தோழமையுடன்

Saturday, August 18, 2012

என் இதயமதின் இன்னுயிரே செய்யிதே நூரி!

ஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்)
 எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான்  என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள். (த்ஹுர் ரப்பானி பக்கம் 87)

அதனால் தான் 

"அன்தல் ஹாதி அன்தல் ஹக்கு லைஸல்  ஹாதி இல்லாஹு"  என  அல்லாஹ்வைத் தவிர வழிகாட்டி இல்லை என்ற ஏகத்துவ பண் பாடினார்கள் ஆன்மீக நாதர்கள். 

 "யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட நாடி விட்டானோ அவர்களுக்கு நேர்வழியை காட்டும் வலிமார்களை (நபியே!) நீங்கள் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்" என்கிறது இறைவேதம். 

அல்லாஹ்வே வலிமார்கள் மூலம் நேர்வழியில் செலுத்தும்  ஏகத்துவ மெய்ஞானத்தை அறிய இங்கே சொடுக்கி உள்நுழையுங்கள்.
இது மறைந்தும் மறையாமல் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்து அல்லாஹ், ரஸூலின் நேசத்தின் பால் எம்மை செலுத்திக் கொண்டிருக்கும் ஹஜ்ரத் நூருல்மஷாயிக் நூரிஷாஹ் (ரஹ்) அவர்களின் நூரியா ஞானவழித்தொடரைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.
  
இறைவன் தன் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மூலம் உலகிற்கு அளித்த புனித தீனை பாதுக்காக்க உலகெங்கும் தன் நேசர்கள அனுப்பிக் கொண்டே இருக்கின்றான். குர்ஆனுடைய ஓதும் முறைகளை ஏழுகாரிகள் மூலமாகவும், ஃபிக்ஹ் சட்ட திட்டங்களை நான்கு இமாம்கள் மூலமாகவும், ஹதீஸ்களை ஸிஹாஹ் சித்தாவின் ஆசிரியர்களான ஆறு இமாம்கள் மற்றும் முஹத்திஸ்கள் எனும் ஹதீஸ்கலை வல்லுனர்கள் மூலமாகவும் இன்று வரை அவனே பாதுகாத்து வருகின்றான்.


அது போல அண்ணலாரின் புனித இதயத்தில் பொதிந்திருந்த இறைஞானத்தை அலி(ரலி) அவர்களைக் கொண்டும், அவர்களின் மாணவர் ஹஸன் பசரி(ரலி) அவர்களைக் கொண்டும் வெளிப்படுத்திய இறைவன் வரிசையாக ஆயிரக்கணக்கான் வலிமார்களைக் கொண்டு இது வரை பாதுகாத்து வருகின்றான். இந்த ஞானவழி பாதை தரீக்கா எனும் பெயரில் அறியப்படுகின்றது.

இந்த தரீக்கா எனும் வலிமார்களின் ஞானவழி பாதையில் புழங்கப்படும் ஷஜ்ரா, ஸில்ஸிலா எனும் வார்த்தைகளை சுருக்கமாக அறிந்து கொள்வது இந்த கட்டுரையை விளங்க உதவும்.

மூஃமீன்களின் உயிரினும் மேலான, சர்வ கோடி சிருஷ்டிகளின் ரகசிய பெட்டகம் - ஹக்கீகத்துல் ஹகாயிக், ஈருலகையும் சிருஷ்டிப்பதற்குண்டான காரண புருஷர் பாயிஸே ஈஜாபே கௌனைன் பெருமானாரின் ரவ்லா ஷஃரீபின் வாயிலில் சவுதி ஆட்சியாளர் அப்துல்லா.
'ஷஜ்ரா' என்ற அரபி வார்த்தைக்கு மரம் என்று பொருள். ஒரு விதையிலிருந்து கிளம்பிய  ஒரு சிறு தண்டு பல் கிளைகளாக பிரிந்து பெரும் மரமாய் விளைந்து நிற்கிறது. அது போல நபி (ஸல்) அவர்களிலிருந்து தொடங்கிய ஞானவழி பல கிளைகளாக பிரிந்து பல்லாயிரம் கனிகளை ஈன்று பெரும் மரமாய் நிற்கிறது. இதையே 'ஷஜ்ரா' என்று கூறுகின்றார்கள்.

'ஸில்ஸிலா' என்றால் சங்கிலி என்று பொருள். பெருமானார்(ஸல்) அவர்களுடைய செய்தி, ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி இடையில் அறுந்து விடாமல் சங்கிலித் தொடர் போல் நம் வரை வந்து சேர்கிறது. இதையே ஸில்ஸிலா என்ரு கூறுவர். ஹதீஸ் கலையில் இதை 'ஸனது' என்று கூறுவார்கள்.


