தோழமையுடன்

Monday, August 15, 2011

அகப்பார்வை - ஓர் அறிமுகம்


மௌலவி டாக்டர் செய்யது மஸ்வூது ஜமாலி முதல்வர், புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி, வண்டலூர், சென்னை அவர்கள் வழங்கிய அணிந்துரை....


‘அகப்பார்வை’  அறிவுப்பூர்வமான அணுகுமுறையைக்  கையாண்டு  வாசகர்களை மெஞ்ஞான ஆழத்தை நோக்கி வழிக்காட்டும் அறிய  ஒரு நூலாக  விளங்குகின்றது. பொதுவாக  அறிவை அதன் ஆழத்திற்க்கு ஏற்ப  பல  படித்தரங்களாக வகைப்படுத்தலாம்.                                                                                          

  1. ஆப்பிள் கீழே விழுந்த செய்தியை அறிந்து கொள்வது ‘Information’.
  2. ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது ? அதன் காரணத்தை அறிவது “Knowledge”.
  3. ஆப்பிளை போல உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் மண்ணுக்குள் சேர்வது             இறை நியதி என்பதைப் புரிந்து கொள்வது “Wisdom”.

மெய்ஞ்ஞானம் ஒர் ஆழமான ஆன்மீக அனுபவம். அந்த அனுபவம் ஏற்படுத்தும் ஆன்மீக உறுதி [Al-yakeen] நம்பிக்கைதான் உன்னதமான இறைஞானம். இந்த மெஞ்ஞானத்தையும் அதன் ஆழத்திற்கு ஏற்ப வகைப்படுத்தபடுவதுண்டு. இதற்கு திருக்குர்ஆன் கையாண்டுள்ள சொற்களையே பயன்படுத்தப்பட்டுள்ளது. 
அவை:
1)  عـلـم الـيـقـيـن (இல்முல் எக்கீன்)
2)  عـيـن الـيـقـيـن  ( ஐனுல் எக்கீன்)
3)  حـق الـيـقـيـن  (ஹக்குல் எக்கீன்)

உதாரணமாக மூடப்பட்ட அறையில் அமர்ந்திருப்பவர் பெறுகின்ற அனுபவத்தை மூன்றாக வரிசைப்படுத்தலாம்.

1.மூடப்பட்ட அறையில் இருந்து கொண்டு வெளியில் மழை பெய்கிறது என்ற செய்தியை அறிந்து கொள்வது. (عـلـم الـيـقـيـن -இல்முல் எக்கீன்)

2.ஜன்னலைத்திறந்து மழையைக் கண்ணால் கண்டு அனுபவிப்பது.( عـيـن الـيـقـيـن  -ஐனுல் எக்கீன்)

3.கதவைத்திறந்து வெளியே வந்து மழையில் நனைந்து அதன்மூலம் பெறும் அனுபவம்.       ( حـق الـيـقـيـن    - ஹக்குல் எக்கீன்)

இதுபோன்ற அனுபவம் ஏற்படுத்துகின்ற நம்பிக்கையையும் அந்த நம்பிக்கையுடன்  ஒருவர் பெறுகின்ற அனுபவங்களையும் வார்த்தையால் அளவிட முடியாது. இதனால்தான் ஆன்மீக  ஞானிகள் எழுதுகோலைவிட அனுபவ பகிர்வையே அதிகம் கையாளுவர்.

இந்த நூல் ஆசிரியர் பல இடங்களில் ஆழமான ஆன்மீக  அனுபவங்களை உதாரணங்கள் மூலம் எளிதாக எடுத்துரைக்கிறார். இது இந்த நூலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன்.

இதயத்தை மூஸா நபியின் அற்புத கோலோடு ஒப்பிடுகிறார். ஆடு, மாடுகளை மேய்ப்பது அதன் வெளிவேஷம் ஆனால் கடலைப்பிளக்கும் அற்புதம் அதில் ஒளிந்து கிடக்கிறது என்று கூறி இதயத்தின் அற்புதத்தை விவரிக்கின்றார்.

இறைவன் தன்பண்புகளை மனிதனுக்கு வழங்கி இருந்தாலும் அவை அவனுக்கு சொந்தமாகி விடாது என்ற கருத்தை “அழகிய வடிவம்” என்னும் அத்தியாயத்தில் ஆசிரியர் விவரிக்கிறார். அது நுகரும் உரிமை (Consumer Right) தான், உரிமைத்தனம் (Ownership) அல்ல என்று கூறி இதை உறுதிப்படுத்த திருக்குர்ஆன் வசனத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

       இந்த நூலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் முக்கியமான வசனங்களுக்கு திருக்குர்ஆன் வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவ்வசனங்களின் விரிவுரையில் சூஃபிகளுக்கே சொந்தமான அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலின் 4,5,6 ஆகிய அத்தியாயங்களில் “ருபூபிய்யத்” தை விளக்குவதற்காக  ஆசிரியர் எடுத்துக்கொண்ட  முயற்சி பாராட்டத்தக்கது. ஆன்மீக  ஞானத்தில் ஆய்வுக்கு  எடுத்துக்கொள்ளப்படும் முக்கிய தலைப்புகளில் ஒன்று “நப்ஸ்”. நப்ஸின் நிலைகள் பற்றியும் அதனை  பண்படுத்தும் வழிமுறை பற்றியும் இந்நூலின் கடைசி  அத்தியாயங்களில் ஆசிரியர் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார். இந்த நூல் தமிழ்கூறும் மக்களை இறை நேசத்தின்பால் அழைக்கிறது.

