தோழமையுடன்

Friday, February 15, 2013

சில நேரங்களில் பல மனிதர்கள்!



என் ஆறாம் வகுப்பு படிக்கும் சின்ன மகளுக்கு என்னால் சொல்லிக்காட்ட முடியாத இந்த செய்தியை சகோதரி அனோஷ்கா ரவிஷங்கரின் வார்த்தைகள் மூலம் பகிர்ந்து கொள்கின்றேன். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுடன் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற கோரிக்கையுடன்:



அனோஷ்காவின் செய்தி:


டெல்லி: சிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்குள்ளானேன் என்று கூறியுள்ளார் மறைந்த சிதார் மேதை ரவிசங்கரின் மகள் அனோஷ்கா. உலக பெண்கள் உரிமைப் பிரசார இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார் அனோஷ்கா. அதில்தான் இந்த பரபரப்புத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். தனது குடும்ப நண்பர் ஒருவரால் தான் சிறுமியாக இருக்கும்போது பலமுறை பாலியல் ரீதியான தொல்லைகளுக்குள்ளானதாக அவர் கூறியுள்ளார்

 இதுகுறித்து அவர் கூறுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். அந்த எண்ணத்தில்தான் எனது ஆதரவைத் தெரிவிக்க முன்வந்தேன். எனது இந்த ஆதரவுச் செய்தியை, டெல்லியில் டிசம்பர் 16ம் தேதி ஓடும் பேருந்தில் காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகாயமடைந்து பின்னர் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு சமர்ப்பிக்கிறேன்.

நானும் கூட சிறு வயதில், சிறுமியாக இருந்தபோது பாலியல் தொல்லைக்குள்ளாவள்தான். பல ஆண்டுகள் எனது குடும்ப நண்பர் ஒருவரால் நான் பாலியல் தொல்லைக்குள்ளானேன். அவர் மீது எனது குடும்பத்தினர், எனது பெற்றோர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அதை அவர் மீறி நடந்து கொண்டார். எல்லாப் பெண்களுமே ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட தொல்லைகளில் சிக்க நேரிடும் என்பதை பின்னர் உணர்ந்தேன்.

அந்தரங்கப் பகுதிகளில் தொடுவது, தடவுவது, கிள்ளுவது, வார்த்தைகளில் ஆபாசம் கலந்து பேசுவது போன்றவை பெண்களுக்கு எதிராக பெருமளவில் நடைபெறும் வக்கிரச் செயல்களாகும். அப்போது இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. எனவே என்னால் எதிர்க்க முடியவில்லை. இப்போது நான் வளர்ந்து விட்டேன். கடந்த காலத்தை மறந்து விட முயல்கிறேன். இப்போது பாலியல் வன்முறைகள் குறித்து நன்றாக தெரிகிறது. எனவே அதற்கு எதிராக குரல் கொடுக்கிறேன். என்னைப் போல அத்தனை பெண்களும் கிளர்ந்தெழ வேண்டும். இந்தியப் பெண்கள் அனைவருக்கும் ஆதரவாக நான் இருக்கிறேன் என்றார் அனோஷ்கா. அனோஷ்காவும் சிதார் கலைஞர்தான். அமெரிக்காவில் பிறந்த இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

0 0 0 0

சில நேரங்களில் பல மனிதர்கள்!


 கூடுதலாக சில தகவல்கள்:

பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர். இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15% பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர்.

குடும்ப உறுப்பினர்களால் பாதிப்பு : 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42% பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.

நன்றி: ஒன் இந்தியா (14.02.2013)

இதை படித்ததும் என் குருநாதர் ஃபைஜிஷாஹ் (ரஹ்) அவர்கள் ஓதிப்பார்க்க கூடிய கண்ணியமான மார்க்க அறிஞர்களிடம்(ஆலிம்களிடம்), ”மூன்று வயது பெண் குழந்தையாக இருந்தாலும் அதன் தலையில் கைவைத்து ஓதிப்பார்க்கக் கூடாதுஎன உபதேசித்தது  நினைவில் வந்தது.

கூடவே பழைய படம் ஒன்றில் வந்த ஒரு நகைச்சுவை காட்சியும் ஞாபகத்திற்கு வந்தது. அதில் “வளர்த்த கடா மார்பிலே பாய்ஞ்டுச்சே!” ன்னு ஒருவர் சொல்லுவார். அதற்கு நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், “இதுக்குன்னு அடுத்த வீட்டு கடாவா வரும்” என்பார்.

பொதுவாக நாம் நல்லவர்கள் தான். ஆனால் சில சந்தர்பங்களில் நம் எண்ணங்கள், செயல்கள் நமக்கே அதிர்ச்சியூட்டுவதில்லையா? நேரம் இருந்தால் இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்:

நித்தியானந்தாவும் நாமும்!






உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: