சியும் மெய்சாட்சியும்


நீங்கள் அமெரிக்க நாட்டுக்கு செல்கின்றீர்கள். ஒபாமாவிடமிருந்து அவரை சந்திக்க தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவரிடம் சென்று உங்கள்  தேவைகளை சொல்கின்றீர்கள். அவரை சந்திக்கும் முன் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்.? சந்தித்து கோரிக்கைகளை வைத்தபின் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?.


Tuesday, December 28, 2010

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல!


 “தொழுகின்றேன் பேர்வழி என முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகைக்கு சென்று விடுவதால் நாட்டின் உற்பத்தி திறன் (productivity) பாதிக்காதா?” என  கேள்வி எழுப்பினார் ஒரு நண்பர்.

Saturday, December 18, 2010

ரகசிய ரோஜா



 மவுலானா ரூமி(ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை “ரகசிய ரோஜா” என்ற பெயரில் தமிழில் தந்திருக்கிறார் சகோதரர் ரமீஸ் பிலாலி. அவர் ஊரில் என் முகவரிக்கு அனுப்பிய புத்தகம் துபாய் வந்து சேர்ந்து இன்றுதான் படிக்க வாய்த்தது.

Wednesday, November 24, 2010

படைக்கும் படைப்பினம்

ஆபிதீனின் பக்கங்களில் இந்த வாரம் வெளிவந்த இடுகையை அவர் முன்னுரையுடன் மீள்பதிவு செய்கின்றேன்.

Wednesday, November 10, 2010

நம்பிக்கை நெஞ்சில் வை தித்திக்கும் உன் வாழ்க்கை


என் சின்ன வயதில் விரும்பி ரசித்த இலங்கை வானொலியின் பிரபலமான விளம்பரதாரர் நிகழ்ச்சி இது. செம ஹிட்டு அப்ப. 
“அங்கிள் எனக்கு மனசே சரியில்லை,”  ஒரு சின்ன பாப்பாவின் கொஞ்சும் குரல் சொல்லும். கவலையோடு இருப்பவர்களுக்கும் புன்னகையை வரவழைத்து விடும் வசீகரமான குரல்.
“அப்படி சொல்ல கூடாது பாப்பா. ஸ்டார் பட்டர் டொஃபி சாப்பிடு சரியாயிடும்” என ஆறுதல் அளிக்குகும் பி.ஹெஜ். அப்துல் ஹமீது போன்ற ஒரு கம்பீர குரல். 

Wednesday, November 3, 2010

சூஃபி வழி : ஓர் எளிய அறிமுகம்



எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துகளையும், கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகளையும் கலக்கி செய்த கவர்ச்சியான எழுத்துக்கு சொந்தக்காரர் நாகூர் ரூமி. ஒரு மர்ம நாவலை போல சுவராசியமாக செல்லும் இந்த நூலை  துபாயிலிருந்து அபுதாபி வரை சென்ற  ஒன்றேகால் மணி நேர பயணத்தில் பெரும்பகுதியை படித்து விட்டேன்.

Saturday, October 30, 2010

பிரிய நண்பராய் முல்லா...


மனசாட்சியின் கண்ணாடியாய் நின்று நம்மை நாமே கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்கும் சுய அலசலின் பக்கம் நம்மை அழைப்பவை முல்லாவின் கதைகள். சஃபி என்பவர் முல்லாவின் கதைகளை அறிமுகப்படுத்தி புதிய காற்று மாத இதழில்(ஜூன் 2006) எழுதிய  சுவராசியமான  அறிமுகம் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.


Thursday, October 28, 2010

ஏகத்துவம் என்னும் ஒருமையின் தரிசனம்



Hindutva is understood as a way of life or a state of mind and is not to be equated with or understood as religious Hindu fundamentalism”.- Supreme Court of India. 
- தமிழ் ஹிந்து என்ற தளத்திலிருந்து. 

