''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை! என்கிறது இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்.
சுயமாக இருப்பவன். யாராலும் படைக்கப்படாதவன் இறைவன். அப்படி சுயமாக இருக்கும் படைப்பாளன் ஒன்றுக்கு மேல் இருந்திருந்தால் அவர்களிடையே போட்டி நிலவி உலகின் இயக்கத்தில் குழப்பம் விழைந்திருக்கும். அந்த ஒற்றை ஒருவனான ஏகஇறைவனைத் தான் பிரம்மன், கர்த்தர், அல்லாஹ், ஹுதா, God என பல பெயர்களில் அழைக்கின்றோம்.