‘ஹாபிள்’ என்பது இறைவனின் பெயர்களின் ஒன்று. அதற்கு பாதுகாப்பவன் என பொருள். நம் ஞாபகங்களை பாதுகாத்து அவ்வப்போது நமக்கு வழங்குபவன் நம் இறைவன்.
ஞாபகம் இல்லையேல் நமக்கு அறிவு என்பதே இல்லை .
ஒன்றைப் பற்றிய அறிவு இல்லாமல் அதை செய்ய நாட்டம் வராது.
நாட்டம் இல்லாமல் செயல் இல்லை,
ஞாபகம்,அறிவு, நாட்டம், செயல் என்பது ஒரு sequence. ஒரு விதமான தொடரமைப்பு. இவற்றில் முந்தியதும் மூல ஊற்றும் ஞாபகம் தான்.