தோழமையுடன்

Wednesday, September 12, 2012

ஆன்மீகத்தை வசைபாடும் பெயரில்லாத உங்களுக்கு!

 மாற்று கருத்துகளை வைக்கும் பெயர் வெளிடாத சகோதருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முதலில் ஒரு சின்ன வேண்டுகோள்: குர்ஆன், ஹதீஸின்  பொருளை விருப்பம் போல திரித்து கூறி இஸ்லாமியர்களிடையே கொள்கை குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போலிபெயர்களில் சிலர் உலாவி வரும் நேரத்தில் உங்கள் இஸ்லாமிய அடையாளத்தை - குறைந்தபட்சம் பெயர், மின்னஞ்சல் என்ற அளவிலாவது வெளியிடுங்கள். நீங்கள் வலைத் தளம் வைத்திருப்பவர் என்றால் அதன் முகவரியை தருவது இன்னும் சிறப்பு.


அடையாளத்தை மறைத்து கொள்வதால் தாக்குதல் வார்த்தைகளை சரளமாக பிரயோகிக்கின்றீர்கள். அதனால் உங்கள் பின்னூட்டங்களில் சிலவற்றை வெளிடவில்லை. மேலும் அப்படி வெளிடாத பின்னூட்டங்கள் ஏதும் குர்ஆன், ஹதீஸ் சம்பந்தப்பட்ட கருத்துகள் அல்ல. தஸவ்வுஃப் பற்றிய உங்கள் விளக்கமின்மையால் விளைந்த உங்கள் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு. இவைகளை போன்றவற்றை வெளியிட்டு அதனால் புண்படும் மனங்களின்  உங்கள் பாணியிலான பதிலையும்  பதிவிடத் துவங்கினால். நியாயமான எந்த தெளிவுக்கும் அது வழி வகுக்காது.  

மூஸா நபி பிர்அவ்னின் சபைக்கு செல்லும் போது பிர்அவ்னிடம் கூட சங்கையான வார்த்தைகளில் (கௌலன் கரீமா) கருத்தை எடுத்து சொல்ல உத்தரவிடுகிறது குர்ஆன். கருத்து பகிர்வு ஒரு நல்ல விஷயம். அதன் மூலம் உங்கள் நோக்கம் உணமையை எடுத்துக் கூறி எங்களை தெளிய வைப்பது என்றால் அதை கண்ணியமான முறையில் எடுத்துக் கூறுங்கள். 

 கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் என் சீதேவி சகோ(தரா? தரி?)!

அடுத்து உங்கள் கேள்விகளில் குர்ஆன் ஹதீஸை சம்பந்தப்படுத்தி எங்களை வசைபாடி இருந்த இந்த கருத்தை வெளியிட்டதுடன் நண்பர்கள் நவாஸ், நாகூர் இஸ்மாயில் ஆகியோரின் கருத்துகளையும் தஸவ்வுஃப் சம்பந்தபட்ட பல்வேறு கொள்கை சார்ந்தவர்களின் சில கருத்துகளையும் (அதன் லிங்கை)  புரிதலை வேண்டி நன்றியுடன் முன்வைக்கின்றேன்: 

முதலில் உங்கள் கேள்வி:


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ஆம்! அல்லாஹ்வின் தூதரேஎனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! நீயே சாட்சி!என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி) 

September 11, 2012 9:54 AM

fazhan nawas said...
ஹஜ்ஜதுல் விதாவின் போது யவ்முல் அரபாவில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள், அரபாவில் உரைநிகழ்த்தினார்கள், உரையின் இறுதியில்
கண்களும் கலங்கியவர்களாக ' இறைவனின் செய்தியை நான் உங்களிடம் எத்திவைத்தேனா என்று கேட்டார்கள். அதற்கு சஹாபாக்கள் ஆம் என்று பதில்அளித்தார்கள். வானத்தை பார்த்து இறைவா இதற்கு நீயே சாட்சி என்றார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள், 'எல்லாவற்றையும் நான்; உங்களுக்கு சொல்லிவிட்டேனா என்று நாயகம் அவர்கள் கேட்கவில்ல.

nagoreismail said..
Mr.Mohamed Ismail from Singapore replied to your query :

Bukhari, Volume 1, Book 3, Number 121:
Narrated Abu Huraira:

I have memorized two kinds of knowledge from Allah's Apostle. I have propagated one of them to you and if I propagated the second, then my throat would be cut (i.e. killed).”

