தோழமையுடன்

Showing posts with label ஐனியத். Show all posts
Showing posts with label ஐனியத். Show all posts

Thursday, May 14, 2015

எல்லாம் அவனா?




தாத்து ஒன்று – தாத்து இரண்டு அல்லது பல என்ற வேற்றுமையின் விளக்கம்:

தாத்து ஒன்று

“நிச்சயமாக தாத்து, உஜூது என்பன ஒரே அர்த்தத்துக்குள்ள இரு பெயர்களாகும் (இஸ்முகளாகும்). அந்த அர்த்தமாகிறது தாத்தைக் கொண்டும், அஸ்மாக்கள் கொண்டுள்ள கமாலைக் கொண்ட  வாஜிபான ஹக்காகும்”.- ஹைதராபாத் சூஃபி ஹஜ்ரத்.

‘ தாத்து ஒன்று’ என்பவர்கள் ‘தாத்து’ என்பதை ‘உஜுது’ என்றபொருளில் புழங்குகிறார்கள். அவர்களிடம் தாத்து ஒன்று என்பதன் பொருள் உஜுது ஒன்று என்பது தான். உஜுதின் அடிப்படையில் எல்லாம் அவன் என்று கூறுவதுடன் வெளிப்பாட்டின் (ஜுஹுருடைய) மர்த்தபாவில் உஜுது வெளிப்படுத்தும் கைரியத்தின் பாகுபாடுகளை பேணுகிறார்கள்.

 மர்தபயே ஹக்கையும், மர்தபயே ஹல்கையும் அவற்றுக்கு இடையே உள்ள ‘ஐனியத்து’ ‘கைரியத்து’ – ‘ஒன்றாக இருப்பது’ ‘வேறாக இருப்பது’ மசாயிலை தெளிவாக விளங்கி இருக்கின்றார்கள்.