தோழமையுடன்

Thursday, January 31, 2013

கமல்ஹாசனுக்கு இஸ்லாமிய சமூகத்தின் நன்றி! நன்றி! நன்றி!


அன்புள்ள கமல்ஹாசனுக்கு
இஸ்லாமிய 'பொதுஜனங்களில்' ஒருவனாக...

 உங்களின் 'விஸ்வரூபம்' தொடர்பாக பதிந்த ஒரு  மடல்.
 தாலிபான்களின் தீவிரவாதத்தை வென்றெடுக்கும்டாலர் தேசங்களின் உள்ளங்கவர் 'ஃபார்முலாவை' மையப்படுத்தி நீங்கள் கதையமைத்தது ஆஸ்கரை நோக்கிய உங்கள் காய்நகர்த்தலாக இருக்கலாம்.
 
ஆனால் மனித நேயமிக்க கலைஞரான நீங்கள்
சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளக் கூடிய நீங்கள்


கமல் ....நீங்களா இப்படி செய்தது?

 உங்கள் திரில்லர்திரைப்படத்தின் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சிசுவை சேர்ப்பதற்கு இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் தவறாக சித்தரிக்கும் காட்சிகள் தானா உங்களுக்கு கிடைத்தது!.

உங்களுக்கு தவறான உள்நோக்கம் ஏதும் இல்லாமல் இருக்கலாம்,  ஆனாலும் உங்கள் செய்கையின் விளைவு எங்களுக்கு வலிக்கிறது தோழரே!.

அந்த வலியின் எதிர் வினையாக இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த போராட்டங்கள்….

அதற்கு ஆதரவாக அரசாங்கம் விதித்த  தடையுத்தரவு

தொடரும் நீதிமன்ற தீர்ப்புகள்

அதனால் விளைந்த உங்கள் விரக்தியான வேதனைப் பேச்சு

இப்படி எல்லா நிகழ்வுகளுமே பொதுமக்களின் மனதில் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்ற கேள்வியை எழுப்பியுள்ள நிலையில்,

இந்த நிகழ்வுகளால் சில நன்மைகளும் விளைந்துள்ளன.

அதற்காக உங்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் எங்கள் நன்றி!.

நன்மைகள் சில உங்கள் பார்வைக்கு:

1        எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கின்றார்கள். பாகுபாடின்றி அந்த தீவிர வியாதிகளும் அதன் காரணிகளான மூலவேர்களும்அகற்றப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு இரு வேறு கருத்தில்லை. ஆனால் ஒரு இருபதாண்டு காலமாக திரைப்படங்களில் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்என திரும்பத் திரும்ப காட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லது தீவிரவாத்தின் ஆதரவாளர்கள்' என ஏனைய சமூகத்தாரை நம்ப வைக்கும் வெற்றிகரமான மூளைச்சலவையால், இன்று இஸ்லாமியர்கள் சந்தித்து வரும் மன நெருக்கடி மிக மிக அதிகம். 


இது ஒரு கருத்தியல் வன்முறை, அநீதமான போக்கு என அறிவுடையோர் அறிந்திருந்தாலும் வெளிப்படையாக அதை கண்டித்த இஸ்லாமியரல்லாதவர்கள் எண்ணிக்கையில் மிகவும் சொற்பம்.


சென்ற வாரம் வரை இந்த நிலை தான் தொடர்ந்தது....


இன்றோ பல்வேறு அரசியல், சமூக, வர்த்தக பிண்ணனி கொண்ட இஸ்லாமியரல்லாத சகோதரர்கள் தெளிவாக இது இஸ்லாமிய சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தொலைகாட்சி பேட்டியில் வெளிப்படுத்தி வருகின்றனர். மிக பரந்த தளத்தில் இந்த உண்மை இன்று பொதுமக்களை சென்றடைய விஸ்வரூபம் ஒரு காரணமாக அமைந்திருப்பதால்
இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!.

2.       இனி வரும் காலங்களில்,  திரைப்படங்களில் பொறுப்பற்ற முறையில் எந்த சாதி, மத, இனத்திற்கும் எதிராக தவறான கருத்தை முன்வைக்க எவரும் யோசிப்பார்கள் என்பது இன்னும் ஒரு நல்ல விசயம்.

3.       தணிக்கைத் துறையினர் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை பலர் வலியுறுத்தியிருப்பதுவும் ஒரு நல்ல விசயம்.
 

4.       இன்னும் ஒரு  தனிப்பட்ட நன்மை உங்களுக்கு:
தொலைக்காட்சிகளில், இணையத்தில் இன்னும் பிற ஊடகங்களில் ஆதரித்தும், எதிர்த்தும் இன்று அதிகம் பேசப்படுப்படும் விசயம் talk of the town உங்கள் விஸ்வரூபம் தான். அப்படி என்ன தான் எடுத்திருக்கிறார் கமல்ஹாசன்?’ என்ற ஆர்வத் தூண்டல் இன்று உலகெங்குங்கும் விதைக்கப்பட்டிருக்கிறது. இது நீங்கள் 1000 கோடி செலவழித்தாலும் கிடைக்க முடியாத ஓர் அரிய விளம்பரம். விஸ்வரூபம் படத்தின் வெற்றியை இனி உங்களால் கூட  தடுக்க முடியாது.

ஆகவே கவலையை விடுத்து, நீக்க வேண்டிய காட்சிகளை நீக்கி ஆக வேண்டிய சமரச முயற்சிகளை கையிலெடுங்கள். சமூக நல்லிணக்கம் நோக்கிய சுமூகமான தீர்வே எல்லோருடைய ஆசையும். 

அனபுடன்,

உங்கள் தமிழ்ச் சகோதரன்


முஸ்லிம்களைப் பற்றி கமல்ஹாஸன்

உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Post a Comment