நாம் வளரும் சூழலுக்கு
ஏற்ப நம்மைப் பற்றியும் நமக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றியும் நம் கருத்துருவாக்கம்
(conception) இன்னும் கொள்கைகள்(idealogy) நமது மனதில் உருவாகின்றன. நமது பெற்றோர்கள்,
ஆசிரியர்கள், நண்பர்கள், கேட்ட பிரசங்கங்கள், படித்த புத்தகங்கள், பார்த்த டி.வி.,
சினிமாக்கள், பழகிய சூழ்நிலைகள், சந்தித்த வெற்றி, தோல்வி அனுபவங்கள் அனைத்திலிருந்தும்
நாம் கற்றுக் கொண்ட அல்லது கற்பித்துக்கொண்ட செய்திகள் மனதில் பிம்பங்களாக பதியப்படுகின்றன.