29:69   وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا َ

29:69. "மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்" என்று இறைவன் கூறுகின்றான்.ஒரு வழி என்று கூறவில்லை. பல வழி என்று கூறுகின்றான். 

நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ் பல வழிகளில், பல ஸனதுகளில் நம்மை வந்து சேர்வது போல இறைஞானமும் பல வழிகளில், பல ஸனதுகளில் நம்மை வந்து சேர்ந்திருக்கிறது.  இறைஞான பாடத்தின் அடிப்படை ஒன்றாக இருந்தாலும் கற்பிக்கும் வழிமுறைகளைப் பொருத்து இந்த ஞான வழித் தொடர் காதிரியா, சிஷ்தியா, சுஹ்ரவர்த்தியா, நக்‌ஷபந்தியா, ஷாதுலியா, தபகாத்தியா,அக்பரியா, உவைஸியா என பல்வேறு  ஞானபாதைகளாக பயிற்றுவிக்கப்படுகின்றது. இவற்றுல் குறிப்பாக சைய்யிதினா குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதர் ஜெய்லானி (ரலி) அவர்களின் காதிரியா ஸில்ஸிலா மற்றும் காஜா முயீனுத்தீன் சிஷ்தி அஜ்மீரி ( ரலி) அவர்களின் மூலம் பிரபலமான சிஷ்தியா  ஞானபாட்டையின் வழியில் வந்தது தான் எங்கள் சிஷ்தியுல் காதிரி ஆன்மீகப்பாதை.

முந்தைய காலத்தில் நிஜாமுத்தீன் மஹ்பூபே இலாஹி அவர்களை கொண்டு 'நிஜாமியா சில்சிலா' என்றும், காஜா அலாவுத்தீன் கல்யரீ சாபிரி(ரஹ்) அவர்களின் பெயரில் 'சாபிரிய்யா' என்றும் புகழ் பெற்ற ஷெய்குமார்களின் பெயரால் அழைக்கப்படுவதைப் போல லட்சக்கணக்கான சீடர்களின் ஷெய்கான நூருல் மஷாயிக் ஹஜ்ரத் நூரி ஷாஹ்(ரஹ்) அவர்களின் பெயரால் எங்கள் ஞானவழித் தொடர் 'நூரியா ஸில்ஸிலா' எனவும் அழைக்கப்படுகின்றது. இப்படி கிளைத் தொடர்களுக்கு பல பெயர்கள் இருந்தாலும் இவை அடிப்படையில் ஒரே ஸில்ஸிலா தான் என்பதை மறக்க வேண்டாம்.

நூரிய்யா ஸில்ஸிலாவின் முழுமையான ஞான வழி தொடரின் ஷஜரா இந்த கட்டுரையின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதர் ஜெய்லானி (ரலி), காஜா முயீனுத்தீன் சிஷ்தி அஜ்மீரி( ரலி) முதல் பல்வேறு மகத்தான ஷெய்குமார்களை தன்னகத்தே கொண்ட இந்த ஸில்ஸிலாவில்  கடந்த 200 வருடங்களில் உள்ள ஷெய்குமார்களின் சுருக்கமான அறிமுகம்  மட்டும் இங்கே முன் வைக்கப்படுகின்றது.

செய்யது சுல்தான் மஹ்மூதுல்லாஹ் ஷாஹ் (ரஹ்)

'ஷாஹ்ஜீ' என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஹஜ்ரத் மஹ்மூதுல்லாஹ் ஷாஹ் (ரஹ்) அவர்கள் மூலம் தான் சிஷ்திய்யா சில்சிலா ஹைதராபாத்தில் வளர ஆரம்பித்தது. ஹஜ்ரத் மஹ்மூதுல்லாஹ் ஷாஹ் (ரஹ்) அவர்கள் மிகச் சிறந்த ஆலிமாக இருந்தார்கள். நீங்கள் ஹைதராபாத் சென்று தௌஹீதை பரப்புங்கள் என்று அவர்களின் ஷைகு உத்தரவிட்டதன் பேரில் ஹைதராபாத் நகர் வந்து அங்கு ஏகத்துவ மெய்ஞான ஒளியை பல லட்சம் இதயங்களில் ஏற்றி வைத்தார்கள்.

ஹிஜ்ரி 1311 துல்ஹஜ் பிறை 7ல் உலகை பிரிந்த இவர்களின் புனித மண்ணறை ஹைதராபாத்தில் 'அப்துல் கன்ஜ்' எனுமிடத்தில் உஸ்மானிய்யா தவா கானாவுக்குப் பின்புறம் அமைந்துள்ளது.

   இவர்களின் பேரப்பிள்ளை முரீது ஒருவர் இவர்களின் மண்ணறை மீது மணி மண்டபம் எழுப்ப நாடியபோது அவர் கனவில் தோன்றி ‘மாடீ மிலே கோ மட்டீ மே ஹீ ரஹ்னே தோ’ – ‘இந்த தாழ்ந்த அடியானை மண்ணிலேயே இருக்க விட்டுவிடுங்கள்’என்று கூறினார்கள். எனவே இன்று வரை இவர்களின் புனித மண்ணறை நீல வானத்தைப் பார்த்ததாகவே காட்சியளிக்கிறது.

ஹஜ்ரத் அவர்கள் சிஷ்தி, காதிரீ, நக்‌ஷபந்தி, சுஹ்ரவர்தீ, தபகாத்தீ முதலிய பல ஸில்ஸிலாக்களை தங்களில் ஒன்று சேர்த்திருந்தார்கள். இவர்களின் கலீபாக்களில் ‘மச்லீ வாலே’ என்று அழைக்கப்படும் சையத் கமாலுல்லாஹ் ஷாஹ் அவர்கள் முக்கியமானவர்கள்.

கமாலுல்லாஹ் ஷாஹ் மச்லீ வாலே (ரஹ்)  
  
இவர்களின் திருப்பெயர் முஹம்மத் ஜமாலுத்தீன் என்பதாகும். கமாலுல்லாஹ் ஷாஹ் என்பது பட்டப் பெயராகும். இவர்கள் சிகந்தராபாத்தில் ஒரு மீன் கருவாட்டுக் கடையும், தானியக் கடையும் வைத்திருந்தார்கள். எனவே இவர்களை மச்லீ வாலே என்று மக்கள் அழைத்து வந்தனர். இவர்கள் அரபி, உர்து, பார்சி மூன்று மொழிகளிலும் நன்கு திறமை பெற்றிருந்தார்கள். ஒரு சில கவிதைகளும் எழுதியிருக்கிறார்கள். அதிகமாக சூபியாக்களுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்தார்கள். 

    ஒரு நாள் இவர்கள் தங்கள் கடையை சாத்திவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். எதிரே ஷாஹ்ஜீ என்று மக்களால்  அன்புடன் அழைக்கப்படும்  ஹஜ்ரத் சையத் மஹ்மூதுல்லாஹ் ஷாஹ்  அவர்கள் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டவுடன் அருகிலே அழைத்து கையைப் பிடித்து அங்கேயே பைஅத் கொடுத்து,

“கமாலே ஷிர்கே ஜலீ எனும் வெளிப்படையான இணைவைத்தலை விட்டும் உன் உடலை பரிசுத்தப்படுத்துவாயாக! இன்னும் ஷிர்கே கஃபி – அக்பா எனும் மறைவான இன்னும் மிக மறைவான இணைவைத்தலை விட்டும் உன் உள்ளத்தையும், ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்துவாயாக!”  என்று கூறினார்கள். பின்னர் “ஹூ ஹக்” என்று கூறிய வண்ணம் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

 அந்த விநாடியிலிருந்து ஹஜ்ரத் அவர்களின் நிலை மாறிவிட்டது. ஷாஹ்ஜீ அவர்களின் சபைக்கு தொடர்ந்து சென்றார்கள். ஷாஹ்ஜீ ஹஜ்ரத்திற்கு ஞான பயிற்ச்சி அளித்து “கமாலுல்லாஷாஹ்” என பெயரும் சூட்டினார்கள்.
அதிலிருந்து இவர்கள் புகழ் பரவத் தொடங்கியது. உலமாக்கள், இறைகாதலர்கள், சூஃபியாக்களுடன் பெரும் செல்வந்தர்களும், அரசு உயர் பதவியில் இருப்பவர்களும் அவர்கள் சபையிலமர்ந்து ஞான அமுதினை பருகினார்கள். 

நவாப் மஹ்தியார் ஜங்க், நவாப் சயீத் ஜங்க், ஹைதராபாத் நிஜாமியா பல்கலை கழகத்தின் ஸ்தாபகர் மவ்லானா அன்வாருல்லா கான், மவ்லானா பரகத் அஹ்மத் டோங்கி, மவ்லானா மளாஹிர் அஹ்ஸன் கீலானி, மவ்லானா ஷாஹ் அப்துல் காதிர் ஹஜ்ரத் இன்னும் பல பெரும் பெரும் தீனுடைய உலமாக்கள் இவர்களின் மாணவர்களாக விளங்கினார்கள்.

