நாம் வளரும் சூழலுக்கு
ஏற்ப நம்மைப் பற்றியும் நமக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றியும் நம் கருத்துருவாக்கம்
(conception) இன்னும் கொள்கைகள்(idealogy) நமது மனதில் உருவாகின்றன. நமது பெற்றோர்கள்,
ஆசிரியர்கள், நண்பர்கள், கேட்ட பிரசங்கங்கள், படித்த புத்தகங்கள், பார்த்த டி.வி.,
சினிமாக்கள், பழகிய சூழ்நிலைகள், சந்தித்த வெற்றி, தோல்வி அனுபவங்கள் அனைத்திலிருந்தும்
நாம் கற்றுக் கொண்ட அல்லது கற்பித்துக்கொண்ட செய்திகள் மனதில் பிம்பங்களாக பதியப்படுகின்றன.
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Tuesday, October 30, 2012
Monday, October 22, 2012
பூச்செண்ட்டுடன் வந்திருக்கும் பச்சைப் பொய் - கவிஞர் தாஜ்
‘வெல்கம் அத்வானிஜி!’ என்ற எனது கட்டுரையை படித்து
கருத்து தெரிவிக்க நண்பர் தாஜ் அவர்களை கேட்டிருந்தேன். பதிலுக்கு தாஜ் ஒரு கட்டுரையே எழுதிவிட்டார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தாஜின் இந்த கட்டுரை ஒரு விதத்தில்
என் கட்டுரைக்கு எதிர்வினையாக ‘கேப்பையில் நெய்வடிகிறது என்றால் கேட்பாருக்கு எங்க
போச்சு புத்தி?’ என சாடுகின்றது. அத்வானிஜியின் வார்த்தைகள் அரசியல் காய் நகர்த்தல் என்றாலும் அதை அவர்கள் உண்மையாக்கினால் எவ்வளவு நல்ல விசயம் என்பதை சிந்திக்க தூண்டுவது தான் என் கட்டுரையின் நோக்கம்.யார் ஆரம்பித்து வைத்திருந்தாலும் மதவெறி என்கின்ற
புற்று நோய் ஒழிக்கப்பட வேண்டும், மனிதநேய வெறி தளைக்க வேண்டும் என்பதில் என்னை விட
தாஜுக்கு அக்கறை அதிகம் என்பதே என் நம்பிக்கை. இருந்தும் மனதால் பலமடங்கு என்னை விட
இளையவர் என்பதால் மிகவும் உணர்ச்சி வசப்படுகின்றார். வார்த்தைகளில் இத்தனை கடுமை தேவையில்லை என்றாலும் தாஜ் பொய் சொல்லவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய உண்மை.
Wednesday, October 17, 2012
டெங்கு தடுக்க... தகர்க்க... தப்பிக்க 10 வழிகள் - டாக்டர். நாகராஜன்
ஒவ்வொரு முறை இந்தியாவிற்கு
செல்லும் போதும் விமான நிலையத்திலிருந்து துவங்கி ஊர் செல்லும் வரை தொடரும் சுகாதாரமற்ற
சூழல் கூட எனக்கு என் தாய்மண்ணின் என்றும் மாறா அடையாளமாகவும், புழுதியுடன் புரண்டெழுந்த
என் பால்யத்தின் நினைவு சின்னமாக ஒரு மகிழ்வூட்டும் விஷயமாகவே இருந்திருக்கிறது. சுத்தமான சூழலை மனது விரும்பினாலும் அப்படி
சுத்தம், சுகாரத்துடன் பளிச்சென்று இருந்திருந்தால் என் தேசமே எனக்கு அன்னியமாக கூட தோன்றியிருக்கலாம்.

Tuesday, October 16, 2012
அனைவருக்குமான அசோகமித்திரன்! - லதா ராம கிருஷ்ணன்
எளிமை – இலக்கியத்தரம் வாய்ந்த ஆபசமற்ற இலக்கியம்
படைக்க விரும்பும் 'தீன்குலத்' தமிழர்கள் அவசியம்
படிக்க வேண்டிய ஒரு முன்னோடி எழுத்தாளர் அசோகமித்திரன்.
