தோழமையுடன்

Thursday, September 6, 2012

முரீது எனும் ஆன்மீகப் பயணி Vs. ஷைத்தான்

 நீங்கள்லாம் முரீது முரீதுன்னு சொல்றீங்களே  அதுக்கு என்ன அர்த்தம் என்பது ஒரு FAQ (Frequently Asked Question).
 
முரீது என்ற வார்த்தை இராதத் என்பதிலிருந்து வந்தது. இராதத் என்றால் நாட்டம் என பொருள்.

முரீது என்றால் நாடக் கூடியவர் ன்பது பொருள்.

எதை நாடக் கூடியவர்?

செய்யதுனா கௌதுல்அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி(ரலி) அவர்கள் நாடக்கூடியவரை குர்ஆனில் மூன்று வகையாக கூறப்பட்டிருக்கிறது என வகைப்படுத்துகிறார்கள்.


யுரீதுத் துன்யாஉலகை நாடக் கூடியவர்.

யுரீதுல் ஆஹிராமறுமையை நாடக் கூடியவர்.

யுரீது  வஜ்ஹஹுஇறைத் திருமுகத்தை நாடக்கூடியவர்.

இதில் இறைவனை முன்னோக்கி தன் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொண்ட மூன்றாவது வகையினரைத் தான் ‘தரீக்கா’ எனும் ஆன்மீகப்பாதையில் முரீது என்ற சொல்லால் குறிப்பிடபடுகின்றது

எங்கள் ஷெய்குனாஃபைஜீஷாஹ் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வை பற்றிய ஞானத்தை (மஆரிபத்துல்லாஹ்) தெரிந்து கொள்ளுபவர். ஷைத்தானைப் பற்றிய ஞானம் (மஆரிபத்துஷ்ஷைத்தான்) தனையும் தெரிந்து கொள்ள வேண்டும்என்பார்கள். அதை பல அருமையான குட்டி கதைகள் மூலம் எளிமையாக விளக்குவார்கள்.

அவைகளில் இரண்டு கதைகள். வார்த்தைக்கு வார்த்தை அவர்கள் சொன்னதை என்னால் repeat பண்ண முடியவில்லை. ஆகவே எனது பாணியில் உங்கள்  முன்வைக்கின்றேன்.

கதை 1 :

ஒரு முரீது காட்டு வழியே போய் கொண்டிருந்தார். அங்கே ஒரு வியாபாரி கடிவாளங்களை விற்றுக் கொண்டிருந்தார். அவரை நெருங்கிய முரீது,
பெரியவரே! இந்த காட்டுல இதை விற்றால் யாரு வாங்குவார்கள்? ஊருக்குள்ளே போய் கடை போடலாமேஎன்றார்.

அந்த வியாபாரி, “என் பெயர் ஷைத்தான். அல்லாஹ்வின் பாதையில் பயணிப்பவரை என் பக்கம் இழுக்கவே இந்த கடிவாளம். ஒவ்வொருவருக்கும் ஒரு கடிவாளம் வச்சிருக்கேன்என்றான் நமட்டு சிரிப்புடன்.

அட அவனா நீ. நான் யாரு தெரியுமா? இன்ன பெரிய ஷெய்கின் முரீது. எனக்கு ஏதும் கடிவாளம் இருக்கா உன் கிட்டஎன்றார்.

எவ்வளவு பெரிய ஷெய்குடைய சீடர் நீங்க. உங்களுக்கெல்லாம் நான் கடிவாளம் போட முடியுமா?” என ஷைத்தான்அடக்கமாக சொல்லவே,

முரீது மனம்மகிழ்ந்து, “அது தானே பார்த்தேன். என்கிட்டெல்லாம் உன் பாச்சா பலிக்காதுஎன்றார்

சரி நீங்க போங்கஎன ஷைத்தான் சொல்லவே அவர் நடையை கட்டினார்
 சிறிது தூரம் தான் சென்றிருப்பார் ஷைத்தான் அவரை கைத்தட்டி அழைத்தான். முரீது அவன் கிட்ட வந்தார். “சரி, சரி நீஙக போங்கஎன்றான். அவர் தன் பயணத்தை தொடங்க எத்தனிக்கையில் மீண்டும் அவரை அழைத்தான். அவர் ஷைத்தானை நெருங்கிஏன்டா பயலே! ஏன் சும்மா சும்மா கூப்பிடுறே? எனக்கு ஏதும் புது கடிவாளம் கண்டு புடிச்சிட்டியோ ?” என கோபமாக கேட்டார்.