On the strenght of what I've read till now, I'm more persuaded by the interpretation that relates the "second kind" of knowledge as a political one, related to the political situation under Yazid.

For example, see this article:
Two Vessels of Knowledge, by Sh. G. F. Haddad - http://www.livingislam.org/n/ahtv_e.html

But, I think of having read the position of Imam Rabbani Shaykh Sirhindi , who relates this "second kind" to spiritual knowledge.

Since I deeply love Shaykh Sirhindi, I'd like to understand this matter,

And please, does anyone have the quotation of Shaykh Sirhindi about this hadith? I didn't manage to find it more!!

Abu Hurayra's Two Vessels of Knowledge
www.livingislam.org


nagoreismail said...
சொல்வதற்கு இரண்டு செய்திகள் இருக்கிறது...

1. பெருமானார் (ஸல்) அவர்கள் எல்லாவற்றையும் சொல்லவில்லை என்பது, அதற்கு காரணம் சொல்ல கூடாது என்பதல்ல.. பெற்றுக் கொள்ள கூடிய பக்குவம் இருந்தால் நிச்சயம் சொல்ல தான் வேண்டும், ஆனால் எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்ல முடியாது,

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய் இந்த ஹதீதை சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன், “மக்களிடம் பேசும் போது அவர்களின் அறிவுக்கு தக்கவாறு பேசுங்கள்..என்று.

பெற்றுக் கொள்ள பக்குவத்தை வளர்த்து கொள்ளாதவர்களிடத்திலே ஆன்மிக அறிவை சொல்வது என்பது பச்சை குழந்தைக்கு மாட்டிறைச்சியை கொடுப்பதற்கு சம்ம் என்று எங்கள் ஹஜ்ரத் (பன்னூலாசிரியர் அப்துல் வஹாப் பாகவி) எழுதியிருக்கிறார்கள்.

இன்னொரு ஹதீதும் இங்கே நினைவு கூறத்தக்கது, “எனக்கு தெரிந்தது எல்லாம் உங்களுக்கு தெரிந்தால் குறைவாக சிரிப்பீர்கள், அதிகமாக அழுவீர்கள்..

அனுபவத்தில் கிடைக்கும் செய்தியை வார்த்தையில் விளக்க முடியாது என்பதை உணரலாம்.

இரண்டாவது செய்தி. அபுஹுரைரா (றலி) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீதில் வருகிறது...பெருமானார் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான அறிவை பெற்றுக் கொண்டோம். பெற்றூக் கொண்டதில் ஒன்றினை உங்களுக்கு தெரியப்படுத்தி விட்டொம், ஆனால் மற்றொன்றை தெரிவித்தால் எங்கள் தொண்டை சங்கு வெட்டி எரியப்படும்..என்று சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டு வகையான அறிவில் பொதுவில் வைக்க வேண்டியதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதை அறிவித்து விட்டார்கள்.

அனுபவித்து பெறக்கூடிய அறிவை பொதுவில் வைத்தால்... வேண்டாம்.. ஒரு மன்சூர் ஹல்லாஜே (றஹ்) போதும்.. உங்கள் இரண்டாவது கேள்வி:

புஹாரியில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு ரகசிய ஞானம் என்று ஒன்று உள்ளதாகக் கூறுகின்றனர்.இந்த ஹதீஸை மட்டும் மேலோட்டமாகக் கவனிக்கும்போது அவர்களின் முடிவு சரியானதென்று சிலருக்குத் தோன்றலாம்.