ஆரோக்கியமான இலக்கியம் எது? என்ற கேள்விக்கு ‘என்
பயணம்’ என்ற தன் நூலில் அசோகமித்திரன் கூறிய பதில் :
‘மனதில் குழப்பம், கிளர்ச்சி உண்டுபண்ணக்கூடாது.
மனிதனை மனிதனிடமிருந்து பிரிப்பதாக இருக்கக் கூடாது. மனிதனைப் பற்றி மேலும் அறிய தூண்டுவதாக
இருக்க வேண்டும். வாழ்க்கையில் நம்பிக்கையும்,தெளிவும் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.' என்பது தான்.
82வது வயது நடக்கும் அசோகமித்திரன்
நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுவதுடன் அவரைப் பற்றி சகோ. லதாராம கிருஷ்ணன்
திண்னையில் எழுதியிருந்த கட்டுரையை நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.
Sunday, October 14, 2012
கரண்ட் "கட்'டைப் பற்றிக் கவலையில்லை!
![]() |
வெல்டன் விஜயகுமார்! |
விவசாயம் செய்ய முடியாமல், அதை விட்டுவிட்டு
வேறு தொழிலுக்குப் போகிற விவசாயிகள் இந்தக் காலத்தில்
அதிகம். ஆனால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ஒருவர், விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, தனது வேலையை
விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கிவிட்டார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
அதுவும் தனது தோட்டத்துக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம்
தயாரித்துக் கொள்கிறார் என்றால் வியப்பு இன்னும் அதிகமாகிறது.
(தினமணியில் வெளிவந்த இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள் சகோதரர் விஜயகுமார் போன்றவர்கள் தான் நமது தாயகத்தின் உண்மை கதாநாயகர்கள்.வெல்டன் விஜயகுமார்!. _ ஒ.நூருல் அமீன்)
(தினமணியில் வெளிவந்த இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள் சகோதரர் விஜயகுமார் போன்றவர்கள் தான் நமது தாயகத்தின் உண்மை கதாநாயகர்கள்.வெல்டன் விஜயகுமார்!. _ ஒ.நூருல் அமீன்)
Friday, October 12, 2012
அல்லாவின் தொழுகையில் நிழலாடும் அனுஷ்காவின் முகம்
‘நஜீர்,
எனக்கு தொழுகையில் நிண்டா அல்லாட
நினைவு வரலை. அனுஷ்காட முகம்
தான்டா
நினைவுல வருது. ஹாரிஸ் ஜெயராஜுட பாடல் வரிகள் தான்
மனசுல ஓடுது. எத்தனையாவது ரக்காயத் தொழுறேன்ங்கிறது கூட பல சமயம் குழப்பமாயிடுதுடா ’ என்று சொன்ன
சாதிக்கிடம் “ நாளைக்கு என் வீட்டுக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரியவங்க வற்றாங்க நீயும் வா. அவர்கள்
மூலம் உனக்கு அல்லாஹ் ஒரு நல்ல வழிய காட்டுவான். இன்ஷா அல்லாஹ்” என்றான்.
Monday, October 1, 2012
வெல்கம் அத்வானிஜி!
இஸ்லாமியர்கள்
உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு பாஜக எதிரான கட்சியல்ல என்பதை நாம் மீண்டும்
உணர்த்த வேண்டும். காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், முஸ்லீம்களின் ஓட்டுக்களையும் பெறும் வகையில் கட்சியை நாம் முன் நிறுத்த வேண்டும்
என்று பாஜக மூத்த தலைவரான அத்வானி கூறியுள்ளார் என்பதை படித்ததும் திரு.ராமகோபாலன் மீலாது விழா மேடையில் பேசுவது போலும், நோன்பு விருந்தில் கஞ்சி குடிப்பது போலும் மனதில் ஒரு காட்சி வந்தது.
லேபிள்கள்:
அத்வானி,
அரசியல்,
இந்துத்வா,
பாபரி மஸ்ஜித்,
பாஜக,
மனித நேயம்,
ராமகோபாலன்
Subscribe to:
Posts (Atom)