நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரி அஸ்மாவுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தாங்கள் கேட்டிருந்த கேள்விக்கு எழுத ஆரம்பித்த பதில் சற்றே நீண்டு விட்டதால் தனி இடுகையாய் பதிந்து விட்டேன்.
முந்தைய காலத்தில் ராபியா பஸரிய்யா ரலியல்லாஹு அன்ஹா போன்ற மகத்தான பெண்மணிகள் மார்க்க சேவையாற்றியுள்ளார்கள். இந்நாளில் பெண்கள் மார்க்க சேவைக்கு வருவது எவ்வளவு மகத்தானது!. அந்த வகையில் உங்கள் மார்க்கப் பற்றும், சேவையையும் மகிழ்ச்சியான ஒன்றாகும். தாங்கள் புல்லாங்குழலுக்கு வருகை தந்ததற்கு கூடுதல் மகிழ்ச்சி! நன்றி!