தோழமையுடன்

Friday, January 7, 2011

இரா முருகனின் "வங்கி மைனஸ் வட்டி"


நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக உங்களுக்கு முருகனைத் தெரிந்திருக்கும். வங்கியியல் வல்லுநராக ஒரு புதிய அறிமுகத்தை இப்போது செய்துகொள்ளுங்கள். உலகெங்கும் இன்று பிரபலமாகப் பேசப்படும் இஸ்லாமிக் பேங்கிங்கை இக்குறுந்தொடரில் அறிமுகப்படுத்துகிறார் இரா. முருகன்.


நகைச்சுவையோடு எளிமையாக அவர் அறிமுகப்படுத்தும் விதம் மிகவும் சுவராசியமாக உள்ளது. உதாரணத்திற்கு ஒரு பத்தி:
"ஐரோப்பிய  வங்கியியல் அண்மைக் காலத்தில், அதாவது கி.பி. 2008-ல் உலக அளவிலே பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்தபோது, எத்தைத் தின்னால் பித்தம் தீரும், இந்த நிதிநிலை முடக்குவாதம் குணப்படும் என்று உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் ‘குளிர்நீர் ஊற்றாக’ தட்டுப்பட்டது ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும்தான். நெஞ்சில் கையை வைத்துச் சொல்லச் சொன்னால் ஜார்ஜ் புஷ்கூட இதை மறுக்காமல், மறக்காமல் சொல்வார். எதுக்கும் இங்கிலீஷில் கேட்டுப் பார்க்கவும்."
முழுமையான கட்டுரை ( 8 அத்தியாயங்களில் ) தமிழ் பேப்பர் தளத்தில் உள்ளது. கீழ் கண்ட சுட்டியினை சொடுக்கி உள்ளே செல்லவும்.

வங்கி மைனஸ் வட்டி

2, 3, 4, 5, 6, 7, 8

6 comments:

Anonymous said...

நல்ல புத்தகம் அறிமுகத்திற்கு நன்றி

Anonymous said...

நல்ல கட்டுரை அறிமுகத்திற்கு பகிர்வுக்கு நன்றி

புல்லாங்குழல் said...

நன்றி! சதீஷ் குமார்.

Chitra said...

அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.

புல்லாங்குழல் said...

நன்றி சகோதரி!ஜோடி பொருத்தம் வெகு ஜோர்!

ஸாதிகா said...

அறிமுகத்திற்கு நன்றி.