தோழமையுடன்

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, March 6, 2019

ஒரு வாசகனின் பார்வையில் - ஆபிதீனின் ‘உயிர்த்தலம்’

 உயிர்த்தலம்’ சிறுகதைகளைப் படிக்கும் உங்களுக்கு....

இந்த நூலின் கதைகள் வழமையான சிறுகதை வடிவத்தில் இல்லை. ஒரு நாவலின் சில அத்தியாயங்களைப் போல, ஒரு டயரியின் சில பக்கங்களைப் போல இருக்கிறது என்றெல்லாம் தோன்றினால் அதை சரி எனவும் . சரியில்லை எனவும் சொல்லலாம்.


சரி என்பதற்கு உங்களுக்கு விளக்கம் தேவையில்லை. சரியில்லை என்பதை எப்படி என பார்க்கும் முன்.... 

இந்திரா பார்த்தசாரதியின் ‘ஒரு ரூபாய்’ கதையிலிருந்து சில வரிகள்:

 “மினி-பஸ் என்பது ஒரு சங்கப் பலகை. அது சாந்தினிசௌக் போய்ச் சேருவதற்குள் குறைந்தது நூறு பேராவது அதற்குள் இருப்பார்கள். ஆண்-பெண் அனைவரும் பால் உணர்வு நீங்கிஆத்ம நிலையில் உறவாடும் இடம். வெயிலில் வதங்கிவியர்வையில் அனைவரும் உருகி ஒருவர் மீது ஒருவராய் நிற்கும் போதுஆண்- பெண் உணர்வு எங்கிருந்து வரும்காமத்தைக் கடக்க உதவும் மினி-பஸ் ஒரு தெய்வ சந்நிதானம்சந்தேகமே இல்லை. அல்லது மினி-பஸ் கி.பி 2000ல் இருக்கப்போகும் பாரதமாஎலிப் பொறியில் அகப்பட்ட எலிகள் ஒன்றையன்று அடித்துக் கொண்டு சாகின்றன.

நூறு பேரைச் சுமக்கும் மினிபஸ் என்பதை நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் கூறாகச் சொல்லத் துவங்கி அதையே எதிர்கால பாரதத்தின் குறியீடாக விரிப்பது, இந்திரா பார்த்தசாரதியின் சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் யுக்தி.  

இந்த ஒரு கோணத்தில் இ.பா.வின் version 2.0 என ஆபிதீன் அவர்களை சொல்லலாம்.

புத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து என்பார் ஜெயமோகன். ஆபிதீன் அவர்களின் எழுத்தும் வாழ்வின் நெருக்கடிகளை நகைச்சுவையாக்கிக் கடக்க முயலும் தியானம் தான்.

பரந்த விஷயஞானமும், சுய எள்ளலும், எல்லா புனிதங்களையும் கேள்விக்குள்ளாக்கும் ஹராமித் தனத்தையும் ஒருங்கே கொண்டவை அவரது கதாபாத்திரங்கள்

நாகூரின் வட்டார வழக்கில் எழுதப்பட்ட இந்த version 2.0 வின் சிக்கலும், அழகும் அதன் வட்டார வழக்குத் தான்.

வாழைப்பழம்என்ற ஆபிதீன் நானாவின் கதைக்கு கொள்ளை அழகான எழுத்துக்கு நடுவில் ‘ஆபாசம்’ கலந்து நிற்கிறது என நான் முகநூலில் அங்கலாய்த்திருப்பதற்கு,   வாழைப்பழ கதைக்கே இத்தனை ஆதங்கம் எனில் ஆபிதீனின் ‘தினம் ஒரு பூண்டுக் கதையை  டெட்டாலால் கழுவி விட்டுத்தான் படிப்பீர்களா  என கேள்வி எழுப்பி இருந்தார் Sadayan Sabu.  ( ‘வாழைப்பழம்’,  ‘தினம் ஒரு பூண்டுஇரண்டு கதைகளும் இந்த தொகுப்பில் இருக்கிறது.)

இப்படி எல்லாம் ஏன் இவர் எழுத வேண்டும் கேட்டால்,

"நாட்டில் நடப்பைதை சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டு தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான் வருத்தம்."  என ஜி. நாகராஜன் போல சொல்ல முடியாது.