இல்லை. இல்லைஎன அவன் பணிவுடன் உடனே மறுத்தான்.

அப்ப ஏன்டா என்னை கூப்பிட்டேஎன கேட்டார்.

ஒரு விசயத்தை சொல்லத் தான் கூப்பிட்டேன்என்றான்

சொல்லு. சொல்லு.” என்றார் கம்பீரமாக.

ஷைத்தான் சொன்னான், “ நான் வான்னு சொன்னா வற்றீங்க. போன்னு சொன்ன போறீங்க. உங்களை இழுக்க  கடிவாளமே தேவையில்லையேஎன்று சிரித்தான்.

பி.கு :  ஷெய்கின் சகவாசமும், அவர்கள் தரும் பயிற்சியும் கொண்டு அகப்பெருமையை சன்னம் சன்னமாக நீக்கத் வேண்டும். அதை விடுத்து ஷெய்கின் அந்தஸ்த்தை  மட்டும் பெருமையடித்து கொண்டு நம் அகப்பெருமையை வளர்ப்பது எத்தனை ஆபத்து என்பதை இந்த கதை சுட்டி காட்டுகிறது.

கதை 2

ஷைத்தான் நம்மை வழி நடத்தும் இன்னொரு கதை.

பள்ளிவாசலில் ஒரு பெரிய மார்க்க அறிஞர் சொற்பொழிவாற்றினார். கேட்டவர்கள் எல்லாம் சொக்கி போய் விட்டார்கள். சொற்பொழிவு முடிந்ததும். நான், நீ என அவரை சூழ்ந்து கொண்டு அவரது கையை பிடித்து முத்தம் போட்டார்கள். மார்க்க சட்டபடி அல்லாஹ், ரஸூலின் போதனைக்காக சங்கை செய்பவருக்கு வசதியாக கையை கொடுக்க வேண்டுமல்லவா? 

அவரும் இரண்டு பக்கமும் கையை நீட்டி அவர்களுக்கு வசதியாக தந்தார்.
நெருங்க முடியாதவர்கள் அவர் ஜுப்பாவை, மேலே போட்டிருந்த சால்வையை என எது கையில் கிடைக்கிறதோ அதை தொட்டு முத்திக் கொண்டார்கள். அப்படியே ஜனத் திரளுடன் வாசல் வரை வந்தவர் பெருமிதத்தால் உள்ளம் பூரித்து நின்றார்.

அங்கே ஓரத்தில் ஒருவர் நின்று கொண்டுகையைத் தாருங்கள் நானும் முத்தமிட வேண்டும்என கேட்க, “ யாருயா நீ, இத்தனை பேரு போட்டி போட்டுக் கொண்டு என் கையை முத்தமிடும் போது. நீ மட்டும் திமிரா ஒரு மூலையிலே நின்றுகிட்டு என்னை கூப்பிடுறேஎன கோபமாக கேட்டார்.

ஹஜ்ரத்! என் பெயர் ஷைத்தான். நீங்க அவங்க கிட்ட பெருமையாக முத்தமிட கையை குடுத்துகிட்டு இருந்த போதெல்லாம் ஒரு நிமிசம் கூட உங்களை விட்டு பிரியாமல் நான் உங்க கூடத் தானே இருந்தேன். இணைபிரியாத என்னை போய் யாருன்னு கேட்கிறீங்களே ஹஜ்ரத்! ” என்று சிரித்தான்.

0 0 0 0

يَا أَيُّهَا النَّاسُ أَنتُمُ الْفُقَرَاء إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

“மனிதர்களே நீங்கள் (எல்லா நிலையிலும், எல்லா விஷயங்களிலும்) அல்லாஹ்வின்பால் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ (எக்காலத்திலும், எவரிடத்திலும்) தேவையற்றவனாகவும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்”. (35:15)

இந்த இறைவசனத்தில் வரும் ‘ஃபுகராவு இலல்லாஹ்’ என்பது உள்ளமை(Existence), பண்புகள், செயல்படும் சக்தி, பொருளாதார ஆதிக்கம் என எதுவுமே ஒரு வினாடி கூட எனக்கு சொந்தமில்லை என இடைவிடாமல் என்றும், எங்கும்  இறைவன் பக்கம் தேவையுறுபவர் தான் முரீது (யுரீது வஜ்ஹஹு) என்ற சொல்லுக்கு தகுதியானவர். ஏகத்துவ மெய்ஞானம் தான் அத்தகைய முரீதின் அடிப்படை கல்வி.




உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

22 comments:

Shafiyath Rani said...

அருமையான ,,நெத்தியடியான ,,கருத்துக்களை கொண்ட கதை,,,

பெருமை என்னும்ஷைதானை எந்த அளவு,,,அறிவாளிகளும்,,
ஆன்மீக வாதிகளும் ,,பற்றி பிடித்துக் கொண்டிருக்கிறோம்
என்பதற்கு சரியான உதாரண கதை தான்!

இப்படி அடிக்கடி சாட்டையடி கொடுத்து,,,எங்களிடம் ,,இந்த பெருமை என்னும்
(சிறுமை ) ஷைத்தான் அன்ட விடாமல் பாதுகாத்துக்கொள்ள ,,வேண்டுகிறோம்
சகோதரரே ! நூருல் அமீன்!!'

ஜசாகல்லாஹு ஹைரன்!

nagoreismail said...

Consider how wool is turned into an elegantly designed carpet by coming into contact with an intelligent person. See how dirt can be turned into a fine palace by coming into contact with an intelligent person.

If association with the intelligent has such an effect on inanimate objects, think what effect will be when one seeker of God associate with another!

- Rumi, from The Rumi Collection by Editor, Kabir Helminski

புல்லாங்குழல் said...

சகோதரி ஷபியத் ராணி, சகோதரர் நாகூர் இஸ்மாயில் உங்கள் இருவரின் கருத்துக்கும் நன்றி!அல்ஹம்துலில்லாஹ்.

Unknown said...

Alhamdhulillah seithanudaya sestaigal avasiam ariyavendum ovaruvarum sukriya.

Unknown said...

manithargalukku ullathil thondrum selavisayangal seithan purathiliruntha ALLAH purathiliruntha endru ariya vendumanal kandipaga pullangulal padikkavendum

புல்லாங்குழல் said...

ஷாஹுலின் கருத்தை துவா எனவே கருதுகின்றேன். அல்லாஹ் நம் நல்ல நிய்யத்தை ஏற்றருள்வானாக! ஆமீன்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் ( வ ரஹ்)

"யுரீது வஜ்ஹஹு – இறைத் திருமுகத்தை நாடக்கூடியவர்.

இதில் இறைவனை முன்னோக்கி தன் வாழ்க்கை பயணத்தைஅமைத்துக் கொண்ட மூன்றாவது வகையினரைத் தான் ‘தரீக்கா’ எனும் ஆன்மீகப்பாதையில் ‘முரீது’ என்ற சொல்லால்குறிப்பிடபடுகின்றது."

அத்தகய உண்மை முரீதாக நம் அனைவரும் வாழ கூடிய பாக்கியத்தை கருணை கடலான ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக (ஆமீன்) வாஸ்தா செய்யதி வா முர்ஷிதி ,

முஹம்மத் யாஸீன் பைஜி

புல்லாங்குழல் said...

ஆமீன். ஜஸாக்கல்லாஹ் ஹைர். யாஸின் ஃபைஜி உங்கள் துவாவுக்கு நன்றி!

M.Abdul Khadar said...

முரீது.. கேள்வி, பதில் உங்கள் தளத்திற்கு பொருத்தமானது.அல்ஹம்துலில்லாஹ்! நல்ல விளக்கம். தொடருங்கள். நடப்பு என்ன என்றால் கொள்கையைப் பற்றி கேட்கப்படும்.கிடைக்கும் விளக்கம் மனசாட்சிக்கு பிடிக்கும்.அப்புறம், பதிலில் உள்ளபடியேவா முரீதுகள் இருக்கிறார்கள் என்று சில நடப்புகளைக் காட்டி செயல்பாட்டு முறையை பற்றிய கிளைக் கேள்விகள் எழுப்பப்படும்.(அழகிய)பொறுமை உங்களுக்கு இருக்கிறது. அனைத்துக்கும் பதில் சொல்லுங்கள்.

Anonymous said...

salam

cute yasar said...

