எனது ஆன்மீக குருநாதர் ஷைகு ஃபைஜீஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் "பைத்துன் நூர்" இல்லத்துக்கு மனநல குறைவுடன் வருபவர்களை ‘லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலியுல் அளீம்’ என தினமும் பல முறை ஓதச் செய்வார்கள். குறிப்பாக சந்தேக வியாதி (வஸ்வாஸ்) பயபதட்டம் (anxiety) வியாதியுடைவர்கள் அங்கே தொடர்ச்சியாக இதை ஓதி மனநல தெளிவு பெறுவதை பார்த்திருக்கின்றேன்.
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Sunday, January 29, 2012
Saturday, January 28, 2012
இணைவைப்பு எனும் கற்பிதமும் ஏகத்துவ மெய்நிலையும்
''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை! என்கிறது இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்.
சுயமாக இருப்பவன். யாராலும் படைக்கப்படாதவன் இறைவன். அப்படி சுயமாக இருக்கும் படைப்பாளன் ஒன்றுக்கு மேல் இருந்திருந்தால் அவர்களிடையே போட்டி நிலவி உலகின் இயக்கத்தில் குழப்பம் விழைந்திருக்கும். அந்த ஒற்றை ஒருவனான ஏகஇறைவனைத் தான் பிரம்மன், கர்த்தர், அல்லாஹ், ஹுதா, God என பல பெயர்களில் அழைக்கின்றோம்.
Thursday, January 26, 2012
ஹிட்லர், சாவர்க்கர், மோடி! - சே குவேரா
குஜராத் கொடூரங்களின் சூத்திரதாரி நரேந்திர மோடி தமிழக
முதல்வரின் நெருங்கிய தோழராக, ரோல் மாடலாக மீடியாக்களில் வலம்வருகிறார். பிரதமருக்கான வேட்பாளரென பி.ஜே.பி. அணியினரால் முன்மொழியப்படுகின்றார். திரு.வாஜ்பாய் அவர்களுக்கு மாற்றாக அத்வானியையே ஏற்றுக் கொள்ளாத நடுநிலையாளர்கள் மோடியை ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வி எழும் சூழலில் நக்கீரன் இணைய தளத்தில் 2008ல் வெளிவந்த சே குவேராவின் இந்த கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

Wednesday, January 25, 2012
அம்பலம் - கவிக்கோ அப்துல் ரகுமான்
அம்பலம்
‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.
முதன் முதலாகப் பார்த்தேன்.
Thursday, January 12, 2012
மெலிதாக ஒரு தற்கொலை
“ஒரு நடிகை சொன்னாள் : நான் குளித்து கொண்டிருக்கும் போது ஒரு பெரிய அலையில் என் மேலாடை போய் விட்டது. அப்புறம்… வெட்கமாய் இருந்துச்சு. கண்ணை மூடி கொண்டு ஓடி வந்துட்டேன்.”
அஷ்ரஃப் இதற்கெல்லாம் சிரிக்கமாட்டான் என்று தெரிந்தே அந்த ஹைதர் காலத்து நகைச்சுவை துணுக்கை சொன்னான் இக்பால்.
“என் மனக்கண்ணை மூடிக் கொண்டு ஓடிய நிர்வாண ஓட்டங்களின் reality என்னை சுடுகிறது இக்பால்” என்றான் அஷ்ரஃப்.
Subscribe to:
Posts (Atom)