தோழமையுடன்

Saturday, October 19, 2013

இஸ்லாம் - காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து

 காலச்சுவடு, அக்டோபர் 2013 இதழில் வந்த  கட்டுரையின் சுட்டி இதோ :  

 இஸ்லாம் சில புரிதல்களை நோக்கி” - களந்தை பீர்முகம்மது


கட்டுரையை படித்து விட்டீர்களா? 

இனி, அதைப் பற்றிய சில கருத்து பகிர்வுகள் உங்கள் பார்வைக்கு:



 “நபிகள் நாயகத்தின் ஈகை, தனி மனித உறவுகள், அறச்செயல்கள் போன்றவை நபிகள் நாயகத்தின் இரக்க உணர்வு என்பதாகக் குறுக்கப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் அழகிய முன் மாதிரி, இஸ்லாம் ஓர் அற்புதம் என்று பல்லாயிரமானோர் நிகழ்த்திவரும் விளக்கப் பிரச்சாரங்கள் இன்னமும் அதன் தொடக்க நிலையிலேயே நிற்கின்றன; இவ்வாறான சமயப் போதனைகளால், நடைமுறையில் நம் மனதுக்குள் எழும் சித்திரம் இஸ்லாம் - ஓர் ஆன்மீகத் தூய்மைஎன்பதாம். ஆனால் இதுவல்ல இஸ்லாம்!என கூறும் பீர் முகம்மது


நபிகள் நாயகம் தொழுகையை மட்டுமே முறைப்படுத்தித் தரவில்லை. நாயகம் ஒரு சமூகப் போராளியாகப் பரிணமித்தவர். நபித்துவ நிலையை அடைவதற்கு முன்பு முஹம்மது முஸ்தபாவாக அறியப்பட்ட அவர் ஹில்ஃபுல் ஃபுதூல் என்ற அமைப்பில் இடம் பெற்றிருந்தார். அரேபியப் பொருளாதாரம் நாடோடிப் பொருளாதாரத்தில் இருந்து வர்த்தகப் பொருளாதாரமாக மாறிக்கொண்டிருந்த நேரம். அதன் இயல்புக்கேற்றபடி ஒருபுறம் செல்வம் குவிந்தது, மறுபுறம் ஏழ்மை பெருகியது. சமூகத்தில் இதனால் அதிருப்தி அலைகள் உண்டாயின. நகரத்தில் வன்முறைகளும் ஏழைகளின் மீதான தாக்குதல்களும் நடந்துவந்தன. இதுபோன்ற சமயங்களில் ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு உதவி அளிக்கவும் ஹில்ஃபுல் ஃபுதூல் அமைப்பிலிருந்த இளைஞர்கள் விரைந்தோடிச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களில் முஹம்மது முஸ்தபா (பின்னாளில் அவரே நபிகள் நாயகம்)வும் முக்கியமானவர். அது ஒரு வீரர் குழாமாகவே அறியப்பட்டது. அப்படியானால் அது ஒரு சமூகச் சேவை அமைப்பாக மட்டுமே இருக்கமுடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 நபிகள் நாயகமாக ஆன பின்னரும் அவருடைய மலரும் நினைவுகளில் அதன் உறுதி இருந்தது. ஹில்ஃபுல் ஃபுதூல் தொடங்கப்பட்ட காலத்தில் நான் அதில் கலந்துகொண்டேன். இந்தப் பெருமையை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாகச் செந்நிற ஒட்டகங்களின் மந்தை ஒன்றைக் கொடுத்தால்கூட நான் இணங்க மாட்டேன். இன்றும்கூட யாரேனும் அந்தக் குழாமின் பெயரால் என்னை உதவிக்கு அழைத்தால் நான் ஓடோடிச் சென்று உதவுவேன்.தமது இளம் வயதிலேயே மக்கா நகரச் சமூகத்தில் மண்டியிருந்த கேடுகளைப் போக்க நபிகள் நாயகம் ஏதாவது செய்ய விரும்பினார் என்று அஸ்கர் அலி என்ஜீனியர் குறிப்பிடுவது இதனால்தான்என கூறுகின்றார்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஓர் சமூகப்போராளியாக, ஏழைப்பாங்களராக முன்னிருத்தி அந்த வகையில் அண்ணலாரின் வழிகாட்டலை பின்பற்றுவதில் இஸ்லாமிய அரசுகளும், அறிஞர்களும் தவறவிட்டதாக விளக்கிச் செல்கிறார்.