இந்த அகப்பார்வை எல்லாருக்கும் போய்சேர வேண்டும். இதன் மூலம் இறைநேசம் பல்கிப் பெருக வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன் வஸ்ஸலாம்.

மௌலவி முனைவர் செய்யது மஸ்வூது ஜமாலி.


அகப்பார்வை 1, 2, 3சிந்தனையாளர்களின் சிந்தனை முத்துக்கள்

மானுடம் என்பது இறைவனின் உச்சக்கட்ட படைப்பு. ஆன்மீகம் என்பது மனிதனை முழுமையான மனிதானாக அவன் உன்னத அந்தஸ்த்தில் வாழச்செய்கிறது. அதாவது, வாழ்வின் இயந்திரகதியில் அவன் தொலைத்து விட்ட உன்னத நிலைகளை அவனுக்கு மீட்டுத் தருகின்றது என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. இம்மை, மறுமை வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
பிரபல தொழிலதிபர் P.S.M. ஹபீபுல்லா
நிர்வாக இயக்குனர், CARS ETA, துபாய்
                                                               
நல்ல மனித வாழ்வு என்பது மரணத்தோடு நின்று விடாது. மலர்களைத் தழுவும் தென்றலைப் போல், மனித நேய பண்புகளை மரணத்தையும் தாண்டி மானுடத்திற்கு வசந்தமாய் வீசச் செய்யும்.  முஹம்மது (ஸல்) என்ற மகத்தான மனிதகுல முன்மாதிரி மனிதரின் மானுட வசந்தம் இந்நூலில் சுகந்தமாய் வீசுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் M. அப்துல் ரஹ்மான் M.A.,M.P.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

“அகப்பார்வை”அறிவுப்பூர்வமான அணுகுமுறையைக் கையாண்டு வாசகர்களை மெய்ஞான ஆழத்தை நோக்கி வழிகாட்டும் அரிய நூலாக விளங்குகிறது.
மௌலவி டாக்டர் செய்யது மஸ்வூத் ஜமாலி
முதல்வர், புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி, சென்னை

இந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டால், உலகம் முழுவதும் ஆன்மஞானத்தைப் பரப்பிட ஏதுவாக இருக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
நாடறிந்த அறிஞர் காஞ்சி அப்துல் ரவூப் பாகவி, துபாய்

இஸ்லாமிய சமுதாயத்தவரின் இல்லங்களில் இடம் பெற்றால் குடும்பத்தினர் அனைவரும் அதைப் படித்து அல்லாஹ்வின் சிந்தனையில் தங்களது வாழ்க்கையை ஆக்கிக் கொள்ள உதவியாக இருக்கும்.
ஹாபிஸ், அப்ஸலுல் உலமா அப்துல் ஹமீது ஃபாஸில் பாகவி
ஜமாத்துல் உலமா சபை துபாய் பிரிவின் முன்னாள் தலைவர், துபாய் 

“அகப்பார்வை” ஏக இறையை அறியும் மெய்ஞான ஆன்மீக அறிவை ஆழமாய் உணர்த்தும் ஓர் அரிய, அற்புதமான நூல். சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு ஞான முத்துக் குவியல்.
அதிரை காஸிம் அஹமது மன்சூர் B.A.B.L.,
நிர்வாக அதிகாரி, அரேபியா டாக்ஸி, துபாய்

மன உளைச்சலும், வாழ்க்கையில் பயமும் நம் ஈமானில் ஏற்படும் குறைவின் அறிகுறிகள். இந்நூலைப் படிக்கும் போது ஈமான் புதுப்பிக்கப்பட்டு மன அமைதி கிடைப்பதை உணர முடிகின்றது.
டாக்டர் K.A. முஹம்மது தாஹிர் M.B.B.S.,M.R.C.P.(U.K.)
National Health Service, U.K.
பக்கங்கள் : 146

விலை : ரூபாய் 60

புத்தகம் வேண்டியவர் தொடர்பு கொள்ள: மின்னஞ்சல் : onoorulameen@gmail.com

அலை பேசி எண்

இந்தியாவில்:

 M.குத்புதீன் எண் : 0091-9597555449
 M.ஃபாரிஸ் எண் :  0091-9829275961

துபாயில்:

A.ரிள்வானுல் ஹஸன் : 00971-508535537
Post a Comment