கர்நாடகத்தில் பலிக்காமல் போன மோடி மந்திரம் குஜராத்துக்கு
வெளியே செல்லுபடியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நேரத்தில். ஊதி பெருக்கப்படும் மோடியின் வளர்ச்சி! மந்திரமல்ல கார்பொரேட்
தந்திரம் என்பதை அலசும் திரு. சமஸ் அவர்களின் கட்டுரை (மே 2013, காலச்சுவடு) நன்றிடன்
மீள்பதிவு செய்யப்படுகின்றது.
தலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா,
மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . - இப்படி ஊதிப்
பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக்
கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து
இருக்கிறது.