ஹஜ்ரத் அவர்கள் மிகவும் கராமத் விளங்கப்பட்டவர்களாக இருந்தார்கள். உதாரணத்திற்காக ஒன்றை பார்ப்போம்:
ஒரு நாள் ஒருவர் ஒரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரை எடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தார். “அது என்ன?” என்று ஹஜ்ரத் அவர்கள் கேட்டார்கள். அவரோ விளையாட்டாக ‘மண் அள்ளிச் செல்கிறேன்’ என்றார். ‘அப்படியே ஆகட்டும்!’ என்று ஹஜ்ரத் அவர்கள் கூறினார்கள். என்ன ஆச்சரியம்! அவர் தனது இடத்திற்கு சென்று பாத்திரத்தை இறக்கிப் பார்த்தார். முழுவதும் மண்ணாகவே இருந்தது. அப்போதுதான் இவர்களின் சிறப்பை விளங்கிய அவர் ஒடோடி வந்து மன்னிப்புக் கேட்டு அழுதார். அதில் என்ன இருந்தது? என்று கேட்டார்கள். ‘சர்க்கரை’ என்றார் அவர். ‘சரி அப்படி ஆகட்டும்!’ என்றார்கள். அந்த மண் முழுவதும் மீண்டும் சர்க்கரை ஆகிவிட்டது. 
இவர்கள் ஞானப் பயிற்ச்சிகளையும் கடுமையாகச் செய்து வந்தார்கள். வெளியில் சென்று வரும்போது காட்டில் இருக்கும் பல வகைப்பட்ட மரங்களின் இலைகளை எல்லாம் பறித்து வருவார்கள். வந்து வீட்டில் அமர்ந்து ஒவ்வொரு இலையாகக் கையில் எடுத்து ‘ஹக் ஜாஹிர் பசூரத்தே ஷை’ – ‘இந்த தோற்றத்தில் ஹக்குடைய உஜூதுதான் காட்சியளிக்கிறது’ என்று ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருப்பார்கள். 

நாடெங்கிலும் தவ்ஹீதின் ஞானத்தையும், திருக்கலிமாவின் அஸ்ரார்களையும் மணம் பரப்பிய ஷைகுனா ஹஜ்ரத் கிப்லா அவர்கள் ஹிஜ்ரி 1351 ரபீவுல் ஆகிர் பிறை 29 (கி.பி.1932 டிசம்பர் 8 ஆம் நாள்) வியாழக் கிழமை அன்று தங்கள் இக வாழ்வை முடித்துக் கொண்டு ரபீகுல் அஃலாவின் பக்கம் பயணம் சென்றனர். இவர்களின் புனித அடக்கஸ்தலம் ஹைதராபாத்தில் காசீ கோடா எனும் இடத்தில் அமைந்துள்ளது.

கமாலுல்லாஹ் ஷாஹ் (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலம்

 இன்றளவும் மக்கள் அவர்களின் தர்பாருக்குச்  சென்று நல்லாசி பெற்று வருகிறார்கள். இவர்களின் பல கலீபாக்களில் பிரதானமானவர்களாக கௌஸீ ஷாஹ் (ரஹ்) அவர்கள் திகழ்ந்தார்கள்.

கன்ஜுல் இர்பான் ஹஜ்ரத் கௌஸீ ஷாஹ் அக்பரீ (ரஹ்)     

       ஹிஜ்ரி 1311 துல்ஹஜ் 16, கி.பி. 1893 ஜூலை 1 சனிக்கிழமை ஹைதராபாத் பேகம் பஜார் மஹல்லாவில் பிறந்த ஹஜ்ரத் அவர்களுக்கு பெற்றோர் கௌஸ் அலி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

       இவர்களின் தகப்பனார் ஹஜ்ரத் கரீமுல்லாஹ் ஷாஹ் நக்‌ஷபந்தீ அவர்கள் நக்‌ஷபந்தீ ஸில்ஸிலாவின் ஷைகாக விளங்கினார்கள்.

ஹஜ்ரத் கரீமுல்லா ஷாஹ் (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலம்

 தந்தையின் மூலமே மார்க்கக் கல்விகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்ற ஹஜ்ரத் அவர்கள் இளமையிலேயே இறைக் காதல் மிக்கவர்களாக விளங்கினார்கள்.

