என் சின்ன வயதில் விரும்பி ரசித்த இலங்கை வானொலியின் பிரபலமான விளம்பரதாரர் நிகழ்ச்சி இது. செம ஹிட்டு அப்ப.
“அங்கிள் எனக்கு மனசே சரியில்லை,” ஒரு சின்ன பாப்பாவின் கொஞ்சும் குரல் சொல்லும். கவலையோடு இருப்பவர்களுக்கும் புன்னகையை வரவழைத்து விடும் வசீகரமான குரல்.
“அப்படி சொல்ல கூடாது பாப்பா. ஸ்டார் பட்டர் டொஃபி சாப்பிடு சரியாயிடும்” என ஆறுதல் அளிக்குகும் பி.ஹெஜ். அப்துல் ஹமீது போன்ற ஒரு கம்பீர குரல்.