 ஏனென்றால் ஆபிதீன் அவர்களின் கதைக்களம் வேறு, நாகராஜனின் கதைக்களம் வேறு.        திரு நாகராஜனின் கதைக்களம்  முற்றிலும் மாறுபட்ட உலகம். அந்த சூழலுக்கு அது தேவைப் பட்டிருக்கலாம்.  மேலும், வேறு சிலரைப் போல நரகல் நகைச்சுவையை added attraction ஆகக் கொண்டு தூக்கி நிறுத்த வேண்டிய தேவை ஆபிதீனின் கதைகளுக்கில்லை. அன்றாட வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளை, வாழ்வின் நெருக்கடிகளை நகைச்சுவையாக்கி  எளிமையாகக் கடக்க உத்வேகமளிக்கும் motivation தான் அவர் எழுத்தின் மிகப் பெரிய பலம்.

எங்களைப் போன்ற எளிய வாசகர்களுக்காக ஆபிதீன் அதிகம் எழுத வேண்டும். அதுவும் நாவல் எழுத வேண்டும். அதன் மூலம் வைக்கம் பஷீருக்கு பின் ஏற்பட்ட வெற்றிடத்தை ஓரளவு நிறைவு செய்ய ஆபிதீனால் முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.




உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

Tuesday, May 28, 2013

சிறுகதை - அதன் அகமும் புறமும் - சுந்தர ராமசாமி



 தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில்  சுந்தர ராமசாமி ஆற்றிய உரை ( 25.03.95) நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆர்வம் இருந்தால் எழுதலாம். எல்லோரும் அதைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.அப்படியொரு கட்டாயம்,
சமூகத் தேவை எதுவுமே இல்லை.  சிறுகதை எழுதாமல் சிறந்த பிரஜையாக வாழமுடியும். சிறுகதை எழுதுபவர்களைவிட, படிப்பவர்களைவிட உயர்ந்த மனிதர்களாக அவர்கள் இருக்கவும் கூடும். சிலர் சிறுகதைகள் படிக்காமல் வேறு அற்புதமான நூல்களைப் படித்திருப்பார்கள். சிலர் திருக்குறள் படித்திருப்பார்கள். சிலர் சிலப்பதிகாரம் படித்திருப்பார்கள். கம்பராமாயணம் படித்திருப்பார்கள். நமது தலைவர் திரு. ஹமீத் அவர்களின் தகப்பனார் ஆன செய்க்குத்தம்பிப் பாவலர் இருக்கிறார். மிகப்பெரிய புலவர். இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரிய புலவர்களில் ஒருவர் என்று சொல்லலாம். ஆனால் அவர் சிறுகதையை விரும்பிப் படித்திருப்பாரா என்பது சந்தேகம் தான். அதை வைத்து ஒருவரை நாம் மதிப்பிட முடியாது. 

Friday, October 12, 2012

அல்லாவின் தொழுகையில் நிழலாடும் அனுஷ்காவின் முகம்




‘நஜீர், எனக்கு தொழுகையில் நிண்டா அல்லாட நினைவு வரலை. அனுஷ்காட முகம் தான்டா நினைவுல வருது. ஹாரிஸ் ஜெயராஜுட பாடல் வரிகள் தான் மனசுல ஓடுது. எத்தனையாவது ரக்காயத் தொழுறேன்ங்கிறது கூட பல சமயம் குழப்பமாயிடுதுடா   என்று சொன்ன சாதிக்கிடம் “ நாளைக்கு என் வீட்டுக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரியவங்க வற்றாங்க நீயும் வா. அவர்கள் மூலம் உனக்கு அல்லாஹ் ஒரு நல்ல வழிய காட்டுவான். இன்ஷா அல்லாஹ்” என்றான்.

Thursday, June 21, 2012

என் பெயர் பஷீர் ( நகைச்சுவை கதை)

 “நகைச்சுவையாக எழுதி தாருங்கள் அமீன்” என ஆபிதீன் நானா கேட்டுக் கொண்டதற்காக எழுதப்பட்ட கதை. ‘ஆபிதீன் பக்கங்களில்’ வெளியிடப்பட்டது. 

“சிரிக்க தெரிந்தவர்கள் இந்த கதையை வாசியுங்கள்” என எழுத்தாளர் ஆபிதீன் நானாவும்,  “கோடையின் அவஸ்த்தையிலிருந்து கொஞ்சம் விடுப்பு தந்த சுகத்தை அனுபவித்தேன்” என எழுத்தாளர் தாஜும் பாராட்டிக் கூறியதால் சிற்சில மாற்றங்கள், கூடுதல் சம்பவத்துடன் புல்லாங்குழலில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Wednesday, February 29, 2012

நட்பு எனும் கற்பு


எனக்கு மிகவும்  நெருக்கமான பள்ளித் தோழன் ஸ்டீவன் ராஜ், இந்த அருமையான குட்டி கதையை மின்னஞ்சல் அனுப்பி இருந்தான். 'இருந்தான்' என்பது நெருக்கத்திற்காக மற்றபடி  ஸ்டீவன் ராஜ் மேனேஜ்மென்டில் டாக்டர் பட்டம் பெற்ற, ரயில்வேயில் மேனேஜ்மென்ட் பாடம் எடுக்கும் ஓர் உயர் அதிகாரி.

என்னை மிகவும் யோசிக்கவைத்த படிப்பினையூட்டும் இந்த குட்டிக் கதை உங்கள் சிந்தனைக்கு...

Monday, February 13, 2012

அழியாச்சுடர்கள் ஓர் அறிமுகம் – முள் முடி – தி.ஜானகிராமன்


ஆபிதீன் பக்கங்களின் மூலம் எனக்கு அறிமுகமான சகோதரர் H.ராம்பிரசாத் அவர்களின் அழியாச்சுடர்கள் ஓர் அருமையான இணையத்தளம். அழியாச்சுடர்கள் குறித்து பிரபல எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகமே இலக்கிய ஆர்வலர்களுக்கு இதன் தரத்தை சொல்ல போதுமானது.

Thursday, January 12, 2012

மெலிதாக ஒரு தற்கொலை


ஒரு நடிகை சொன்னாள் : நான் குளித்து கொண்டிருக்கும் போது ஒரு பெரிய அலையில் என் மேலாடை போய் விட்டது. அப்புறம்வெட்கமாய் இருந்துச்சு. கண்ணை மூடி கொண்டு ஓடி வந்துட்டேன்.” 

அஷ்ரஃப் இதற்கெல்லாம் சிரிக்கமாட்டான் என்று தெரிந்தே அந்த ஹைதர் காலத்து நகைச்சுவை துணுக்கை சொன்னான் இக்பால்.

என் மனக்கண்ணை மூடிக் கொண்டு ஓடிய நிர்வாண ஓட்டங்களின் reality என்னை சுடுகிறது இக்பால்என்றான் அஷ்ரஃப்.

Sunday, December 18, 2011

சிறுகதை எழுதுவது எப்படி?



ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்  எழுத துவங்கியபோது என்னை refresh பண்ணிக் கொள்வதற்காக சுஜாதா,ஜெயமோகன் என பலர் சொல்லி காட்டியதிலிருந்து எனக்கு நானே எழுதி கொண்டவை இவை. உங்களில் சிலருக்கும் பயன்படலாம் என்பதால் சுஜாதாவுக்கும், ஜெயமோகனுக்கும் நன்றியுடன் இதை பகிர்ந்து கொள்கின்றேன்.

Saturday, November 19, 2011

இறந்தவர் பேசிய வார்த்தைகள்


நான் எவ்வளவு உரக்க கத்தி பேசினாலும் மனிதர்கள் யாருக்கும் கேட்கப் போவதில்லை. நான் இறந்து போய் எத்தனை காலம் கடந்தது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை இப்போது தான் நான் இறந்து போனேனோ…..

Wednesday, November 16, 2011

கலைந்து போன கனவு ராஜ்ஜியம் –சிதம்பர பிள்ளை சிவக்குமார்


 'ஆபிதீன் பக்கங்களில்' வந்த இந்த சிறுகதையை படிப்பதுடன் கட்டாயமாக அதன் பின்னூட்டங்களையும் அவசியம் படியுங்கள். இலங்கையை சேர்ந்த நம் அன்பு சகோதர சகோதரிகளின் உணர்வுகள் மாம்சம் வார்த்தையானது போல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 


Sunday, September 4, 2011

பயணங்கள்


 திண்ணை.காமில் வந்த என் கதை நன்றியுடன் மீளபதிவு செய்யப்பட்டுள்ளது_ ஒ.நூருல் அமீன்

கடுமையான டிராபிக் ஜாமில் ஹனீஸ்.

எப்படியும் பள்ளிகூடத்தை சென்றடைய குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும்.

+2 கணித தேர்வு இன்னும் 10 நிமிடத்தில் ஆரம்பித்து விடும்.

Thursday, June 23, 2011

ரோல் மாடல் - (சிறு கதை)

செல்போன் சினுங்கியது. ஜமால் போனை எடுத்தான். மறுமுனையில் மனைவி, “ உங்க மக உங்க கூட பேசனுமாம்” என்றாள். மகள் ஆசிகாவின் குரல் ஒலித்தது.
வாப்பா நான் இங்லீஸ் பேச்சு போட்டியிலே ஃபர்ஸ்டா வந்திருக்கேன்....என்ன தலைப்பு தெரியமா? ரோல் மாடல். யார் என் ரோல் மாடல் தெரியுமா நீங்க தான்” என்றாள்.