தோழமையுடன்

Saturday, December 24, 2011

ஒரு பைசா செலவளிக்காமல் உங்கள் நோய் குணமாக வேண்டுமா?


ஹீலர் பாஸ்கர்
என்ன இது புல்லாங்குழல் ஆன்மிக தளம் என நினைத்தால் லேகிய வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டதாக தெரிகிறதே என சிலர் அவசரமாக முடிவெடுத்து விட கூடாது என்பதால் தான் தலைப்பில் 'ஒரு பைசா செலவளிக்காமல்' என முன்னெச்சரிக்கையாக சேர்த்தேன்.

இறைநம்பிக்கைக்குப் பிறகு உடல் நலத்திற்காக   இறைவனை இறைஞ்ச சொல்கின்றார்கள் நபிகள் நாயகம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் ஆக உடல் நலம் பேணுவது ஆன்மிகத்தின் தலையான அம்சம். சரி விசயத்துக்கு வருகின்றேன்.


எங்கள் மேனேஜிங் டைரக்டரின் செகரட்டரி பிரபாகர் ராஜா B.E.(I.T.) தான் இந்த இடுகை எழுத முக்கிய காரணம். செக்கரட்டரி பி.ரா. வுக்கே இந்த இடுகை சமர்ப்பணம். (புள்ளிகளை நீக்கி படித்திட வேண்டாம்.)

பிரபாகர் ராஜாவுக்கும் எனக்கும் உள்ள முக்கிய ஒற்றுமை நாங்கள் இருவருமே சர்க்கரை நோயாளிகள்.

சென்ற வாரம் ஒரு நாள்-

“உங்களுக்கு சுவீட் சாப்பிடனும்னு ஆசையே இல்லையா?” என்ற  பிரபாகர் ராஜா “நான் ஒரு தளத்தின் லிங்க் அனுப்பி வைத்தேனே பார்த்தீர்களா?” என கேட்டார்.

தொடர்ந்து அவரே, “அதிலே சொன்னபடி ஒரு மாசமா செஞ்சதிலே மாத்திரைகள் சாப்பிடாமலேயே எனக்கு சுகர் நார்மலாக இருக்கிறது” என சொல்லி முடித்தார்.

என்னடா இப்படி சொல்லிட்டாரே என வார இறுதியில் சற்றேரக் குறைய 6 மணி நேரம் செலவளித்து பார்த்ததில்….. 

அந்த லிங்கில் ஹீலர் பாஸ்கர் என்பவர் மருந்தின்றி நம்மை நாமே குணப்படுத்திக் கொள்ளும் சுய சிகிச்சை வழியினை வீடியோ மூலம் சொல்லிக் கொடுக்கிறார்.

“தூய்மையற்ற இரத்தமே அனைத்து நோய்களுக்கும் அடிப்படை. இரத்தத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்” என்பது தாத்தா காலத்து நாட்டு வைத்தியர்கள் முதல் தாது புஷ்டி லேகியம் விற்கும்  தெருவோர மருத்துவர்! வரை கூறகேட்டு சலித்துப்போன  வார்த்தைகள் தான். ஆனால் அதையே அனாடமி பாடத்தை நாழு மணி நேரம் நகைச்சுவையோடு விளக்கி நம்மை நம்பும்படி செய்கிறார் ஹீலர் பாஸ்கர் என்பது தான் விஷேசம்.

இந்த சிகிச்சையே எடுத்துக் கொள்ள விரும்பாதவர்கள் கூட உடற்கூறின் அடிப்படையை எளிமையாக விளங்கிக் கொள்ள பாஸ்கரின் கேசட்டுகளை கேட்களாம்.Very Interesting.

பிறகு உண்ணல், பருகள், உறக்கம், சுவாசம் போன்றவற்றை நெறிப்படுத்தும் எளிய போதனைகளை தருகிறார். 

சிற்சில இடங்களில் நேருடினாலும், நாமறிந்த அரைகுறை அனாடமி அறிவுக்கு அவர் சொல்வது தவறாகப்படவில்லை. அதே நேரம்  ஆரம்பம் முதல் வரிசையாக அனைத்து கேசட்டுகளையும் பார்க்க வேண்டியது கட்டாய அவசியம். இல்லை என்றால் பூ.. இவ்வளவு தானா என அலட்சியம் கொள்ள நேரிடலாம்.

நானே இன்னும் முழுமையாக பரிசோதித்தறியா ஒன்றை அவசர அவசரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு காரணம் இந்த கோரிக்கையை முன்வைக்கத்தான். 

எனது அன்பான கோரிக்கை:

1.    ஏற்கனவே அதை செய்து பார்த்தவர்கள் உங்கள் அனுபவத்தை பதியுங்கள்.

2.    புதியவர்கள் முயலுங்கள் இன்னும் உங்கள் அனுபவத்தை கூறுங்கள்.

தயவு செய்து சிரமம் பாராமல் உங்கள் அனுபவத்தை கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள். 

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்; அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு” என்பதற்காக.

கால் காசு செலவு இல்லா இந்த சிகிச்சைப் பற்றிய ‘மெய்பொருளை’ நமது மெய்யே சொல்லட்டுமே.

அன்புடன்,

ஒ.நூருல் அமீன்

ஹீலர் பாஸ்கரின் வளைத்தள சுட்டி இதோ:

AnatomicTreatment - The Art of Self Treatment By Healer Baskar


Post a Comment