தோழமையுடன்

Thursday, April 26, 2012

நாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்


முதலில் 'இன்று நாகூர் கந்தூரி எனும் ஏகத்துவ கொடியேற்றம்' எனும் இந்த இடுகையை மீண்டும் ஒரு முறை படித்து விடுங்கள்.

படித்து விட்டீர்களா? நன்றி! தொடருங்கள்..

பாரசீக நாட்டில் வாழ்ந்த ஒரு சூஃபிக்கு  பேரழகியான ஒரு மகள் இருந்தாள். எத்தனையோ செல்வந்தர்கள் அந்த அழகியை மணமுடிக்க போட்டியிட்டனர். ஆனால் அந்த சூஃபியோ ஒரு எளிய வணக்கவாளியை அழைத்து தன் மகளுக்கு மணமுடித்தார். தந்தையின் விருப்பத்திற்கு தலை சாய்த்து அந்த ஏழையின் கைப்பிடித்த அப்பெண் தன் கணவனின் குடிலுக்கு அப்போதே புறப்பட்டு சென்றார். இரவானதும் அந்த ஏழை மணமகன் தான் வைத்திருந்த ரொட்டியை தனக்கும் தன் மனைவிக்கும் பங்கு போட ஆரம்பித்தார் அந்த பெண்ணோ அழத் துவங்கினாள். 

Thursday, April 19, 2012

அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்

 கவலைப்பட வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் (9:40)

தவ்ர் மலைக் குகையை எதிரிகள் சூழ்ந்த போது தன்னுடன்  இருந்த நபி(ஸல்) அவர்களுக்கு ஏதும் ஆபத்து வந்து விடுமோ என அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் சிறிது மனக்கலக்கம் அடைந்தார்கள். அந்த வேளையில் நாம் இருவர் மட்டுமல்ல நம்முடன் மூன்றாவதாக அல்லாஹ் இருக்கின்றான் என்று ‘இறைநெருக்கத்தை’(மஈயத்தை)ப் பற்றிய இறைநம்பிக்கையை பெருமானர் நினைவுறுத்திய வாசகம் தான் இது. 

Sunday, April 8, 2012

முஜாஹிர்களும் மன்னிப்பும் - பேரா. இஸ்மாயில் ஹஸனீ


ஆவூரைச் சேர்ந்த மௌலவி A.முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A.MPhil., அவர்கள் எட்டு வருடங்களுக்கு முன் என்னுடன் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தவர். துபாய் கோட்டைபள்ளியில் அற்புதமாக திருக்குர்ஆன் விரிவுரை ஆற்றிக் கொண்டிருந்தார். தற்போது இந்தியாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். மின்னஞ்சல் மூலம் அருமையான கருத்துகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றார். ஈமான் டைம்ஸ் வாயிலாய் அவர் பகிர்ந்து கொண்ட இந்த கட்டுரையை உங்கள் பார்வைக்கு முன் வைக்கின்றேன்.

000