கன்ஜுல் இர்ஃபான் கௌஸி ஷாஹ் (ரஹ்)
       தகப்பனார் ஹிஜ்ரி 1331 ஜமாதுல் அவ்வல் பிறை 7ல் மறைந்தார்கள். அதன்பின் இவர்கள் மச்லீ வாலே ஷாஹ் என்றழைக்கப்பட்ட ஹஜ்ரத் கமாலுல்லாஹ் ஷாஹ் அவர்களிடம் பைஅத்துப் பெற்றார்கள். இறை ஞானங்களைக் கசடறக் கற்றுத் தெளிந்த ஹஜ்ரத் அவர்களுக்கு கிலாபத் வழங்கி ‘கௌஸீ ஷாஹ்’ என்ற பெயரையும் வழங்கினார்கள் அவர்களின் ஷைகு அவர்கள்.

       அரபி, பார்சி, உர்து, ஆகிய மூன்று மொழிகளிலும் பெரும் புலமை பெற்றிருந்த ஹஜ்ரத் அவர்கள் மூன்று மொழிகளிலும் ஏராளமான கவிதைகள் எழுதியுள்ளார்கள். தாங்கள் இறைவன் மேல் கொண்ட  அளவற்ற காதலை அப்படியே கவிதையாக வடித்துள்ளார்கள். இவர்களின் கவிதைத் தொகுப்பான “தைய்யிபாத்தே கௌஸீ”  எனும் நூல் இறை ஞானப் பொக்கிஷமாக இன்று வரை விளங்கி வருகிறது.
           கௌஸீ ஷாஹ் (ரஹ்) அவர்களுக்கு ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் ஆன்மீக முறையில் திருக்காட்சி தந்து  கிலாபத்தும் வழங்கி தங்களின் ஞானங்களை வெளிப்படுத்துவதற்கு அனுமதியும் கொடுத்தார்கள். எனவே இவர்கள் மூலமாக உவைஸிய்யா முறையில் அக்பரிய்யா ஸில்ஸிலாவும் தொடர்கிறது. 

         ஹஜ்ரத் அவர்கள் எழுதியுள்ள 'நூருன்னூர்' எனும் நூல் மிகவும் புகழ் வாய்ந்தது. இது தவிர ‘மக்ஸதே பைஅத்’, கன்ஜே மக்தூம், மஇய்யத்தே இலாஹிய்யா, பலாஹே முஸ்லிம் போன்ற நூற்களும் தைய்யிபாத்தே கௌஸி என்ற கவிதைத் தொகுப்பும் இவர்களது ஆக்கங்களாகும்.    

கௌஸீ ஷாஹ் (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலம்
      ஹிஜ்ரி 1373 ஷவ்வால் பிறை 4ல் (கி.பி. 1954 ஜூன் 6) ஞாயிற்றுக்கிழமை இன்னுலகை நீத்த  ஷைகு அவர்களின் புனித மண்ணறை ஹைதராபாத்தில் உள்ள பேகம் பஜாரில் மஸ்ஜிதே கரீமுல்லாஹ் ஷாஹ்வில் உள்ளது. 

ஷைகு ஸஹ்வீ  ஷாஹ் (ரஹ்)

இவர்களின் மகனார் ஸஹ்வீ ஷாஹ் என்பவர்களும் பிற்காலத்தில் தரீக்கத் சம்பந்தமான நிறைய நூல்கள் எழுதியுள்ளார்கள். 

      ஹஜ்ரத் அவர்களுக்கு ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட கலீபாக்கள் இந்தியா முழுவதும் இருந்தார்கள். அவர்களுள் சைய்யத் நூரி ஷாஹ் (ரஹ்) அவர்கள் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள்.  

நூருல்மஷாயிக் ஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்)

இறந்த அன்னை இன்முகத்தை தேடவுமில்லை
பிரிந்த தந்தை உறவை எண்ணி வாடவுமில்லை
பெருமான் நபிநாதர் முஹியித்தீன் குலவழி தோன்றல்
உமை தேடி நெஞ்சம் அழுவது ஏன்? செய்யிதே நூரி
என்று ஷைகுனா பிலாலிஷாஹ் ஜுஹுரி அவர்கள் பாடினார்கள்.
ஏன் தாய், தந்தையை விட இந்த ஆன்மீக நாதரின் மீது அன்பு மிகைத்தது என்பதற்கு தொடரும் இந்த பாடல் வரிகளே பதிலளிக்கின்றது:
தன் நெஞ்சமதின் உதிரமது பாலென மாற
என் அன்னை அதை எனக்களித்தாள் உடலது வளர
தன்னைத் தானும் அறியும் உயர்ஞான அமுதினை
எனக்களித்து உயர்வளித்தீர் செய்யிதே நூரி!
லட்சக்கணக்கான நூரியா ஞானவழி சீடர்களின் இதயத்தில் என்றென்றும் எதிரொலித்து ஆனந்த கண்ணீரை கண்களில் வழியவிடும் பாடல்வரிகள் இவை.
     கேரளாவில் 1962ல் நடந்த ஜமாத்துல் உலமா மாநாட்டில் முதல் நாள் காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப்(ரஹ்) அவர்களும் இரண்டாம் நாள் ஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்) அவர்களும் தலமை தாங்கினார்கள். பின்பு, மங்களூர் ரயிலில் சுமார் 10 மணிநேரம் ஒன்றாக பயணம் செய்தார்கள். அபோது காயிதேமில்லத் அவர்கள் ஷெய்குனாவை “ஹஜ்ரத் அவர்கள் இந்த காலத்தின் இமாம் கஜ்ஜாலியாக திகழ்கிறார்கள்” என்று சொன்னார்கள். ஹஜ்ரத் நூரி ஷாஹ் அவர்கள் காயிதேமில்லத்தைப் பற்றி சொல்லும் போது “ தலைக்கு ஏற்ற தலைமைத் தனத்தை அல்லாஹ் அவர்களுக்கு அருளியுள்ளான்” என கூறினார்கள்.