Wednesday, October 27, 2010

நம்பிக்கையின் படித்தரங்கள்

'அடுத்த விநாடி’, ‘ஜாலியாக ஜெயிக்கலாம், வாங்க  ஸ்டூடண்ட்ஸ்’, ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ போன்ற நூல்களின் மூலம் பரவலான வாசகர்களை பெற்றுள்ள பிரபல எழுத்தாளர் நாகூர் ரூமி. இலக்கியத்தில் டக்டர் பட்டம் பெற்றவர். 



பார்வை கொண்ட நெஞ்சம்


‘ஹாபிள்’ என்பது இறைவனின் பெயர்களின் ஒன்று. அதற்கு பாதுகாப்பவன் என பொருள்.   நம் ஞாபகங்களை பாதுகாத்து அவ்வப்போது நமக்கு வழங்குபவன் நம் இறைவன்.
ஞாபகம் இல்லையேல் நமக்கு அறிவு என்பதே இல்லை .
ஒன்றைப் பற்றிய அறிவு இல்லாமல் அதை செய்ய நாட்டம் வராது.
நாட்டம் இல்லாமல் செயல் இல்லை,
ஞாபகம்,அறிவு, நாட்டம், செயல் என்பது ஒரு sequence. ஒரு விதமான தொடரமைப்பு. இவற்றில் முந்தியதும் மூல ஊற்றும் ஞாபகம் தான். 

Wednesday, October 13, 2010

தவ்ஹீத், தஸவ்வுஃப் சில விளக்கங்கள்


தவ்ஹீது என்ற வார்த்தை குர்ஆனிலோ, நபி மொழியிலோ காணப்படவில்லை. முஆத் இப்னு ஜபல் என்ற தோழர் எமன் நாட்டிற்கு கவர்னராக சென்றபோது அந்த மக்களை ஏக இறைவன் பக்கம் அழைக்கச் சொல்லும் வார்த்தையாக “யுவஹ்ஹிது அல்லாஹு” என்ற வார்த்தையை பெருமானார் கூறினார்கள். இந்த ‘யுவஹ்ஹிது’ என்பதிலிருந்து வந்தது தான் தவ்ஹீது என்ற வார்த்தை என்கின்றார் அபு ஆமினா பிலால் பிலிப்ஸ். 

Tuesday, October 5, 2010

பாங்கர் நிமித்தம்

ரமீஸ் பிலாலி எனும் அற்புத எழுத்தாளரின் கட்டுரை. அவரது பிரபஞ்சக் குடில் என்ற வலைப்பக்கத்திலிருந்து நன்றியுடன் சுடப்பட்டுள்ளது.

Tuesday, September 21, 2010

கொலைக்களம் குவாண்டனாமோ! -- வெ. ஜீவகிரிதரன்



வெ.ஜீவகிரிதரனின் கட்டுரையை ஈமான் டைம்ஸ் மூலம் ராஜகிரி கஜ்ஜாலி அனுப்பியுள்ளார். பெண்களும், சிறுவர்களும் படிக்க வேண்டாம் என்ற கோரிக்கையுடன் அதிர்ச்சியூட்டும் இந்த கட்டுரை வாசகர்களின் பார்வைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது

Monday, September 20, 2010

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.


ஜான் பெர்கின்ஸின் இந்த நூலை இரா. முருகவேளின் அற்புதமான மொழிபெயர்பில் விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜான் பெர்கின்ஸ் இந்த புத்தகத்தை வெளியிடுவதானால் தனக்குள்ள ஆபத்தை பற்றி தன் ஒரே மகள் ஜெஸிகாவிடம் பகிர்ந்து கொண்டபோது    “கவலைப்பட வேண்டாம் அப்பா!. அவர்கள் உனக்கு முடிவு கட்டினால் நான் தொடர்வேன். உனக்கு ஒரு நாள் பெற்றுத் தரப்போகும் பேரக்குழந்தைகளுக்காகவாவது இதை நாம் செய்தே ஆக வேண்டும்” என்ற ஜெஸிகாவின் வரிகளுக்காகவாது அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

Saturday, September 18, 2010

எல்லாம் அவன்? எல்லாம் அவன் செயல்?


