ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Saturday, August 20, 2011
இறைஞான ஒளிவிளக்கு
Wednesday, August 17, 2011
நோன்பு என்பது….
சங்கை மிகும் "நூரியா தரீக்கா"(ஷிஸ்தியுல் காதிரி) ஆன்மீக பாதையில் நடைபயிலும் முனைவர் ரமீஸ் பிலாலி அவர்களின் ஞானம் தோய்ந்த சிந்தனைகள் அவரது பிரபஞ்சக்குடில் தளத்திலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Monday, August 15, 2011
நாடு அதை நாடு
அழுத்தமான நேசத்தை வெளிப்படுத்தும் இஜட்.ஜெபருல்லாவின் இந்த கவிதை ஆபிதீன் பக்கங்களிலிருந்து நன்றியுடன் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நோன்பாளியின் படித்தரங்கள்
நோன்பு வைப்பவர்களை மூன்று படித்தரமாக வகைப்படுத்தி கூறுகின்றார்கள் ஆன்மிக பெரியார்கள்.
- உண்ணல், பருகல், உடலுறவு இவைகளை மட்டும் தடுத்து கொள்ளுதல் பாமரர்களின் நோன்பு.
- உண்ணல், பருகல், உடலுறவு இவைகளை தடுத்து கொள்ளுதலுடன் அதிகமதிகம் நற்செயல்கள் புரிவதும், பொய் பேசுதல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல் போன்ற பாவச்செயல்களை விட்டும் தன்னை காத்து கொள்ளுவது நல்லடியார்களின் நோன்பு.
- மேற் கூறிய இரண்டு நிலைகளுடன் இறைவனைத் தவிர வேறு பக்கம் தங்கள் கவனம் திரும்புவதை விட்டும் காத்து கொள்ளுதல் நபிவழியில் அகப்பார்வை அடைந்த ஆரிஃபீன்கள் என்னும் இறைஞானிகளின் நோன்பு.
இது வேறு வேறு மூன்று வகை பிரிவினரை பற்றி கூறுவதாக காட்சியளித்தாலும் யோசித்து பார்க்கும் வேளையில் நாமே சில நேரம் பாமர நிலையிலும், சில நேரம் நல்லடியார்களின் நிலையிலும் இருப்பதை உணர முடிகிறது. அத்துடன் இறைவனைத் தவிர வேறு பக்கம் தங்கள் கவனம் திரும்புவதை விட்டும் காத்து கொள்ளும் ஆரிஃபீன்கள் என்னும் இறைஞானிகளின் நிலையை நோக்கி முடிந்த அளவு முன்னேற முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் அது தான் நபிவழி அகப்பார்வையாய் இருக்கின்றது. அதைப் பற்றி இந்த கட்டுரையில் சுருக்கமாக பார்ப்போம்.
எது கவிதை?
நேற்று இலங்கை வானொலியினரால் வாசிக்கப்பட்ட “எது கவிதை..?” எனும் சபீரின் கவிதையை படிக்குமுன் ஆரம்பமாக 'கவிதைப் புரிதல்' பற்றி சபீரின் சில விளக்கங்கள்:
அகப்பார்வை - ஓர் அறிமுகம்
மௌலவி டாக்டர் செய்யது மஸ்வூது ஜமாலி முதல்வர், புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி, வண்டலூர், சென்னை அவர்கள் வழங்கிய அணிந்துரை....
நாகூர் ரூமியின் பார்வையில் “சூஃபி கோட்பாடுகள்”
இமாம் குஷைரியின் ஓர் அற்புதமான ஆன்மிக நூல் “சூஃபி கோட்பாடுகள்” என்ற பெயரில் முனைவர் ரமீஸ் பிலாலி ( தமிழ் விரிவுரையாளர், ஜமால்முஹம்மது கல்லூரி, திருச்சி) அவர்களால் தமிழில் மொழிபெயர்பு செய்யப்பட்டுள்ளது. ரமீஸ் பிலாலி அவர்கள் ஆன்மிக பாதையில் நடை பயில்பவர் (நூரியா ஆன்மிக தொடரில் உள்ள சங்கைக்குரிய ஷெய்க். பிலாலி ஷாஹ் ஜுஹுரி என்னும் ஆன்மீக குருவின் சீடர்) என்பதால் மொழிபெயர்ப்பு மிகவும் கவனமுடன் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தகங்களைப் போல் மிகவும் நேர்த்தியான வடிவில் வெளிவந்திருக்கும் இந்த நூலை பற்றி முனைவர் நாகூர் ரூமி அவர்களின் அறிமுகம் உங்கள் பார்வைக்கு…..
Sunday, August 14, 2011
காதலிக்க கற்றுக் கொள்ள ஒரு மாதம்
மனிதர்களை தன் காதலர்களாக – நேசர்களாக ஆக்குவதற்கு வருடந்தோறும் ஒரு மாதத்தையே கருணையுடன் தந்துள்ளான் இறைவன். அந்த மாதத்திற்கு பெயர் ரமளான்.
'இறையச்சம் கொண்டவர்களேயன்றி இறைநேசர்கள் இல்லை' என்கிறது இறைவேதம்.
அச்சம் கொண்ட இதயத்தில் எப்படி நேசம் இருக்கும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?
Friday, August 12, 2011
தஸவ்வுப் - அதன் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள்
இஸ்லாமிய ஆராய்சியாளரான அவர்களின் 'தஸவ்வுப்' பற்றிய கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. இது தஸவ்வுப் பற்றிய தவறான புரிதல்களை உடையவர்களுக்கு விளக்கம் அளிப்பதாக உள்ளது.
Subscribe to:
Posts (Atom)