தோழமையுடன்

Showing posts with label அகப்பார்வை. Show all posts
Showing posts with label அகப்பார்வை. Show all posts

Tuesday, December 13, 2011

அல் குர்ஆனின் ஒளியில் அகப்பார்வை


 “குர்ஆனை வாசித்தால் நன்மை கிடைக்கும். விளங்கினால் (இறை நேச) பதவிகள் கிடைக்கும். ஆராய்சி செய்தால் இறைவனே கிடைப்பான்.”- என்பார்கள் ஷெய்குனா நூரி ஷாஹ் (ரஹ்) அவர்கள்.

குறிப்பு:  யார் அந்த விநோத மனிதர்? கட்டுரையை வாசித்து விட்டு தொடர்வது நலம்.

வேதத்தை வாசித்தால் இறையருள் கிடைக்கும் என்பது சரி இறைவனே கிடைப்பானா?

Monday, August 15, 2011

நோன்பாளியின் படித்தரங்கள்



நோன்பு வைப்பவர்களை மூன்று படித்தரமாக வகைப்படுத்தி கூறுகின்றார்கள் ஆன்மிக பெரியார்கள்.  

  1. உண்ணல், பருகல், உடலுறவு இவைகளை மட்டும் தடுத்து கொள்ளுதல் பாமரர்களின் நோன்பு.
  2.   உண்ணல், பருகல், உடலுறவு இவைகளை தடுத்து கொள்ளுதலுடன் அதிகமதிகம் நற்செயல்கள் புரிவதும், பொய் பேசுதல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல் போன்ற பாவச்செயல்களை விட்டும் தன்னை காத்து கொள்ளுவது நல்லடியார்களின் நோன்பு.  
  3. மேற் கூறிய இரண்டு நிலைகளுடன்  இறைவனைத் தவிர வேறு பக்கம் தங்கள் கவனம் திரும்புவதை விட்டும் காத்து கொள்ளுதல் நபிவழியில் அகப்பார்வை அடைந்த ஆரிஃபீன்கள் என்னும் இறைஞானிகளின் நோன்பு.

இது வேறு வேறு மூன்று வகை பிரிவினரை பற்றி கூறுவதாக  காட்சியளித்தாலும் யோசித்து பார்க்கும் வேளையில் நாமே சில நேரம் பாமர நிலையிலும், சில நேரம் நல்லடியார்களின் நிலையிலும் இருப்பதை உணர முடிகிறது. அத்துடன் இறைவனைத் தவிர வேறு பக்கம் தங்கள் கவனம் திரும்புவதை விட்டும் காத்து கொள்ளும் ஆரிஃபீன்கள் என்னும் இறைஞானிகளின் நிலையை நோக்கி முடிந்த அளவு முன்னேற முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் அது தான் நபிவழி அகப்பார்வையாய் இருக்கின்றது. அதைப் பற்றி இந்த கட்டுரையில் சுருக்கமாக பார்ப்போம்.

அகப்பார்வை - ஓர் அறிமுகம்


மௌலவி டாக்டர் செய்யது மஸ்வூது ஜமாலி முதல்வர், புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி, வண்டலூர், சென்னை அவர்கள் வழங்கிய அணிந்துரை....

Wednesday, October 27, 2010

பார்வை கொண்ட நெஞ்சம்


‘ஹாபிள்’ என்பது இறைவனின் பெயர்களின் ஒன்று. அதற்கு பாதுகாப்பவன் என பொருள்.   நம் ஞாபகங்களை பாதுகாத்து அவ்வப்போது நமக்கு வழங்குபவன் நம் இறைவன்.
ஞாபகம் இல்லையேல் நமக்கு அறிவு என்பதே இல்லை .
ஒன்றைப் பற்றிய அறிவு இல்லாமல் அதை செய்ய நாட்டம் வராது.
நாட்டம் இல்லாமல் செயல் இல்லை,
ஞாபகம்,அறிவு, நாட்டம், செயல் என்பது ஒரு sequence. ஒரு விதமான தொடரமைப்பு. இவற்றில் முந்தியதும் மூல ஊற்றும் ஞாபகம் தான். 

Thursday, June 17, 2010

அகப்பார்வை அத்தியாயம் 4

மறைந்த பொக்கிஷம்
மறைந்த பொக்கிஷமாக இருந்தது அல்லாஹ்வின் அகத்தே அமைந்த அவனது அருளாளன் (ரஹ்மான்), உணவளிப்பவன் (ரஜ்ஜாக்), படைப்பவன் (காலிக்) முதலிய எண்ணற்ற திருநாமங்களும் (அஸ்மாக்களும்) அந்த திருநாமங்களுக்குரிய தெய்வீக குணங்களும் (சிஃபாத்துகளும்) தான். இந்த குணங்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து உலூஹிய்யத் என்னும் இறைத் தன்மை, ருபூபிய்யத் என்னும் ரட்ஷகத்தன்மை கொண்ட குணங்கள் எனவும் கூறுவார்கள். இந்த திருநாமங்களுக்கும், தெய்வீக குணங்களுக்கும் உரிமையாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மகத்தான ஏகத்துவ ஞானத்தின் மையக் கருப்பொருளாய் இருக்கின்றது.

அகப்பார்வை அத்தியாயம் 3

மறைக்க முடியுமா
மறைவான ஒருவனை மனதில் நிறுத்துவது எப்படிஇறைவன் மறைந்தவனா? என்பதைப் பற்றி அறியுமுன் இதை விளங்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
(இஹ்ஸான் என்பது) அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.” இது (புகாரி, முஸ்லிம் ஷரீஃபில் உள்ள) பிரபலமான நபிமொழி

அகப்பார்வை. அத்தியாயம் 2.

படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன 
மானிட ஆன்மாக்கள் உண்டாக்கப்படும் போதே மண்ணுக்குள் கிடக்கும் விதையைப் போல, கடல் ஆழத்தில் கிடக்கும் முத்தைப் போல, உலோக சுரங்கங்களில் கிடக்கும் வைரங்களைப் போல அரும் சக்திகளால் பதிக்கப் பட்டு விடப்படுகின்றன. கல்வி, படிப்பு இவற்றால் நாம் செய்வது யாதெனில் இப்படி ஏற்கனவே நம்மில் மறைந்து கிடக்கும் சக்தியை வெளியில் யதார்த்தத்திற்குக் கொண்டு வர முயலுவதேயாகும். “கல்விஎன்றால் ஆன்மாவை அதன் சரியான நிலைக்குக் கொண்டு வருவதேயாகும்

(அர் ரிஸாலத்துல் லதுனிய்யா - இறையருள் ஞானம் என்னும் நூலில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்))

அகப்பார்வை அத்தியாயம் 1

மனிதனுக்கு வானம், பூமியை வசப்படுத்திக் கொடுத்ததாக இறைவன் சொல்கின்றான்.

أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً
வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதையும், இன்னும் உங்கள் மீது தன் அருட்கொடைகளை வெளிப்படையாகவும் (known and seen) மறைவானவையாகவும் (unknown and unseen) நிரப்பமாக்கி வைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? - அல் குர்ஆன் (31:20)

நம்மில் உள்ள இறைவன் வழங்கிய மறைவான அந்த அருட்கொடைகள் என்ன?