 ஒருவரின் மனநிலை, அவருடைய கல்வியறிவு, அரசியல், பொருளாதாரம், சமூகப் பற்று, இனம், கலாச்சாரம் போன்ற பல்வேறு அடுக்குகளிலும் உள்ள அவருடைய சாய்மானத்தை வைத்துத்தான் எல்லாமே அவரால் புரிந்துகொள்ளப்படுகிறதுஎன  இதே கட்டுரையில் பீர் முகம்மதுவே கூறியுள்ளது போல இது அவரது பார்வை
ஆயினும்,நாயகம் மனித நேயமிக்க ஒரு மகத்தான சமூக நலப் போராளி,  என்ற கோணத்தில் அவர்களது வரலாறும், குர்ஆனும் மீள்வாசிப்பு செய்யப்படுவதை தூண்டுவது இந்த கட்டுரையின் தனி சிறப்பு.  நாயகத்தின் நற்குணங்களை சரித்திர பிண்ணனியில் ஆராய்ந்து நாம் படிப்பினை பெற அத்தகைய மீள்வாசிப்பு மேலும் நமக்கு உதவக்கூடும். அவர்களின் பெருங்கருணையின்  பின்புலமாய் விளங்கும் ஆன்மீக உயர்வை தகுந்த ஆன்மீக குருநாதரின் வாயிலாய் விளங்க முனைந்தால் கூடுதல் சிறப்பு. (இது உங்கள் சூஃபியிச மனசாய்வை காட்டுகிறது என நீங்கள் நினைத்தால் அதுவும் சரிதான்.)

ஜிஹாத் என்பதை சமூக அநீதிகளுக்கெதிரான அறப்போராட்டம். எல்லாவித அநீதிகளுக்கும் எதிரான சமூகப் போராளியாக வாழ்வது தான் இஸ்லாமிய வாழ்வு என்ற வகையில் செல்லும் அவரது கட்டுரையில் போகிற போக்கில் “உஸ்மான் ரலியல்லாஹுதாலாவின்  ஆட்சிக்காலம் இன்றைய ஆட்சி முறைகளின் மூலப்பதிப்பு” என்றும் “அவருடைய ஆட்சியை எதிர்த்து அப்போதே கிளர்ச்சிகள் தோன்றிவிட்டன” என்றும் பொத்தம் பொதுவில் கூறுவது அபத்தமாகவேபடுகின்றது. அவர்கள் காலத்திய கிளர்ச்சியாளர்களின் நோக்கம் பொருளாதார அடிப்படையில் அமைந்ததல்ல என்பது இஸ்லாமிய வரலாறு. மேலும் “உமர் ரலியல்லாஹுவின் காலத்துடன் இஸ்லாமிய பொற்காலம் முடிந்து விட்டதுஎன்ற அவர் கூற்றும் ஒரு முழுமையான பார்வையல்ல.  பிற்காலத்திய ஆட்சியாளாரான உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரலியல்லாஹுவின் காலத்தில் ஜகாத் வாங்குவதற்கு கூட ஆளில்லாத அளவு பொருளாதார தனனிறைவான நிலை அரபகத்தில் நிலவியது என்பதும் கூட வரலாறு.

இறுதியாக நபியின் சரிதத்தையும் குர்ஆனையும் மீள்வாசிப்பு உட்படுத்தும் போது  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பற்றி இதை மறந்துவிடக் கூடாது. அவர்கள் எளிமையாவர்கள் தான் ஆனால் இச்சைகளின் ஏவலுக்கு இசைந்தாடும் நம்மை போன்ற சாதாராண மனிதரல்ல.

முன்மாதிரியே இல்லா ஒரு மனிதர்

 முன் மாதிரியே இல்லா ஓர் ஏழைபாங்காளர்,

முன் மாதிரியே இல்லா ஒரு சமூக போராளி,

முன் மாதிரியே இல்லா ஓர் ஆட்சித் தலைவர்,

முன் மாதிரியே இல்லா ஓர் ஆன்மீக குருநாதர்,

முன் மாதிரியே இல்லா ஓர் இறைத்தூதர்

 என பல்வேறு பரிமாணம் கொண்டு மனித சமூகத்திற்கு முன் மாதிரியாய் வந்த மகத்தான ஆளுமை அவர்கள் என்பதை மனதில் கொள்வது அவசியம்.





Marhaba Mustapha Lyrics

Marhaba, Ya Mustafa
Pleasant Greetings! O Mustafa (prophet Muhammed)

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him (prophet Muhammed)

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Aye Habib-e-Khuda
O, beloved of the God

Ahmad-e-Mujtaba
Praiseworthy of being the Chosen One

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Sooraj ka uthna, Chand chamakana
The rising of the Sun, the light of the Moon ||| you are an integral, active part of the Divine plan/destiny

Hai aap se
Is all due to you

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Fiza mein thandak, Phool mehekna
The coolness in the breeze, the fragrance in the flower

Hai aap se
Is all due to you

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Saara sadhkha aap ka, Saara sadhkha aap ka
All the blessing are due to you, All the blessings are due to you

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Marhaba, Ya Mustafa
Pleasant Greetings! O Mustafa

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Mutmayeen hai qalb mera, Zikr se aapke
My heart/mind/body/soul finds peace/satisfaction by `remembering’ you

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Dil nahin chahata nazar hataoun, Roze se aapke
My heart does not want me to see any other sight, except your shrine

Kuch bhi nahin mujhse raha, Kuch bhi nahin mujhse raha
I’m incapable of doing anything, I’m incapable of doing anything

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Marhaba, Ya Mustafa
Pleasant Greetings! O Mustafa

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Salallahu-alaihi-wa-sallam
Peace be upon him

Naat Information
Album: Al-Risalah(2008)
Track: Marhaba Mustapha
Composer: A.R. Rahman
Lyrics: Hazrat Khaja Syed Shah Ameenullah Hussainy (R.A)




உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: