தோழமையுடன்

Saturday, June 26, 2010

ஆலமே அர்வாஹ்!

 
(நபியே!) உம்முடைய ரப்பு (மனித இனத்தின் ஆதி பிதாவான) ஆதமின் மக்களாகிய அவர்களது (தந்தையின் )முதுகுகளிலிருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, ( அவர்களை நோக்கி,) “நான் உங்கள் ரப்பு அல்லவா?” (என்று கேட்டான்) ஆம். “நாங்கள் (அதற்கு) சாட்சி கூறுகின்றோம்” என்று அவர்கள் சாட்சி கூறியதை (நீர் அவர்களுக்கு) நினைவூட்டும், ஏனென்றால் “நிச்சயமாக நாங்கள் இதனை விட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக. (7:172)

ஆலமே அர்வாஹ் என்பது

நம் உடலுடன் கூடிய இந்த வாழ்கைக்கு முந்திய நம் இருப்பு.

நம் அடையாளம் நமக்கு வழங்கப்பட்ட மேடையது.

ஓர் மகத்தான உண்மைக்கு நாம் சாட்சியான காட்சியது.

வடிவங்கள் அற்றவனை எந்த வடிவத்தில் பார்த்தோம்.

இடங்களில் அடங்கா மகத்துவத்தை எங்கே வைத்து பார்த்தோம்.

விவரிக்க முடியாத அந்த பகிரங்கத்தின் மர்மமான அழகை பற்றி யார் தான் விவரிக்க முடியும்.

என்ன ஆச்சர்யம்!

நாம் விழிகளற்ற நிலையில் பார்த்த காட்சி.

என்ன ஆச்சரியம்!

நாம் செவிகளற்ற நிலையில் கேட்ட வார்த்தைகள்.

என்ன ஆச்சரியம்!

நாம் நாவுகளின்றி சொன்ன சாட்சி

பார்க்கும் விழியாய் அவனிருந்து நம்மை பார்க்க வைத்தானோ!

கேட்க்கும் செவியாய் அவனிருந்து நம்மை கேட்க வைத்தானோ!

பேசும் நாவாய் அவனிருந்து நம்மை பேச வைத்தானோ!

எதுவாய் இருந்தாலும் எல்லா புகழும் இறைவனுக்கே!


Post a Comment