தோழமையுடன்

Friday, August 10, 2012

அவமரியாதையை & போலிகுற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும் – ஃபஜிலா ஆசாத்

 ஃபஜிலா ஆசாத்தின் இந்த மனோதத்துவ உரையை சகோதரர் முதுவை ஹிதாயத் (ஈமான் டைம்ஸ்) அனுப்பி இருந்தார். நம் பக்கத்து வீட்டு சகோதரி நம்முடன் உரையாடுவது போன்று இஸ்லாமிய வழக்குத் தமிழும், சரளமான ஆங்கிலமும் கலந்த அருமையான உரை.  

என் மனைவி மிகவும் ரஸித்து கேட்டதுடன் புண்பட்ட மனங்களுக்கு மருந்திட புல்லாங்குழலிலும் இதை வெளியிடுங்கள் என உத்தரவிட்ட போது மறுபேச்சில்லாமல் இணைத்துவிட்டேன். 

பயப்பட வேண்டாம் really worth listening கேட்டு நீங்களும் மனதை ஆற்றிக் கொள்ளுங்கள். 


கேட்குமுன் ஃபஜிலா ஆசாத் பற்றி ஒரு சிறிய அறிமுகம் அவரது கவிதை வழியே:

முடிவல்ல ஆரம்பம்

எனக்காக நீ
விலக்கிய விசயங்களால்
உன் உள்ளத்தில்
வலியிருக்கலாம்

பூமிக்கு வலிக்குமென
விதை நினைத்தால்
செடிகள் வளர்வதெங்கு?

புரிந்துகொள்
நான் மலைகளை
அழிக்கவில்லை
சாலைகளை உருவாக்குகிறேன்!
 

என  நிலவு ததும்பும் நீரோடை’ கவிதை எழுதிய கவிஞர் ஃபஜிலா ஆசாத் M.C.S.E., M.CD.B.A., C.E.H., C.C.N.A., M.B.A., அவர்களைப் பற்றி பதிவுலக சகோதரி ஸாதிகா அவர்கள் 

“ஃபஜிலா ஆஷாத் கவிதைகளுக்கு புதியவர் கிடையாது.அவர் பல்கலை வித்தகி. விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, ஏனைய போட்டிகள், அனைத்திலும் முண்ணனியில் நிற்பார். கலாசாலையில் விழா மேடையில் பரிசு பற்றி அறிவிக்கும் போதெல்லாம் இவரது பெயரை கூறும் பொழுது வியந்திருக்கின்றேன். தவிர சிறந்த நகை டிசைனர் , பல நல்ல நூல்கள் எழுதிய படைப்பாளி. இப்படி பன்முகத்தோற்றம் கொண்ட கீழக்கரை தாஸிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவி” என புல்லாங்குழல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டார்.  

நான் சென்னை சீதக்காதி அறக்கட்டளையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, சீதக்காதி அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி தான் ‘தாஸிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி’ என்பதால் சகோதரியின் வளர்சியில் எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.

ஒரு நாற்பது நிமிடத்தில் முன்று பகுதிகளையும் கேட்டு விடலாம். இதோ சகோதரி ஃபஜிலா ஆசாத்  …..

 பகுதி 1

 பகுதி 2
 பகுதி 3
நன்றி : திருச்சி சையத் - ஈமான் டைம்ஸ் முதுவை ஹிதாயத்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
 
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment