ஆன்மீக வழிநடப்போர்கள் அனைவருக்கும் வழிகாட்டும் அற்புத நூல் ‘ஹிகம்’ . இது ஷாதுலியா ஆன்மீகப்பாதையின் வழி வந்த இப்னு அதாவுல்லா ஸிக்கந்தரி (ரஹ்) அவர்களால் எழுதப்பட்டது. அவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகத்தான ஞான மாகான் ஆவார்கள். இதன் சுருக்கத்தை உத்தம பாளையத்தை சேர்ந்த மௌலானா மௌலவி T.S. மூஸாகான் பாகவி (ரஹ்) அவர்கள் தமிழில் தந்துள்ளார்கள்.
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Saturday, March 31, 2012
Friday, March 30, 2012
காஷ்மீரும் கவனிக்க வேண்டிய புத்தகங்களும் - கவிஞர் தாஜ்
கவிஞர் தாஜின் இந்த கட்டுரை ஆபிதீன் பக்கங்களிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாத குமுதம் தீராநதியில் (March-2012) வாசித்த , இரண்டு புத்தகங்களைக் குறித்த ஓர் அறிமுகக் கட்டுரை என்னை துயரத்தில் ஆழ்த்தியது. வெகு காலமாக தீர்க்கப்படாத காஷ்மீரின் அரசியல் பிரச்சனையை ஒட்டி, ஆண்ட/ ஆளும் மத்திய அரசுகளின் அரசியல் ராஜ தந்திரங்களை தீர்க்கமாய் அவ்விரு புத்தகங்களும் பேசியிருப்பதாக அந்தக் கட்டுரை சொல்கிறது.
Wednesday, March 21, 2012
கவலைகளுக்கு மருந்தாகும் கவலை!
“ஒரே ஒரு கவலையுடன் மட்டும் - இறைவனை திருப்திபடுத்த வேண்டும் என்ற கவலையுடன் மட்டும் - ஒருவன் காலையில் எழுவானாயின் இறைவன் இம்மை, மறுமையின் சகல கவலைகளிலிருந்து அவனை பாதுகாப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக இமாம் கஸ்ஸாலி(ரஹ்) தனது ‘பிழையிலிருந்து விடுதலை செய்வது எதுவோ அது’ (அரபியில் : அல் முன்கித் மினழ் ழலால்) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
இறைவனை மட்டும் திருப்தி படுத்தி விட்டால் போதுமா? என்கிறது வெளிப்படையான அனுபவ அறிவு.
Friday, March 16, 2012
சூனியம் வைக்கும் சொற்கள்!
![]() |
Subscribe to:
Posts (Atom)