ஒவ்வொரு முறை இந்தியாவிற்கு
செல்லும் போதும் விமான நிலையத்திலிருந்து துவங்கி ஊர் செல்லும் வரை தொடரும் சுகாதாரமற்ற
சூழல் கூட எனக்கு என் தாய்மண்ணின் என்றும் மாறா அடையாளமாகவும், புழுதியுடன் புரண்டெழுந்த
என் பால்யத்தின் நினைவு சின்னமாக ஒரு மகிழ்வூட்டும் விஷயமாகவே இருந்திருக்கிறது. சுத்தமான சூழலை மனது விரும்பினாலும் அப்படி
சுத்தம், சுகாரத்துடன் பளிச்சென்று இருந்திருந்தால் என் தேசமே எனக்கு அன்னியமாக கூட தோன்றியிருக்கலாம்.