Allahuthaalaavin thirumuhathai naadiyavarhalaaha vaazhakoodiya baakiyathai allahuthaala nam anaivarukkum thandharulvaanaaha..

Anonymous said...

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் ‘நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே’ எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! நீயே சாட்சி!’ என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)

fazhan nawas said...

ஹஜ்ஜதுல் விதாவின் போது யவ்முல் அரபாவில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள், அரபாவில் உரைநிகழ்த்தினார்கள், உரையின் இறுதியில்
கண்களும் கலங்கியவர்களாக ' இறைவனின் செய்தியை நான் உங்களிடம் எத்திவைத்தேனா என்று கேட்டார்கள். அதற்கு சஹாபாக்கள் ஆம் என்று பதில்அளித்தார்கள். வானத்தை பார்த்து இறைவா இதற்கு நீயே சாட்சி என்றார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள், 'எல்லாவற்றையும் நான்; உங்களுக்கு சொல்லிவிட்டேனா என்று நாயகம் அவர்கள் கேட்கவில்லை

புல்லாங்குழல் said...

Dear Mr.Anonymous, Mr.Mohamed Ismail from Singapore replied to your query :

Bukhari, Volume 1, Book 3, Number 121:
Narrated Abu Huraira:

I have memorized two kinds of knowledge from Allah's Apostle. I have propagated one of them to you and if I propagated the second, then my throat would be cut (i.e. killed).”

O
n the strenght of what I've read till now, I'm more persuaded by the interpretation that relates the "second kind" of knowledge as a political one, related to the political situation under Yazid.

For example, see this article:
Two Vessels of Knowledge, by Sh. G. F. Haddad - http://www.livingislam.org/n/ahtv_e.html

But, I think of having read the position of Imam Rabbani Shaykh Sirhindi , who relates this "second kind" to spiritual knowledge.

Since I deeply love Shaykh Sirhindi, I'd like to understand this matter,

And please, does anyone have the quotation of Shaykh Sirhindi about this hadith? I didn't manage to find it more!!

Abu Hurayra's Two Vessels of Knowledge
www.livingislam.org

http://www.facebook.com/mohamed.ismail.31924

nagoreismail said...

சொல்வதற்கு இரண்டு செய்திகள் இருக்கிறது...

1. பெருமானார் (ஸல்) அவர்கள் எல்லாவற்றையும் சொல்லவில்லை என்பது, அதற்கு காரணம் சொல்ல கூடாது என்பதல்ல.. பெற்றுக் கொள்ள கூடிய பக்குவம் இருந்தால் நிச்சயம் சொல்ல தான் வேண்டும், ஆனால் எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்ல முடியாது,

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய் இந்த ஹதீதை சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன், “மக்களிடம் பேசும் போது அவர்களின் அறிவுக்கு தக்கவாறு பேசுங்கள்..” என்று.

பெற்றுக் கொள்ள பக்குவத்தை வளர்த்து கொள்ளாதவர்களிடத்திலே ஆன்மிக அறிவை சொல்வது என்பது பச்சை குழந்தைக்கு மாட்டிறைச்சியை கொடுப்பதற்கு சம்ம் என்று எங்கள் ஹஜ்ரத் எழுதியிருக்கிறார்கள்.

இன்னொரு ஹதீதும் இங்கே நினைவு கூறத்தக்கது, “எனக்கு தெரிந்தது எல்லாம் உங்களுக்கு தெரிந்தால் குறைவாக சிரிப்பீர்கள், அதிகமாக அழுவீர்கள்..”

அனுபவத்தில் கிடைக்கும் செய்தியை வார்த்தையில் விளக்க முடியாது என்பதை உணரலாம்.

இரண்டாவது செய்தி. அபுஹுரைரா (றலி) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீதில் வருகிறது... “பெருமானார் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான அறிவை பெற்றுக் கொண்டோம். பெற்றூக் கொண்டதில் ஒன்றினை உங்களுக்கு தெரியப்படுத்தி விட்டொம், ஆனால் மற்றொன்றை தெரிவித்தால் எங்கள் தொண்டை சங்கு வெட்டி எரியப்படும்..” என்று சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டு வகையான அறிவில் பொதுவில் வைக்க வேண்டியதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதை அறிவித்து விட்டார்கள்.

