தோழமையுடன்

Showing posts with label சுவனத் தென்றல். Show all posts
Showing posts with label சுவனத் தென்றல். Show all posts

Wednesday, October 13, 2010

தவ்ஹீத், தஸவ்வுஃப் சில விளக்கங்கள்


தவ்ஹீது என்ற வார்த்தை குர்ஆனிலோ, நபி மொழியிலோ காணப்படவில்லை. முஆத் இப்னு ஜபல் என்ற தோழர் எமன் நாட்டிற்கு கவர்னராக சென்றபோது அந்த மக்களை ஏக இறைவன் பக்கம் அழைக்கச் சொல்லும் வார்த்தையாக “யுவஹ்ஹிது அல்லாஹு” என்ற வார்த்தையை பெருமானார் கூறினார்கள். இந்த ‘யுவஹ்ஹிது’ என்பதிலிருந்து வந்தது தான் தவ்ஹீது என்ற வார்த்தை என்கின்றார் அபு ஆமினா பிலால் பிலிப்ஸ்.