தோழமையுடன்

Sunday, September 16, 2012

மடமையின் தந்தைகள் மண்ணாய் போகட்டும்!

வழக்கம் போல் தனிதனி குழுவாய் தான்

என்றாலும்

எல்லா முஸ்லிம்களும் கருத்தொறுமித்து

பெருமானாரின் மேலுள்ள காதலை காட்டும் இந்நாளில்

எங்கள் வேதனை நிஜம்,

எங்கள் கோபம், கைசேதம் எல்லாம் நிஜமென நீ அறிவாய்!


உன்னையே வணங்குகின்றோம்!
உன்னிடமே உதவி தேடுகின்றோம்!.



தாயிபில் கல்லால் அடித்தவர்களின்
பேரர்கள் நாவினில் இன்று நபியின் புகழ்!.

வாளெடுத்து வெட்ட வந்த உமர்
நாயகத்தின் இடது பக்கம்
வாழும் போதும், மரணித்த பின்னும்.

 
உள்ளங்கள் உன் கையில்,
ஒவ்வொரு சிருஷ்டியின் சிண்டும்
உன் கையில்,

உன்னையே வணங்குகின்றோம்
உன்னிடமே உதவி தேடுகின்றோம்.

நல்லோர் நெஞ்சில் தெளிவை வழங்கு.
நானிலமெங்கும் அருள் ஒளி வழங்கு!

0000


நபியை அவமதித்த அபூலஹபின் கரங்கள் 
நாசமாகட்டும் என கோபம் கொண்டவனே!


எளியவர் தலைவரை,
ஏழைப் பாங்காளரை 
எள்ளி நகையாடிய
மடமையின் தந்தை (அபுஜஹில்)
மண்ணாய் போனான்
வாழும் போதும், மரணித்த பின்னும்

எண்ணிப் பார்க்காத இருண்ட நெஞ்சங்கள்.
மன்னிக்க தகுதியில்லாத மடமையின் தந்தைகள்
மண்ணாய் போகட்டும்
வாழும் போதும், மரணித்த பின்னும்.

நபி பெருமானாரின் நற்குணத்தை பாடுகிறார் 
சகோதரர் தேரிழந்தூர் தாஜுத்தீன் ஃபைஜி




பின் குறிப்பு:
அபுஜஹில் என்பதன் பொருள்  மடமையின் தந்தை என்பதாகும்.
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

6 comments:

Unknown said...

நம்மை விட நமக்கு நெருக்கமானவன் நம் இறைவன் ஆயினும் அவன் முகவரி ஒரு மர்மமாகவே இருக்கிறது. அவன் இருப்பு வெகு தூரமாகவே நம்மால் உணர முடிகின்றது. இந்த மானசீக தூரத்தை கடக்கும் அகப்பயணத்தில் உங்களில் ஒருவன். அற்புதமான வரிகள் சகோதரரே எமக்கும் உருவம் இல்லாத அல்லது யாவுமாக இருக்கிற ஒரு சக்தியின் மீது அளவு கடந்த காதல் எமது மின் அஞ்சல் முகவரி bsnl50505@gmail.com
යෙල්ලවුම් எல்லாவும் ஆக இருக்கிற எல்லை இல்லா சக்தி நமக்கு உதவட்டும் .........அன்புடன் இறைவனின் பாதம் பணியும் பாலசுப்ரமணியம் .............கோயம்புத்தூர்

R.Puratchimani said...

ஐயா,
முதன் முதலில் நபியவர்களின் வாழ்க்கையை பற்றி படித்த பொழுது எனக்கும் அவரை பற்றிய தவறான எண்ணம் எழுந்தது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தை வைத்து பார்க்கும்பொழுதும் அவர் எந்த சூழ்நிலைகளில் எந்த செயலை செய்தார் என்றும் பார்க்கும் பொழுது என்னுடைய தவறான எண்ணம் நீங்கியது.(இருப்பினும் ஓரிரு சந்தேகங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் அவையும் அந்த காலத்திற்கு ஏற்றதுதான் என்றால் இந்த காலத்தில் அவற்றை புறக்கணிக்க வேண்டும் அதை சில இசுலாமியர்கள் செய்தாலும் அடிப்படை வாதிகள் கற்காலத்தை நோக்கியே இட்டு செல்கிறார்கள் )