-->
இறைவனின் அருட் கொடையாய் கிடைத்த என் ஞானாசிரியர் (ஷெய்கு நாயகம்) சில ஆண்டுகளுக்கு முன் வெளிரங்கமாக எங்களை விட்டு பிரிந்தார்கள். என் போன்ற பலரின் வாழ்வில் இறைநேசமும், மனித நேயமும் பெருக காரணமாய் இருந்த அந்த மகத்தான தோழமையின் இழப்பு அதைப் போன்ற அறிஞர்களின் சகவாச பாக்கியம் பெற்றவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். சரித்திரத்தில் மட்டுமே படிக்க நேரும் ஒரு மகத்தான ஆளுமையுடன் உயிரும் உணர்வுமாய் வாழ கிடைத்தது மகத்தான வரப்பிரசாதம். 

Saturday, September 11, 2010

என்றென்றும் காதலுடன்


நம் மனைவி, மக்களை விட ஏன் நம் உயிரையும் விட இறைத்தூதரை நேசிக்காதவரை நம் இறை நம்பிக்கை முழுமையடையாது என்பது ஒரு பிரபலமான நபிமொழியின் சாரம். ஏன் அந்த அளவு நபியை நேசிக்க வேண்டும்?
000
ஒரு ஞானாசியரிடம் எனக்கு இறைஞான பாடங்களை சொல்லித் தாருங்கள் என ஒரு மனிதன் வந்தான். அவனிடம் “என்னிடம் மாணவனாக ஆகுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்றார்” அந்த குரு.
“என்ன தகுதி… சொல்லுங்கள்” என அவன் ஆவலாய் கேட்க,
உன் வாழ்க்கையில் யாரையாவது அல்லது எதையாவது நீ காதலிசிருக்கியா? என்றார்.

Friday, August 27, 2010

இறைவன் இருக்கின்றானா?


பொருள்முதல்வாதம் :

பொருள் முதல் வாதம் என்பது ஆதிமுதல் இருப்பது பொருள்கள் மட்டுமே என்பதில் துவங்குகிறது. மனிதன், விலங்கினம், தாவரங்கள், வானம், மலை, கடல், பூமி அனைத்தும் ‘பொருள்கள்’ என்ற வார்த்தையில் அடங்கும். இந்த பொருள்கள் அனைத்தும் தோற்றம், வளர்ச்சி, மறைவு என்ற நிலைகளுக்குட்பட்டவை. ஆதியிலிருந்து இருக்கும் இந்த  பொருள்களின் அடிப்படை அலகு ‘அணு’ எனப்படும். 

Friday, August 20, 2010

ஆன்மா என்னும் அகக்கண்


கண்பார்வையற்ற ஒரு அறிவு ஜீவி ஒருவன் இருந்தான். நிறங்கள் என்பதே இல்லை என்பது அவனது நம்பிக்கை. யாராவது அவனிடம் சிகப்பு, மஞ்சள் என நிறங்களை விளக்க முயன்றால் “எங்கே சிகப்பு என்பதை என் நாவுக்கு சுவைக்கத் தா!” என்பான். “மஞ்சள் என்பதை என் காதுகளுக்கு உணரச் செய்!” என்பான். யாரும் அவனிடம் வாதம் புரிவதில்லை. அவனைக் கண்டாலே பயந்து தூர ஓடி விடுவார்கள். அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார். அவர் ஒரு மருத்துவரும் கூட. அவரை அவனிடம் அழைத்துச் சென்றார்கள்.