 தங்கள் பெயருக்கு ஏற்ற வண்ணம் உலகமெங்கும் பேரொளியை வீசிய சர்கார் நூரி நாயகத்தின் இயற்பெயர் அஹ்மத் முஹ்யித்தீன் என்பதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குல வழியில் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் பேரப்பிள்ளையாக ஹிஜ்ரி 1322 துல்கஅதா 28ல் ஹஜ்ரத் அவர்கள் உலகில் உதித்தார்கள். ஹஜ்ரத் அவர்களின் தந்தைப் பெயர் ‘சையத் கௌஸுத்தீன்’ என்பதாகும்.

    தங்கள் இளம் வயதிலேயே ஷைகு கௌஸீ ஷாஹ் சர்காரிடம் பைஅத் பெற்று அவர்களின் பணிவிடையிலேயே பல்லாண்டுகள் கழித்தார்கள். ஷைகு அவர்கள் கிலாபத் கொடுத்து ‘நூரீஷாஹ்’ எனும் பெயரையும் கொடுத்தார்கள்.

    கேட்பவர்களை எல்லாம் தன் வசப்படுத்தும் மிக அற்புதமான பேச்சாற்றலை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்திருந்தான். ஷைகு கௌஸீ ஷாஹ் அவர்கள் தன் முரீது நூரிஷாஹ் அவர்களை சில இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். அங்கே தன் முரீதைப் பேசச் செய்து அவர்களின் பேச்சை ஷைகும் கேட்டு ரசித்துப் பாராட்டுவார்கள்.

     பிற்காலத்தில் நூரி நாயகத்தின் புகழ் உலகெங்கும் பரவியது. குறிப்பாக தமிழகம், கேரளா எங்கும் அவர்களின் பெயரை  அறியாதவர்கள் யாரும் இல்லை எனும் அளவுக்கு அவர்களின்  முரீதுகள் எங்கும் இருந்தனர். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓய்வின்றி ஊர் ஊராக பயணம் செய்து இறை ஞானங்களை போதித்து வந்தார்கள். தங்கள் கலீபாக்களைப் பார்த்து ‘நான் சிரமம் பாராது ஊர் ஊராக சுற்றியதால் அல்லாஹ் உங்களுக்கு இறை ஞானத்தை வழங்கியுள்ளான். இல்லை என்றால் தமிழகத்தில் பல்லாயிரம் இதயங்கள்  இருண்டு கிடந்திருக்கும். நீங்களும் சிரமம் பாராது ஊர் ஊராகச் செல்லுங்கள். “ஆரிப் தேங்கிக் கிடக்கும் குளம் போன்றவர் அல்ல! ஊர் ஊராகச் சென்று மக்கள் தாகம் தீர்க்கும் நதி போன்றவர்” என்று கூறுவார்கள்.

 எல்லா மக்களுக்கும் பரவலாக இறைஞானத்தை எத்தி வைக்க , ஆன்மீக பாதைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டி  பல்வேறு தரீக்கத் மாநாடுகளை நடத்தினார்கள்.
1976 சென்னை தரீக்கத் மாநாட்டின் மேடையில் சர்கார் நூரிஷாஹ், ஹஜ்ரத் கலீமிஷாஹ், P.S.K.M. அன்வாருல்லாஹ் ஷாஹ், அல்ஹாஜ் M.M.  பீர் முஹம்மது (ரவணசமுத்திரம்)


 ‘தர்ஜுமான்’ என்ற உர்து மாத இதழும் நடத்தினார்கள். அஸ்ராரே லாயிலாஹா இல்லல்லாஹ், தப்சீரே நூரி(சூரா பாத்திஹா), அஹமிய்யத்தே தரீகத், அஸ்ராரே இலாஹி, ஜுஹூரே முஹம்மத் (ஸல்) ஆகிய பல நூற்கள் எழுதியுள்ளார்கள்.