சில அடிப்படைவாதிகள் இசுலாமை வளர்க்க பிற மதங்களில் அந்த காலத்திற்கு சரியாக இருந்த நிகழ்ச்சிகளை இந்த காலத்தில் கொச்சைப்படுத்தி வருகிறார்கள். மேலும் சிலர் வன்முறைகளிலும் ஈடுபடுகிறார்கள் இதனால் தான் இசுலாம் மீது சிலருக்கு தவறான எண்ணம் ஏற்ப்படுகிறது.

பிற மதங்களை விமர்சிப்பதை,வன்முறையை எல்லோரும் விட்டுவிட்டால் பல பிரச்சனைகள் வராது. ஆனால் தங்களது மதத்தை வளர்ப்பதாக எண்ணி பலர் மனிதத்தை கொல்கிறார்கள்.

எல்லா மதத்தினரும் காலத்திற்கு ஏற்றார் போல் தங்களை(மதத்தை) சீர்திருத்திக் கொண்டு ஆன்மீகத்தை நோக்கி நடைபோட வேண்டும் எனபதே எனது வேண்டுதல்.இசுலாமை பொறுத்தவரை உங்களை போன்றவர்களின் வழிகாட்டுதல் இதற்க்கு மிக அவசியம்.

நன்றி

புல்லாங்குழல் said...

அன்புள்ள புரட்சிமணி ஐயா,

உங்கள் அன்புக்கு நன்றி!. தொடருங்கள் உங்கள் புரிதலை.

முஹம்மது நபிகளாரின் ஆன்மீக மனித நேய கண்ணட்டத்தை பிறமத சகோதர்கள மட்டுமல்ல முஸ்லீமகளே கூட சரியாக புரிந்து கொள்ளாதால் தான் இந்த குழப்பம்.

நாங்கள் வழிகாட்டிகள் அல்ல. நல்லோர்களின் பாதையில் தொடர முயற்சிக்கும் சாதாரணமானவர்கள் தான். அதில் நிலைதிருக்க இறை கருணையை வேண்டுபவர்கள்.

Anonymous said...

Assalamu alaikum,
This is really a wonderful article which every muslim should read and understand the true value of our Prophet.Keep Going....


-wafa

Anonymous said...

// முதன் முதலில் நபியவர்களின் வாழ்க்கையை பற்றி படித்த பொழுது எனக்கும் அவரை பற்றிய தவறான எண்ணம் எழுந்தது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தை வைத்து பார்க்கும்பொழுதும் அவர் எந்த சூழ்நிலைகளில் எந்த செயலை செய்தார் என்றும் பார்க்கும் பொழுது என்னுடைய தவறான எண்ணம் நீங்கியது.(இருப்பினும் ஓரிரு சந்தேகங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் அவையும் அந்த காலத்திற்கு ஏற்றதுதான் என்றால் இந்த காலத்தில் அவற்றை புறக்கணிக்க வேண்டும் அதை சில இசுலாமியர்கள் செய்தாலும் அடிப்படை வாதிகள் கற்காலத்தை நோக்கியே இட்டு செல்கிறார்கள் ) //

அதனையே நானும் வழி மொழிகின்றேன் ...

:)

புல்லாங்குழல் said...

அன்பு இக்பால் செலவன்,

நபியின் சொல், செயல் அங்கீகாரம் எக்காலத்திற்கும் பொருத்தமானவை ஏனெனில் அவை அனைத்துமே நபியின் மூலம் இறைவனால் வழங்கப்பட்டவை என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை. அவை கற்காலத்திலிருந்த நாகரீகத்தை பொற்காலமாக்கியவை. அவர்களது வாழ்வும், வழிமுறையும் ஆழ்ந்து அறியப்பட வேண்டிய ஒன்று.