அனுபவித்து பெறக்கூடிய அறிவை பொதுவில் வைத்தால்... வேண்டாம்.. ஒரு மன்சூர் ஹல்லாஜே (றஹ்) போதும்..

HM Rashid said...

//அனுபவித்து பெறக்கூடிய அறிவை பொதுவில் வைத்தால்... வேண்டாம்.. ஒரு மன்சூர் ஹல்லாஜே (றஹ்) போதும்..//Exactly...

Anonymous said...

ASSALAMU ALAIKKUM. DAWOOD FAIZI FROM KL.
AL HAMDULILLAH.
ORU ALAGAANA VILAKKAM.
ARIVAALIGAL PURINTHU KOLVAARGAL.
MAY ALLAH SWT. BLESS US.
AAMEEN.

புல்லாங்குழல் said...

ஷெய்கின் சகவாசமும், அவர்கள் தரும் பயிற்சியும் கொண்டு அகப்பெருமையை சன்னம் சன்னமாக நீக்கத் வேண்டும். அதை விடுத்து ஷெய்கின் அந்தஸ்த்தை மட்டும் பெருமையடித்து கொண்டு நம் அகப்பெருமையை வளர்ப்பது எத்தனை ஆபத்து என்பதை இந்த கதை (எண் 1) சுட்டி காட்டுகிறது.

இதை எதிர்மறையாக பொருளெடுத்த சகோ.நாசர்
இதைப் போன்ற எதிர்மறை கருத்துகளை புறக்கணிக்க சொன்ன சகோ.ஷாஹுல் ஹமீது
இதைப் போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதும் ஒரு அகப்பெருமையின் விளவே என்பதை குறிப்பால் சுட்டிக்காட்டிய சகோ. நாகூர் இஸ்மாயில் மூவருக்கும் என் நன்றி. ஜஸாகல்லா ஹைர்.

ஒவ்வொரு சூரத்திலும் அல்லாஹ்வே நமக்கு பாடம் கற்பிக்கின்றான்.

"اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين،
وأصلح لي شأني كله، لا إله إلا أنت"

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் “யாஅல்லாஹ் உன் ரஹ்மத்தில் ஆதரவு வைக்கின்றேன்.கண் இமை மூடும் நேரம் கூட என் நப்ஸிடம் என்னை ஒப்படைத்து விடாதிருப்பாயாக! என்னுடய காரியம் அது ஒவ்வொன்றையும் எனக்குச் சீராக்கி வைப்பாயாக!. (தேவைகளை நிறைவேற்றக் கூடிய) இலாஹ் உன்னைத் தவிர யாருமில்லை ” என துஆ கேட்பவர்களாக இருந்தார்கள். (அபுதாவுது, அஹ்மது பார்க்க முஸ்லிமின் அரண் பக்கம் 83).

அல்லாஹ் அத்தகைய பாதுகாவலை பெருமானாரின் பொருட்டால் நமக்கும் தருவானாக! ஆமீன்!

Unknown said...

மாஷா அல்லாஹ்..................

Anonymous said...

ASSALAMU ALAIKKUM.......

During 80's I was one of the early "mureed" of FaizeeShah. I used to accompany with him for doing service when he used to stay at Mandhaveli, Chennai in KIBS house. When I came to Saudi and discussed about "Mureed" with some renowned Saudi scholars, I understand that this is not allowed in Islam, and I corrected myself. Please don't follow this stupid things and live as per "Kalimah" to be a "true" muslim.

புல்லாங்குழல் said...

பெயரை வெளியிடாத உங்களுக்கு,

வஅலைக்கும் ஸலாம். நீங்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களை உங்கள் renowned Saudi scholars பட்டியலில் சேர்த்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் சொல்லுகிறார்கள்:- “ யார் மார்க்க சட்டதிட்டங்களை படித்து கொண்டார். இறைஞானங்களை படிக்கவில்லையோ அவர் (ஜிந்திக்) வழிகெட்டவராகி விட்டார், யார் இறைஞானம் மட்டும் படித்துக் கொண்டார் ஆனால் போதுமான அளவு மார்க்க சட்டங்களை படிக்கைல்லையோ அவர் பாவியாகிவிட்டார். யார் இரண்டையும் படித்துக் கொண்டாரோ அவர்தான் சரியான பாதையில் செல்கிறார். (மிர்காத் ஷரஹ் மிஷ்காத்).

Anonymous said...

alhamdulilah..