பாக்கிஸ்தானில் நடக்கும் கொலையை ‘இந்து வியாபாரி வெட்டிக் கொலை’ ‘இந்து மருத்துவர் வெட்டிக் கொலை’ ‘இந்து வியாபாரியிடம் வழிப்பறி’ என்று
எழுதி அங்கே கொலையோ, கொள்ளையோ அதனால் பாதிக்கப்படுவது இந்துக்கள் மட்டுமே என்ற தேற்றத்தை ஊடகங்கள் விதைக்கின்றது.
![]() |
60 ஆண்டுகள் மூடியிருந்த கோயிலின் திறப்பு விழா |
ஆனால் உண்மை என்னவோ நேர்மாறானது அங்கு நடக்கும் கொலையும், கொள்ளைகளும் இனம் பார்த்து நடப்பதில்லை என்பதற்கு நாளும் வெடிகுண்டுகளால் சாகும் இஸ்லாமியர்களின் சடலங்கள் சான்றாக உள்ளன.
அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்கும் அயோக்கியர்களுக்கு மத, இன பாகுபாடு எதுவுமே கிடையாது. அவர்கள் தம்மைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். இவ்வாறான பயங்கரவாதிகள் பாக்கிஸ்தானில் மட்டுமல்ல; நமது தாயகமான இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் இருப்பார்கள். இத்தகையோர் எண்ணிக்கை குறைவானவர்களே! ஆனால் மதம் கடந்து மனிதமும், நியாயமும் பேணும் மக்கள் உலகில் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தகைய நல்லோர் பாக்கிஸ்தானிலும் உண்டு என்பதை சமீபத்திய ஒரு செய்தி நிரூபிக்கிறது.
“ பாக்கிஸ்தான் வடமேற்கு எல்லைபுற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் 160 ஆண்டுப் பழமையான இந்து கோயில் ஒன்று உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் பாக் பிரிவினைக்கு பின்பு 60 ஆண்டுகளாக மூடிக்கிடந்தது. இந்த கோயில் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி, பெஷாவார் ஹைக்கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இந்த கோயில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் போலிசார் அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மூடி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயில் தங்கள் குடும்பத்துக்குத் தான் சொந்தமனது என்பதை நிரூபிக்க போதுமான சான்றாவணங்கள் தாக்கல் செய்ய பூல் வாட்டி தவறி விட்டர் ஆயினும் வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தாமல் மூடி வைத்திருப்பது அனைத்து சட்டங்களுக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபட திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது”.
மேற்கண்ட செய்தியிலிருந்து பல உண்மைகள் வெளிப்படுவதைக் காணலாம். முஸ்லிம் ஆட்சியாளர்களாக இருந்தும் கூட பாக்கிஸ்தானில் மிக மிக சிறுபாண்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தல உரிமை கோரலின் நீதி மறுக்கப்படவில்லை. அறுபதாண்டுகாலம் பூட்டி இருந்தும் அக்கோயிலுக்கு சிறுசேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில் சம்பந்தப்பட்ட சமுதாயத்திடம் கொடுக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது எதை காட்டுகிறது என்றால் ஒரு சாரார் சிறுபாண்மையினர் – பலவீனர் என்பதற்காக அந்த நாட்டின் நீதிமன்றம் அநீதி இழைக்காது என்பதைத் தான்.
நன்றி : இனிய திசைகள், டிசம்பர் 2012
படிக்கவும் : பயங்கரவாததிற்கு எதிரான போரில் முஸ்லிம்கள் - வாஸந்தி
படிக்கவும் : பயங்கரவாததிற்கு எதிரான போரில் முஸ்லிம்கள் - வாஸந்தி
1 comment:
very good migavum varaverkka thakka vishayam ella nattilum ide pol irunthal nallathu vallgha
avarathu thondu
Post a Comment