Friday, August 13, 2010

உள்ளுணர்வு என்னும் ஒளி விளக்கு


அஞ்ஞானிகளிடம் இரண்டு அறியாமைகள் இருகின்றன ஒன்று அறியாமை என்ற அறியாமை. மற்றொன்று அறிவு என்ற அறியாமை. இவ்விரண்டும் நீங்க வேண்டும். தவிர, ஒன்று நீங்கி மற்றொன்று மிஞ்ச வேண்டும் என்பது அஞ்ஞானம் என்கின்றார் ரமணர் என்ற இந்து மத ஞானி. ஜே.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்பதும் இதையே குறிக்கின்றது. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இமாம் கஸ்ஸாலி என்ற இஸ்லாமிய ஞானியின் சொல்லும் இதையே வலியுறுத்துகின்றது. நாம் அறிந்தவற்றிலிருந்து விடுதலை பெறுவதால் என்ன கிடைக்கும் என்ற கேள்விக்கு விடையாக ‘மகத்தான மெய்யறிவு என்னும் இறையருள் ஞானம்’என்கிறது ஆன்மீகம்.

சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?


சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?" 
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர்.
சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திகேட்டார். 

Thursday, August 5, 2010

மாணவர்களுக்காக

துபாய் ஈமான் சங்கத்தை சேர்ந்த நண்பர் முதுவை ஹிதாயத்&அப்துல் ரஹிம் இந்த இணைப்பை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்கள். மாணவர்களுக்கு பயன்படும் என்பதால் இதை இணைத்துள்ளேன். உங்களுக்கு உபயோகமாக இருந்தால் பிறருக்கும் இதை அனுப்புங்கள்.

Talk on Career Awareness and Guidance... By Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D. (in tamil)
This programme usefull for all students.Please inform those students who has finished X,XII and want to decide about their careers.

Friday, July 30, 2010

கடவுளை காண முடியுமா?


டெல்லி சாந்தினி சௌக்கில் மத்திய அரசில் பணிபுரியும் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் இரண்டு பேர் பேசிகொண்டிருந்ததை கவனித்தார்.
‘கடவுளை காண முடியுமா?’ என்று ஒருவன் கேட்க,
‘ஓ முடியுமே உன் கோட்டை கழற்றி விட்டு பத்தடி முன்னால் சென்று பார் கடவுள் தெரிவார்’ என்றான் மற்றவன்.

Wednesday, July 21, 2010

காதல் சொன்ன வேதம்


“இறைவன் மீது நம்பிக்கைக்கொள்ளல் (ஈமான்பில்லாஹ்) என்பதன் விளைவாவது, ‘இறைவனை நேசித்தலும், அவனால் நேசிக்கப்படலும்’ என்னும் உண்மையை பல்வேறு இடங்களில் குர்ஆன் அழுத்தமாக கூறுகின்றது” என தன் புகழ் பெற்ற திருமறை விரிவுரையில் கூறுகின்றார் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத். அதற்கு ஆதரமாக பின் வரும் இறைவசனத்தை சுட்டி காட்டுகின்றார். 

Friday, July 9, 2010

மை நேம் இஸ் கான் ஆனால் நான் ஒரு பயங்கரவாதியல்ல!


'உயிர்மை' இதழில் சாரு நிவேதிதா ‘மை நேம் ஈஸ் கான்’ என்ற திரைபடத்தின் விமர்சனத்திற்கு கொடுத்த தலைப்பு தான் இது. வித்தியாசமான தலைப்பினால் கவரப்பட்டு என்ன சொல்கிறார் சாரு நிவேதிதா என வாசிக்கையில் அவரது பின்வரும் வரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தன. சாருவின் வரிகள்….

Saturday, July 3, 2010

நித்தியானந்தாவும் நாமும்!


நித்தியானந்தாவின் மீது எல்லா பக்கத்திலிருந்தும் வசைச்சொற்களால் கல்லெறிகிறார்கள். ஆன்மீகத்தின் பெயரால் அவர் செய்த மகத்தான மோசடியை யாரும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்பதில் இருவேறு கருத்தில்லை. எல்லா ஆன்மீகவாதிகளையும் மக்கள் தவறாக நினைத்து விடக்கூடதே என்ற கவலையில் மாற்று கருத்து கூறி அவரின் நிலையை நியாயப்படுத்துவதற்காக தந்திரா, மந்திரா என பூசி மொழுகுபவர்களின் கூற்றையும் நாம் பொருட்படுத்த தேவையில்லை.நமது கவலையெல்லாம் நம்மைப் பற்றித்தான்.

Wednesday, June 30, 2010

கேள்விகளும் பதில்களும்: ஒளி வீசும் 'இருண்ட காலம்' - குறும்படம்

கேள்விகளும் பதில்களும்: ஒளி வீசும் 'இருண்ட காலம்' - குறும்படம்

அந்த இரண்டணா

குளச்சலை சேர்ந்த நண்பர் ஜாஹிர் ஹுசன்(துபாய்) அனுப்பிய மின்னஞலிருந்து படிப்பினைக்குரிய இந்த சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்கள் பார்வைக்கு....

சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.

Monday, June 28, 2010

உள்ளத்தில் இருக்கும் அதிசய ஊற்று!


நீங்கள் ஒன்றையும் அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களின் தாய்மார்களின் வயிறுகளில் இருந்து உங்களை வெளியாக்கினான். மேலும் அவன் உங்களுக்கு செவிப்புலனையும், பார்க்கும் ஆற்றலையும், இதயங்களையும் நீங்கள் நன்றி செலுத்திடும் பொருட்டு அமைத்தான்.(16:78)
ஒன்றையும் அறியாத நிலை என்பது மனதில் எந்தக் கற்பனை கருத்துருவாக்கமும் இல்லாத நம் தூய இயற்கை நிலை.

Saturday, June 26, 2010

மனமே நீ மயங்காதே!



وَكَأَيِّن مِن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
(இந்த உலகில்) உயிர் வாழும் பிராணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச்(ரிஜ்கை) சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்(ரிஜ்க் அளிக்கின்றான்). அவனோ செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(29:60) 

ஏன் தேவையில்லாமல் கவலைப்படுகின்றாய். மிருகங்களுக்கு இருக்கும் பக்குவம் கூட உனக்கில்லையே என பொட்டில் அறைகின்றது இந்த திருவசனம்.

ஆலமே அர்வாஹ்!

 
(நபியே!) உம்முடைய ரப்பு (மனித இனத்தின் ஆதி பிதாவான) ஆதமின் மக்களாகிய அவர்களது (தந்தையின் )முதுகுகளிலிருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, ( அவர்களை நோக்கி,) “நான் உங்கள் ரப்பு அல்லவா?” (என்று கேட்டான்) ஆம். “நாங்கள் (அதற்கு) சாட்சி கூறுகின்றோம்” என்று அவர்கள் சாட்சி கூறியதை (நீர் அவர்களுக்கு) நினைவூட்டும், ஏனென்றால் “நிச்சயமாக நாங்கள் இதனை விட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக. (7:172)

Thursday, June 24, 2010

வாழ்வில் தேவையுள்ளவர்களுக்கு மட்டும்!


“உங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்”, என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.(5:76)
அவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்திட அவை சக்தி பெறமாட்டா. (அது மாத்திரமல்ல) தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் முடியாது. (7:192)

Wednesday, June 23, 2010

புல்லாங்குழல் என்னும் ஏகத்துவ ரகசியம் !


நாங்கள் ஒரு புல்லாங்குழல் போன்று தான் இருக்கின்றோம். அதன் ஓசையோ உன்னுடையது (இறைவனுடையது) _ மஸ்னவி ஷரீபில் மவ்லானா ரூமி (ரஹ்)
“புல்லாங்குழல்” என்பது ஓரு மகத்தான ஆன்மீகக் குறியீடு. நீங்களும் நானும் ஒரு வகையில் புல்லாங்குழலைப் போன்றவர்கள். என்ன ரூமி (ரஹ்) இப்படிச் சொல்கின்றார்கள் என அதிர்ச்சியடையாதீர்கள். இதை விளங்க நாம் திருக்கலிமாவை விளங்க வேண்டும். 