என்னிடமிருந்து (பெற்ற) சிறு வசனமாக இருந்தாலும், பிறருக்கு சொல்லி விடுங்கள்.(புகாரி) இது நபிமொழி. நபிصلى الله عليه وسلم   எவன் ஒருவன் தான் கற்ற கல்வியை மறைக்கிறானோ, அவனுக்கு நெருப்புக் கடிவாளம் போடப்படும் என்று நபிصلى الله عليه وسلم கல்வியில் ஒரு பகுதியை மறைக்க அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அஞ்சியிருக்கின்றனர். அதை அவர்களே பின் வருமாறு கூறவும் செய்கின்றனர். இந்த வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவாக்கிய பின்னரும் நாம் இறக்கியருளிய தெளிவான வசனங்களையும், நேர்வழியையும் யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்பவர்களும் சபிக்கின்றார்கள் என்று தொடங்கக்கூடிய இரண்டு குர்ஆன் வசனங்கள் இல்லாவிட்டால், நான் எந்த ஒரு ஹதீஸையும் அறிவித்திருக்க மாட்டேன். என்று அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள்.(புகாரி)

மார்க்கத்தின் எந்த ஒரு பகுதியையும் மறைக்க கூடாது என்பதை உணர்ந்து வைத்துள்ள அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ 
அவர்கள் நிச்சயம் மார்க்கத்தை மறைத்திருக்க மாட்டார்கள் என்று உணரலாம். நான் ஒரு பகுதியை சொல்லவில்லை என்று அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியது நிச்சயமாக மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருக்க முடியாது. ஏனெனில் மார்க்க சம்மந்தப்பட்ட எதனையும் மறைக்கக்கூடாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது. அப்படியானால் அவர்கள் மறைத்த விபரங்கள் என்ன?

பிற்காலத்தில் கொடுங்கோல் ஆட்சி நடத்தகூடிய மன்னர்கள் அவர்களின் காலம், போன்றவைகளை முன்னறிவுப்பாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
அவர்களுக்குச் சொல்லி இருந்தனர். அவற்றை வெளிப்படுத்தினால், ஆட்சியாளர்களால் தமக்கு ஆபத்து நேரலாம் என்பதற்காக அவற்றை அபூஹுரைரா  ரகசிய ஞானத்தை அவர்கள் மறைத்து வைத்து இருந்தார்கள் என்று கருத இந்த ஹதீஸில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஒரு வாதத்துக்காக ரகசிய ஞானத்தைத் தான் மறைத்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் முரீது வியாபாரிகளுக்கு இதில் ஆதாரம் எதுவுமில்லை.

அவர்கள் கருத்துப்படி நபி صلى الله عليه وسلم அவர்கள் அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
அவர்களுக்கு ரகசிய ஞானத்தைத் கற்றுக் கொடுத்திருந்தனர் என்று வைத்துக்கொண்டால் அந்த ரகசிய ஞானத்தை அபூஹுரைரா ரகசிய ஞானம் இருப்பதாக வைத்துக் கொண்டால் அது அபூஹுரரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.அவர்கள் எவரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டுச் சென்று விட்ட நிலையில் வேறு எவருக்கும் அது தெரிவதற்கு எவ்வித முகாந்திரமுமில்லை.

அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு மட்டும் நபி صلى الله عليه وسلم அவர்கள் ரகசிய ஞானம் கற்றுக் கொடுத்திருந்தனர், அவர்கள் வழியாக தொடர்ந்து அந்த ரகசிய ஞானம் ஷேக்குகளுக்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்பது ரகசிய ஞானக்காரர்களின் இரண்டாவது ஆதாரம். மனிதர்களை வழி கெடுப்பதற்காக என்றே இஸ்லாத்தில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட அத்தனை தரீக்காக்களும், அலி குர்ஆனில் இல்லாத (விஷேச) ஞானம் எதுவும் உங்களிடம் உண்டோ? என்று நான் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விளங்குவதில் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படுகின்ற ஞானத்தைத் தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களிடமில்லை. இதோ(என் கையில்) உள்ள இந்த ஏட்டின் உள்ளவற்றையும் தவிர வேறு எதுவுமில்லை, என்று கூறினார்கள். ஏட்டில் உள்ளது என்னவென்று நான் கேட்டபோது அதையும் சொல்லிவிட்டார்கள். நஷ்ட ஈடு பற்றிய சட்டங்கள், கைதிகளை விடுதலை செய்வது போன்ற சட்டங்கள் இவைதான் அந்த ஏட்டில் உள்ளவை என்றும் கூறிவிட்டார்கள் (அறிவிப்பவர்:அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி)

அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களே தன்னிடம் ரகசிய ஞானம் எதுவுமில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதன் பின்னரும் ரகசிய ஞானம் உள்ளது என்று கூறி ஷேக்குகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முனாபிக்களின் பெயர் பட்டியலை ஹுதைபதுல் யமானرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு நபிصلى الله عليه وسلم   இது போன்ற பிரச்சனைகளில் சிலவற்றைத் தான் சிலரிடம் ரகசியமாக சொல்லி இருந்தனர். இவர்கள் நினைப்பது போல் ரகசிய ஞானம் என்று எதனையும் சிலருக்கு மட்டும் குறிப்பாகச் சொல்லித்தரவில்லை. மக்களை ஆட்டு மந்தைகளாகக் கருதிக் கொண்டு தங்களுக்கு மட்டுமே எல்லாம் விளங்கும் என்று அகந்தை கொண்ட போலிகளின் பேச்சில் ஏமாற வேண்டாம்.

விளக்கங்கள்:

1.    அபுஹுரைரா அவர்களின் ஹதீஸிலிருந்து நீங்கள் எல்லா ஞானங்களை எல்லோருக்கும் பெருமானார் ஒரே மாதிரியாக வழங்கவில்லை என்பதை தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள்.

2.   அபுஹுரைரா(ரலி) அவர்களின் ஹதீஸும் தஸவ்வுஃப் என்ற கலைக்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றது. ஒரு வாதத்திற்காக இந்த ஹதீஸையே எடுத்து கொள்ளாவிட்டாலும் கூட அறிந்து கொள்ளுங்கள்  தஸவ்வுஃபின் அடிப்படையே ஹதிஸே ஜிப்ரயீல் எனப்படும் இஹ்சான் சம்பந்தப்பட்ட ஹதீஸாகும். இதன் விளக்கம் தாங்கள் அறிந்திருக்கிறீர்களா? என்பதை சிந்திக்க வேண்டுகின்றேன். இந்த சுட்டியை பார்வையிட உங்களை அழைக்கின்றேன் யார் அந்த வினோத மனிதர்?

 

3.  தஸவ்வுப் பற்றி ஆய்வு செய்த தஸவ்வுஃபை சாராத அறிஞர் கலாநிதி சுக்ரி அவர்களின் இந்த கட்டுரையையும் படித்து பாருங்கள். தஸவ்வுப் - அதன் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள் 

4.    அலி (ரலி) அவர்களின் வழியாக வந்த ஞானம் குர் ஆன், ஹதீஸுக்கு மாற்றமானது அல்ல என்பதைத் தான் அபுஹுரைராவைக் கொண்டு நீங்கள் கூறும் ஹதீஸ் அறிவிக்கிறது. குர்ஆன் கூறும் ஏகத்துவ மெய்ஞானம் ஓர் எளிய விளக்கம்  என்ற கட்டுரையின் கீழ் உங்கள் கருத்தை பதிந்திருக்கின்றீர்கள். அந்த கட்டுரையில் உள்ளவை குர்ஆன், ஹதீஸிலிருந்து தானே எழுதப்பட்டிருக்கிறது. அதைப்பற்றிய உங்கள் விளக்கம் என்ன என்பதை சிந்தித்து பாருங்கள்.

5.    நாம் ஒரு கருத்தை முன் வைக்கும் போதும், எதிர் கருத்தை முன்வைக்கும் போதும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி செய்தால் தேவையற்ற ஃபத்வாக்கள், மனோஇச்சையின் படியான சர்ச்சைகள் இல்லாமல் போகக்கூடும் இன்ஷா அல்லாஹ். நம் உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வுடனும் செயல்படும் இறைஞானத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்வானாக! ஆமீன்.

படித்துவிட்டு ஒரு கருத்தும் கூறாத பலருக்கு மத்தியில் எதிர்கருத்தாயிருந்தாலும் அதை பதிவு செய்யும் உங்கள் செயலை நான் ஒரு வகையில் நன்றியுடன் வரவேற்கின்றேன். அல்லாஹ்விடம் உங்களுக்காக துவா செய்கின்றேன். நீங்களும் எனக்காக துவா செய்யுங்கள்.   

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment