தோழமையுடன்

Friday, August 20, 2010

ஆன்மா என்னும் அகக்கண்


கண்பார்வையற்ற ஒரு அறிவு ஜீவி ஒருவன் இருந்தான். நிறங்கள் என்பதே இல்லை என்பது அவனது நம்பிக்கை. யாராவது அவனிடம் சிகப்பு, மஞ்சள் என நிறங்களை விளக்க முயன்றால் “எங்கே சிகப்பு என்பதை என் நாவுக்கு சுவைக்கத் தா!” என்பான். “மஞ்சள் என்பதை என் காதுகளுக்கு உணரச் செய்!” என்பான். யாரும் அவனிடம் வாதம் புரிவதில்லை. அவனைக் கண்டாலே பயந்து தூர ஓடி விடுவார்கள். அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார். அவர் ஒரு மருத்துவரும் கூட. அவரை அவனிடம் அழைத்துச் சென்றார்கள்.


அவன் வழக்கமாக எல்லோரிடமும் கேட்கும் கேள்விகளைக் கேட்டான். “அருகில் வா பதில் தருகின்றேன்” என புன்னகையுடன் அவனை அருகில் அழைத்தார் ஞானி. அவன் அருகில் நெருங்கியதும் திடீரென அவனது முகத்தில் மயக்க மருந்து தடவிய துணியை வைத்து முகரச் செய்தார். அவன் மயங்கியதும் அவன் கண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார். அவன் மயக்கம் தெளிந்த போது அவனுக்கு சன்னம் சன்னமாக பார்வை வர தொடங்கியது. சிகப்பு, மஞ்சள் எல்லாம் என்ன என்பது விளங்கியது. அவன் மகிழ்ச்சி பொங்க கண்ணீருடன் ஞானியை தேடினான். அதற்குள் ஞானி அவன் இருந்த ஊரின் எல்லையை கடந்திருந்தார் அடுத்த அந்தகனை நோக்கி…

இறைவன் வழங்கிய அருட்கொடைகள் ஐம்புலன்கள். ஐம்புலன்களால் எத்தனை இன்பங்கள்.

வானவில்லின் வர்ணஜாலங்கள், வண்ணத்து பூச்சிகள், வண்ண மலர்கள், பச்சைபுல்வெளிகள், ஓடும் நதிகள், உயர்ந்து நிற்கும் மலைகள் இவைகளை பார்த்து மகிழ்கின்றோம்.

இனிய குயிலோசை, ஆர்ப்பரிக்கும் அலையோசை, அன்புக் குழந்தையின் மழலை, அருமைத் தாயின் அரவணைக்கும் வார்த்தைகள், ஆசை மனைவியின் அன்பான வார்த்தைகள் இவைகளை கேட்டு மகிழ்கின்றோம்.

அல்வா, குலோப்ஜாமுன், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என விதவிதமான சுவைகளை நாவால் சுவைத்து மகிழ்கின்றோம்.

ரோஜா, மல்லிகை, தாழம்பூ, மகிழம்பூ என எத்தனை எத்தனையோ நறுமணங்களை முகர்ந்து மகிழ்கின்றோம்.

காயத்தினால் ஏற்படும் வலி, தழுவலின் சுகம், பார்த்து, கேட்டு, முகர்ந்து, சுவைத்து மகிழ்வதினால் ஏற்படும் மகிழ்வு, புளங்காகிதம் என விதவிதமான அனுபவங்களையும் அனுபவிக்கிறோம்.

சுருக்கமாக சொன்னால் ஐம்புலன்களின் வாயிலாகத்தான் நாம் வெளியுலகை அறிகின்றோம். இப்படி நாம் கண்கள் பார்க்கின்றன, காது கேட்கின்றது என்று சொன்னாலும் உண்மையில் நாம் பார்ப்பது, கேட்பது, தொட்டுணர்வது எல்லாம் மூளையினால் தான். நிறம் என்று நாம் அறிந்ததெல்லாம் ஃபோட்டான்ஸ் (photons) என்னும் மின் காந்த துகள்கலின் வேறுபட்ட அலை வரிசைகளுக்கு ஏற்ப அவை வெளிப்பட்ட பொருள்களை(Objects) நம் மூளை வடிவமைத்தபோது ஏற்பட்ட உணர்ச்சிகளால் தான் என்கின்றார்கள். நாம் அறிந்து கொள்வது உணர்ந்து கொள்வது என்பதெல்லாம் கண், காது முதலிய புலன்கள் மூளைக்கு அனுப்பும் மின்சமிக்கை (electrical signals) வாயிலாகத்தான். எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் நகலாக மூளையில் எற்படும் வண்ண பிம்பங்களின் வாயிலாகத்தான் நாம் அந்த பொருளையே அறிகிறோம். எந்த ஓசையை கேட்டாலும் அதன் நகலாக மூளையில் எற்படும் ஒலியலை பிம்பங்களின் வாயிலாகத்தான் நாம் அந்த ஓசையை அறிகிறோம். முன், பின், மேல், கீழ், வலம், இடம் என்பதெல்லாம் நாம் மூளையால் இவ்வாறு உணர்வது தான். திட நிலை, திரவ நிலை, வாயு நிலை என்பதெல்லாம் கூட நாம் மூளையால் தொடர்புபடுத்தி உணர்வது தான். காலை, மாலை என்ற காலநேரத்தை உணர்வது கூட மூளையினால் தான். இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு என்பதெல்லாம் கூட நாம் மூளையால் உணர்வது தான். ஏன் நம் சொந்த இருப்பைக் (existenceஐ) கூட மூளையினால் தான் உணர்கின்றோம். நமது உடம்பு என்பதைக் கூட செல்களின் (அணுக்களின்) உள்ளேயுள்ள எலக்ட்ரான்களின் இயக்கத்தால் ஆன மின் தூண்டுதல்களினால் நம் மனதில் வடிவமைக்கப்பட்ட பிம்பத்தின் வாயிலாகத்தான் உணர்கின்றோம். இதற்கு அர்த்தம் பொருள்கள், காலம், இடம், நிறம், வடிவம் எல்லாம் இல்லை என்பது அல்ல. பொருள் சார்ந்த உலகம் (Physical world) என்பது புலன் உணர்வுகளின் வாயிலாக வடிவமைக்க பட்ட காலம், இடம், நிறம், வடிவம் என்னும் வரையறைகளால் ஆன உணர்வுலக உண்மை (perceptual reality) என்பது தான் அறிவியல் கூறும் உண்மை. நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது. நாம் புலனுணர்வுகளை அறிவியல் ஆய்வுகளின் வழியாக பகுத்தறிந்து பொருள் சார்ந்த உலகம் (Physical world) என்னும் பிரபஞ்ச உண்மையின் ஒரு பக்கத்தைத் தான் அறிந்திருக்கின்றோம். இந்த பிரபஞ்ச உண்மையின் மறுபக்கமென்ன என்பதை அடுத்த இடுகையில் பார்ப்போம். இப்போது நம்முன் இருக்கும் இரண்டு கேள்விகளை மட்டும் இங்கே பார்ப்போம்.

  1. இத்தனை எழில் கொழிக்கும் இந்த பிரபஞ்சத்தை நாம் உணர்ந்து அனுபவிக்க தந்தது யார்? பொருள்களின் இருப்பை வழங்குபவன் இறைவன் என்கிறார்கள் இறை நம்பிக்கையாளர்கள். இயற்கை என்கிறார்கள் இறைமறுப்பாளர்கள்.

  1. இவ்வாறு எல்லா பொருள்களையும் எந்த பொருளின் மூலமாக உணர்கின்றோமோ அந்த மூளையும் ஒரு பொருள், ஒரு சதைத் துண்டு தான் என்ற வகையில் மூளையென்பதையும் கூட ஒரு பிம்பமாகத் (imageஆக) தான் நம்மால் உணர முடிகின்றது. அப்படியானால் இவைகளை நாம் எதை கொண்டு அறிகின்றோம்? இறைவன் வழங்கிய ஆன்மாவைக் கொண்டு என்கிறார்கள் இறை நம்பிக்கையாளர்கள். இறை மறுப்பாளர்கள்………..

 (இந்த வகையில் மேலும் படிக்க விரும்பினால்  harun yahya.com மில் The secret beyond matter முதலிய சுமார் 10 கட்டுரைகள் உள்ளன. மிகவும் அற்புதமான கட்டுரைகள். அவைகளை அவசியம் பார்வையிடுங்கள்.)

10 comments:

எம் அப்துல் காதர் said...

//இந்த வகையில் மேலும் படிக்க விரும்பினால் harun yahya.com மில் The secret beyond matter முதலிய சுமார் 10 கட்டுரைகள் உள்ளன. மிகவும் அற்புதமான கட்டுரைகள். அவைகளை அவசியம் பார்வையிடுங்கள்//

சான்ஸே இல்ல பாஸ்,, அது எத்தனை கட்டுரையானாலும் நீங்களே எழுதுங்கள். வெளியிடுங்கள் உங்கள் எழுத்தோடோவே ஒன்றிப் போய் நாங்கள் பயணித்து பார்வையிடுகிறோம். மற்றப்படி வேறென்ன சொல்ல..

தூயவனின் அடிமை said...

இத்தனை எழில் கொழிக்கும் இந்த பிரபஞ்சத்தை நாம் உணர்ந்து அனுபவிக்க தந்தது யார்? பொருள்களின் இருப்பை வழங்குபவன் இறைவன் என்கிறார்கள் இறை நம்பிக்கையாளர்கள். இயற்கை என்கிறார்கள் இறைமறுப்பாளர்கள். //

இறைவனை நிராகரிப்போர்கள், அவர்கள் ஒன்றை மறுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால். தன் கொள்கை ஒன்றே சரி என்கின்ற அவர்கள் கண்ணோட்டம். இன்று உலகமே இஸ்லாத்தை உற்று நோக்க ஆரம்பித்து உள்ளது. உலகம் முழுவதும் இஸ்லாமிய வங்கி முறை ஒன்றே சரியானது என்று கூற ஆரம்பித்து உள்ளது. நிச்சயமாக இவர்களும் ஒரு நாள் சிந்திப்பார்கள். இன்ஷா அல்லா.

சீமான்கனி said...

பகிர்வுக்கு மிக்க நன்றி அமீன் சார் பார்வை பற்றிய சிறப்பான பதிவு....வாழ்த்துகள்...

புல்லாங்குழல் said...

எம்.அப்துல் காதர், இளம் தூயவன், சீமான் கனி உங்கள் கருத்துகளுக்கு நன்றி!

Asiya Omar said...

நல்லதொரு பகிர்வு.மிக்க நன்றி.

Chitra said...

நல்ல விளக்க கட்டுரை.... பகிர்வுக்கு நன்றி.

புல்லாங்குழல் said...

சகோதரி ஆசியா உமர், சித்ரா உங்கள் கருத்துகளுக்கு நன்றி!

புல்லாங்குழல் said...

இளம் தூயவன் உங்கள் வேண்டுகோளுக்கேற்ப உங்கள் கருத்து,நண்பர் ரஷீதின் கருத்து மட்டுமல்லாமல் எனது விளக்கத்தையும் சேர்த்து நீக்கி விட்டேன்.நீங்கள் இருவருமே என் மதிப்புக்குரிய அறிவு ஜீவிகள்.தொடருங்கள் உங்கள் கருத்துகளை.

தூயவனின் அடிமை said...

மிக்க நன்றி நூருல் அமீன் சார்.

Aathira mullai said...

//இறைவன் என்கிறார்கள் இறை நம்பிக்கையாளர்கள். இயற்கை என்கிறார்கள் இறைமறுப்பாளர்கள்.//

இரு வேறு உலகத்தின் இயற்கையை நுட்பமாக விளக்கியமை அழகு...இன்னும் இது போன்ற பதிவுகளைக் காண ஆவலுடன்....