தோழமையுடன்

Showing posts with label கௌதுல் அஃலம். Show all posts
Showing posts with label கௌதுல் அஃலம். Show all posts

Tuesday, July 9, 2013

வார்த்தைகளான கடல்!

 (நபியே!) நீர் கூறுவீராக:
என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக
கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும்,
என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!” (18:109)

இறைவேதமாம் குர்ஆன் மகத்தான இறைவனின் வார்த்தைகள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சங்கை மிகுந்த இதயத்தில் இறங்கியது.

அவர்களது புனித நாவால் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

இன்று நம் கைகளில் இருப்பது
 
மனித மொழியில் வெளிப்பட்ட இறைவனின் பேச்சு.

 வார்த்தைகளான கடல்.

Tuesday, January 4, 2011

சூஃபி ஞான அகமியங்களின் திறவுகோல்


“வீட்டின் வாயிலில் ஏகத்துவ கொள்கையும் (தவ்ஹீதும்) வீட்டுகுக்குள்ளே இணைவைப்பும் (ஷிர்க்கும்) இருப்பின் என்ன பயன்? நாவில் சுத்தமும் உள்ளத்தில் அசுத்தமும் இருந்தென்ன பயன்? வாய் இறைவனுக்கு நன்றி சொல்வதாயும் மனம் இறைவன் மீது குற்றம் காணுவதாயும் இருந்தால் என்ன பயன்?”