ஜான் பெர்கின்ஸின் இந்த நூலை இரா. முருகவேளின் அற்புதமான மொழிபெயர்பில் விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜான் பெர்கின்ஸ் இந்த புத்தகத்தை வெளியிடுவதானால் தனக்குள்ள ஆபத்தை பற்றி தன் ஒரே மகள் ஜெஸிகாவிடம் பகிர்ந்து கொண்டபோது “கவலைப்பட வேண்டாம் அப்பா!. அவர்கள் உனக்கு முடிவு கட்டினால் நான் தொடர்வேன். உனக்கு ஒரு நாள் பெற்றுத் தரப்போகும் பேரக்குழந்தைகளுக்காகவாவது இதை நாம் செய்தே ஆக வேண்டும்” என்ற ஜெஸிகாவின் வரிகளுக்காகவாது அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.