கண்பார்வையற்ற ஒரு அறிவு ஜீவி ஒருவன் இருந்தான். நிறங்கள் என்பதே இல்லை என்பது அவனது நம்பிக்கை. யாராவது அவனிடம் சிகப்பு, மஞ்சள் என நிறங்களை விளக்க முயன்றால் “எங்கே சிகப்பு என்பதை என் நாவுக்கு சுவைக்கத் தா!” என்பான். “மஞ்சள் என்பதை என் காதுகளுக்கு உணரச் செய்!” என்பான். யாரும் அவனிடம் வாதம் புரிவதில்லை. அவனைக் கண்டாலே பயந்து தூர ஓடி விடுவார்கள். அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார். அவர் ஒரு மருத்துவரும் கூட. அவரை அவனிடம் அழைத்துச் சென்றார்கள்.