       கேரளாவில் ஜாமியா அரபிய்யா நூரிய்யா என்ற அரபிக் கலா சாலையைத் தோற்றுவித்தார்கள். ஹைதராபாத்தில் ஜாமியா இலாஹிய்யா நூரிய்யா எனும் அரபிக் கல்லூரியும், நூரி இண்டஸ்டிரீஸ், நூரிய்யா ஜூனியர் காலேஜ், அரபிக் ஓரியண்டல் ஹைஸ்கூல் போன்ற பல கல்வி நிறுவனங்களைத் துவங்கினார்கள். 

      ஹைதராபாத்தில் பண்டல்குடாவில் மஸ்ஜிதும், மத்ரஸா கட்டிடங்களும், கான்காஹ்வும் கட்டினார்கள். ஹஜ்ரத் அவர்களுக்கு 4 ஆண் மக்களும், 7 பெண் மக்களும் வாரிசுகளாவர். எனினும் தனது அனைத்து சொத்துக்களையும் மத்ரஸாவுக்கு வக்பு செய்து விட்டார்கள்.

     ஹிஜ்ரி 1411 ரபீவுல் ஆகிர் 14 சனிக்கிழமை உலகைப் பிரிந்த ஹஜ்ரத் அவர்களின் மண்ணறை ஹைதராபாத்தில் உள்ளது.

நூரி நாயகத்தின் தர்கா


நூரி நாயகத்தின் அடக்கஸ்தலம்

 ஷைகு அவர்களின் வழிதோன்றல்கள் (சஜ்ஜாதாக்கள்)
ஷைகு அஸ்ராருல்லா ஷாஹ் நூரி & ஷைகு மக்பூல்ஷாஹ் நூரி (ரஹ்)


ஷைகு அவர்களுக்கு தமிழகம், கேரளா மற்றும் பல இடங்களில் நூற்றுக்கணக்கான கலீபாக்கள் உள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக ஹஜ்ரத் ஜுஹுரீ ஷாஹ் கிப்லா, ஹஜ்ரத் ஆமிர் கலீமீ ஷாஹ் கிப்லா, ஹஜ்ரத் பைஜீ ஷாஹ் கிப்லா, ஹஜ்ரத் ஜமாலீ ஷாஹ் கிப்லா ஆகியோர் மிகவும் பிரபலமானவர்கள். 


     
ஸூபி ஹஜ்ரத் ஜுஹூரீ ஷாஹ் நூரி (ரஹ்)
ரயீஸுல் முஃபஸ்ஸிரீன் சையது ஆமிர் கலீமீஷாஹ் நூரி கிப்லா

ஷம்சுல் ஆரிஃபீன் தில் நவாஸ் ஃபைஜீஷாஹ் நூரி (ரஹ்)ஜமாலுல் ஆரிஃபீன் ஜமாலிஷாஹ் நூரி(ரஹ்) அவர்கள் நூரி நாயகத்துடன்நூரிஷாஹ் (ரஹ்)  பிரபலமான சில தமிழக கலிபாக்களின் படங்கள்:

ஷைகு டாக்டர் செய்யது கலீலுல்லாஹ் நூரி (ரஹ்)
ஷைகு ரபீக்கிஷாஹ் நூரி, லால்பேட்டை
ஷைகு செய்யது நிஜாமி ஷாஹ் நூரி, பாண்டிச்சேரி
எங்கள் உயிரினும் இனிய ஷெய்கு நாயகம் ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்) அவர்களின் உரூஸ் தினத்தில் அல்லாஹ் ரஸூலை நினைவு கூறும் பயான், குர்ஆன் மற்றும் மவ்லீது மஜ்லீஸின் சில காட்சிகள்:

ஷைகுனா ஃபைஜிஷாஹ் (ரஹ்) அவர்களின் அடக்கஸ்தலம்

உரூஸின் போது கான்காயே ஃபைஜியா
ஷைகுல் அரபி வல் அஜம் சுபூரிஷாஹ் ஃபைஜி
சஜ்ஜாதா மஸ்தானீஷாஹ் ஃபைஜி