Monday, June 21, 2010

ஒவ்வொரு வினாடியும் கனி தரும் மரம்

அல்லாஹ் ஆதம் நபி முதல் வந்த ஒவ்வொரு நபியின் மூலமும் ஒரு முக்கிய செய்தியை உலத்தினருக்கு அறிவித்து கொண்டே இருக்கின்றான். அந்த தகவலை நாம் அறிய முயற்சிக்காமல் இருக்கலாமா?

அதுவும் ஒரே ஒரு வரி செய்தி தான். ஆனால் கடலையே கூஜாவுக்குள் அடைத்தது போல முழு குர் ஆனின் அடிப்படையும் தன்னகத்தே கொண்டது அந்த ஒரு வரி. அனைத்து நபிமார்களும் வந்த தூதுத்துவத்தின் அடிப்படை நோக்கமும் அந்த ஒரு வரி செய்தி தான்.

Thursday, June 17, 2010

அகப்பார்வை அத்தியாயம் 4

மறைந்த பொக்கிஷம்
மறைந்த பொக்கிஷமாக இருந்தது அல்லாஹ்வின் அகத்தே அமைந்த அவனது அருளாளன் (ரஹ்மான்), உணவளிப்பவன் (ரஜ்ஜாக்), படைப்பவன் (காலிக்) முதலிய எண்ணற்ற திருநாமங்களும் (அஸ்மாக்களும்) அந்த திருநாமங்களுக்குரிய தெய்வீக குணங்களும் (சிஃபாத்துகளும்) தான். இந்த குணங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து உலூஹிய்யத் என்னும் இறைத் தன்மை, ருபூபிய்யத் என்னும் ரட்ஷகத்தன்மை கொண்ட குணங்கள் எனவும் கூறுவார்கள். இந்த திருநாமங்களுக்கும், தெய்வீக குணங்களுக்கும் உரிமையாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மகத்தான ஏகத்துவ ஞானத்தின் மையக் கருப்பொருளாய் இருக்கின்றது.

அகப்பார்வை அத்தியாயம் 3

மறைக்க முடியுமா
மறைவான ஒருவனை மனதில் நிறுத்துவது எப்படிஇறைவன் மறைந்தவனா? என்பதைப் பற்றி அறியுமுன் இதை விளங்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.” இது (புகாரி, முஸ்லிம் ஷரீஃபில் உள்ள) பிரபலமான நபிமொழி

அகப்பார்வை. அத்தியாயம் 2.

படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன 
மானிட ஆன்மாக்கள் உண்டாக்கப்படும் போதே மண்ணுக்குள் கிடக்கும் விதையைப் போல, கடல் ஆழத்தில் கிடக்கும் முத்தைப் போல, உலோக சுரங்கங்களில் கிடக்கும் வைரங்களைப் போல அரும் சக்திகளால் பதிக்கப் பட்டு விடப்படுகின்றன. கல்வி, படிப்பு இவற்றால் நாம் செய்வது யாதெனில் இப்படி ஏற்கனவே நம்மில் மறைந்து கிடக்கும் சக்தியை வெளியில் யதார்த்தத்திற்குக் கொண்டு வர முயலுவதேயாகும். “கல்விஎன்றால் ஆன்மாவை அதன் சரியான நிலைக்குக் கொண்டு வருவதேயாகும்

(அர் ரிஸாலத்துல் லதுனிய்யா - இறையருள் ஞானம் என்னும் நூலில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்))

அகப்பார்வை அத்தியாயம் 1

மனிதனுக்கு வானம், பூமியை வசப்படுத்திக் கொடுத்ததாக இறைவன் சொல்கின்றான்.

أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً
வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதையும், இன்னும் உங்கள் மீது தன் அருட்கொடைகளை வெளிப்படையாகவும் (known and seen) மறைவானவையாகவும் (unknown and unseen) நிரப்பமாக்கி வைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? - அல் குர்ஆன் (31:20)

நம்மில் உள்ள இறைவன் வழங்கிய மறைவான அந்த அருட்கொடைகள் என்ன?