இடமிருந்து வலம்: ஷைகு இர்ஃபானுல்லாஷாஹ் ஃபைஜி (சஜ்ஜாதா), ஷைகு சுபூரிஷாஹ் ஃபைஜி(ஷைகுல் அரபி வல் அஜம்), ஷைகு ஃபைஜானுல்லாஷாஹ் ஃபைஜி(சஜ்ஜாதா நஸீன்), ஷைகு அல்லாமா ஐனீஷாஹ் ஃபைஜி (நாஜிர் ஹஜ்ரத் பொருள்வை ஃபைஜுல் ஹஸனாத் அரபி கல்லூரி)
இடமிருந்து வலம்: ஷைகு ஹக்கீமிஷாஹ் ஃபைஜி (Retired Agricultural Scientist) ஷைகு நூராணி ஷாஹ் ஃபைஜி (சஜ்ஜாதா)

ஷைகு செய்யது முஷ்தாக் அலி ஷாஹ் ஃபைஜி (Retired Head Master) & பேராசிரியர் ஷைகு ஷுஹுதிஷாஹ் ஃபைஜிசேலம் ஹஜ்ரத் என புகழ் பெற்ற ஷைகு இர்ஃபானி ஷாஹ் நூரி (பன்னூலாசிரியர்), ஷைகு கனீமீஷாஹ் கிப்லா (நடுவில்)  அவர்களுடன் சஜ்ஜாதா (வலப்புறம்)
குளச்சல் ஹஜ்ரத் ஷைகு சூஃபிஷாஹ் ஃபைஜி அவர்கள் சஜ்ஜாதாவுடன்

கொள்ளுமேடு அலஹாபிஜ் ஃபாரூக்கிஷாஹ் ஃபைஜி
மதனிஷாஹ் ஃபைஜி, சிங்கப்பூர்
அபுபக்கர்ஷாஹ் ஃபைஜி


ஆஷிக் ஷாஹ் ஃபைஜிஆடுதுறை முய்னீஷாஹ் ஃபைஜி, துபாய்


நூராணி ஷாஹ் சஜ்ஜாதாவின் தலமையில் குர்ஆன், புர்தா, மவ்லீத் மஜ்லீஸ்
மூன் டிவி சுலைமான் ஹஜ்ரத் - துபாய்

சென்னை ஹைக்கோர்ட் வக்கீல் வக்காலத்ஷாஹ் ஆமிரி

தமிழக தலைமை காஜி ஜனாப் சலாஹுதீன் ஐயூபி அவர்கள்

இடது ஓரம் : இறையன்பன் குத்தூஸ் ஃபைஜி, வலது ஓரம் : அல்ஹாஜ் ஹாரூன் M.P.

இடது :  தமிழக தர்காக்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் மர்ஹூம் சச்சா முபாரக்

தேரிழந்தூர் தாஜுதீன் ஃபைஜி


Qadiria Silsila

Chishtiya Silsila

Chistiyul Qadiri
 • Khaja Haji Ishaq Chishti Qadiri (W. H: 953)
 • Khaja Haji Muhammad Chishti Qadiri (W. H: 972)
 • Khaja Junaid Thani (W. H: 985)
 • Khaja Shah Hidayatullah Ayni (W. H: 1018)
 • Khaja Sayyid Kamaludin Bukhari (W. H: 1052)
 • Khaja Sayyid Jamaludin Chishti Qadiri (W. H: 1162)
 • Sayyid Muhammad Shah Mir Chishti Qadiri (W. H: 1186)
 • Khaja Sayyid Kamaludin Sham’ Khan Dan Misht (W. H: 1224)
 • Khaja Alawudin Chishti Qadiri (W. H: 1251)
 • Khaja Sayyid Burhanudin (W. H: 1290)
 • Sayyid Sultan Mahmudullah Shah (W. H: 1311)
 • Hazrat Sheikh Kamalullah Shah Macchliwale Shah (W. H: 1351)
 • Kanzul Irfan Hazrat Ghauth Ali Shah Ghauthi (W. H: 1373)
 • Noorul Mashaikh Sayyid Ahmed Muhyiddin Noorishah Jilani (W. H: 1411)
 • Shamsul Arifeen Shiek Faizeeshah Noori Chishti Qadiri  (W.H.1426) 
பார்க்க : ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்களின் :

 இறை வழியில் இறைநேசச் செல்வர்கள்

தர்ஹாக்கள் இறைவனின் அடையாளச் சின்னங்கள்

நன்றி! :

 இந்த கட்டுரை எனது ஆன்மீக சகோதரர் அப்சலுல் உலமா, அதீபேஃபாஜில், பேராசிரியர் ஷைகு ஷுஹூதிஷாஹ் ஃபைஜி அவர்களின் புத்தகங்களிருந்து தொகுக்கப்பட்டது.

படங்கள் உதவி : ஹுசைன் ஃபைஜி, ஆசிரியர், ஸில்ஸிலாயே ஃபைஜியா நியூஸ் லெட்டர்.
  உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
  Post a Comment