Shibli (rah) said : Wadu is separation and Salat is
adhesion.
Man lam yanfasal lam yattasal. “ He who did not separate
did not adhere".
அபுபக்கர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் சொல்கின்றார்கள் : ஒலு என்பது பிரிவு. தொழுகை என்பது இணைப்பு. யார்
பிரியவில்லையோ அவர்கள் இணைப்பை பெற மாட்டார்கள்.
என்ன ‘பிரிவு’
இது? என்ன ‘இணைப்பு’
இது?
உடல், உள்ளம், உயிர் என ஏதுமற்ற
“ஃபக்கீர்” என்பது தான் நம் சொந்த நிலை.
ஒவ்வொரு மனிதனுக்கும் (அவன் வெளி வருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன் இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலையிலிருந்தான். (அல் குர்ஆன் 76:1) என்று இந்த நிலையை இறைவேதம் குறிப்பிடுகின்றது.
இன்ன பொருள் என்று சொல்ல முடியாத நமக்கு 'உடல், உள்ளம், உயிர் கொண்ட இந்த இருப்பு' ஒவ்வொரு நொடியிலும்
இடைவிடாமல் இறைவனால் இரவலாய் வழங்கப்படுகின்றது.
நம்மையே நமக்கு வழங்கும் நாயன் நாம் எங்கிருந்த போதும் நம்மோடிருக்கின்றான். அவன் நம்மோடு இருப்பதால் தான் நாமே காட்சியளிக்கின்றோம்.
"வஹுவ மா அகும் ஐனமா குன்தும் - அவன் உங்களுடன் இருக்கின்றான் நீங்கள் எங்கிருந்த போதும்." என்கிறது இறைவேதம்.
நம்மையே நமக்கு வழங்கும் நாயன் நாம் எங்கிருந்த போதும் நம்மோடிருக்கின்றான். அவன் நம்மோடு இருப்பதால் தான் நாமே காட்சியளிக்கின்றோம்.
"வஹுவ மா அகும் ஐனமா குன்தும் - அவன் உங்களுடன் இருக்கின்றான் நீங்கள் எங்கிருந்த போதும்." என்கிறது இறைவேதம்.
உடனிருந்த நம்மை நமக்கு வழங்கும் இறைவனை,
"காயுமுன் ஃபி நஃப்ஸிஹி
வ முகவ்விமுன் லி கைரி ஹி" என்பார்கள் ஆன்மீக அறிஞர்கள்.
தன்னைக் கொண்டே தான் சுயமாக இருப்பதுடன்
தானல்லாதவற்றுக்கு 'இருப்பை' வழங்குபவன் என்பது இதன் பொருள்.
வாழ்வின் போக்கில் இந்த ‘இரவலான
இருப்பின்’ நுட்பம் நம் மனதை விட்டு அகன்று விடுகின்றது. இது ஒரு வகையான அமானித மோசடி.
இதனால் “நான்”, “எனது” என்ற Possessiveness நம்மை ஆட்கொண்டு மனதால் இறைவனை பிரிந்தவர்களாக நிம்மதியற்று
வாழ்கின்றோம்.
இந்த மறதியிலிருந்து ஞாபகத்தின் பக்கம் அழைக்கிறது தொழுகை.
இறைக்காதலர்களின் தொழுகை ஒலுவில் இருந்தே ஆரம்பித்து விடுகின்றது.
ஒலு என்பதில் உடல் உறுப்புகள்
மட்டும் கழுவப்படுவதில்லை. உடலாலும், உள்ளத்தாலும் செய்த பாவங்களும் கழுவப்படுகின்றது.
உள்ளத்தால் செய்யும் அமானித
மோசடியிலிருந்து மீண்டவர்களாய், இறைவனுக்கு சொந்தமானவைகளை இறைவனுக்கே ஒப்படைத்து, நமது ஏதுமற்ற
“ஃபக்கீர்” என்ற தேவையுறும் நிலை ஒலுவில் நினைவில் நிறுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு நம்மை இறைவனிடம்
ஒப்படைக்கும் போது “நான்”, “எனது” என்ற Possessivenessம் அங்கே கழுவப்படுகின்றது.
Namazay ashiqan tark i
wajud ast.
The Prayer of lovers is relinquishment of self.
The Prayer of lovers is relinquishment of self.
Possessivenessஐ விட்டு அடையும் இந்த மீட்சியைத் தான் ‘ஒலு என்பது பிரிவு’ என குறிப்பிடப்படுகின்றது.
தொழுகையில்
“அல்லாஹு
அக்பர்” என தக்பீர் கட்டுகின்றோம். இதை தக்பீர் தஹ்ரீமா என்பார்கள். இறைவனை தவிர உள்ள அனைத்தும் தொழுபவருக்கு விலக்கப்பட்டதாகிவிடும் (ஹராமாகிவிடும்) நேரமது.
அந்த நிலையில் யாரும் அவரோடு பேசவோ, வேறு வகையில் தொடர்பு கொள்ளவோ மாட்டார்கள். ஒரு வகையில் ஒப்பீட்டறிவதற்காக இந்த உவமையை
கூறலாம்.
ஒரு
மணமகன் மணமகளை சந்திக்க தனியறைக்கு செல்லுகின்றான் அந்த சந்திப்பின் போது மரியாதைக்குரிய அவனைப் பெற்ற தாய், தந்தையராக இருந்தாலும் அவர்களும் அறைக்கு வெளியே தான் இருப்பார்கள்.
'அல்லாஹ்
அக்பர்' எனும் தக்பீர் தஹ்ரீமாவும் ஒரு வகையில் கதவடைப்புதான்.
அனைத்து
சிருஷ்டிகளின் தொடர்பை விலக்கி தொழுபவனும், தொழப்படுவனும் 'ஆசீக் - மஃசூக்காக' தனிமைப்படும் விஷேச
தருணமது.
அடுத்து
தொழுகையில் நுழைந்த இறைகாதலர் தரிசன ஆவலுடன் இறைவனை முன்னோக்கியவனாய்.
‘இன்னி வஜ்ஜஹத்து வஜ்ஹியலில்லதி’ என ஓதுகின்றார்.
‘வஜ்ஹ்’ என்றால் முகத்தை குறிக்கும்.
“நிச்சயமாக நான் வானங்களையும்,
பூமியையும் படைத்த ஒருவனின் (உள்ளமையின்)
பக்கம் என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் ஏகத்துவநேசன் (ஹனீஃப்). நான் இணைவைப்பவர்களில் சேர்ந்தவன் அல்ல (6:79) என இப்ராஹீம் நபி (அலை) கூறும் இறைமுன்னோக்கல் தான்
தொழுகையின்
முக்கிய அம்சம்.
மிஃராஜில்
இறை சந்திப்பை பாக்கியமாய் பெற்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம், “தொழுகையை நம்பிக்கையாளர்களுக்கு
மிஃராஜ் (அஸ்ஸலாத்து மிஃராஜில் மூஃமினீன்) என்றார்கள்.
தொழுபவனின்
முகம் நமக்கு தெரியும். தொழப்படுவனின் முகம் எங்கே இருக்கிறது? அதை எப்படி முன்னோக்குவது?
தொழப்படுபவனின் முகம் எங்கும்
இருக்கிறது. “எங்கு திரும்பினாலும் இறைவன் திருமுகம் (Being) ” என்கிறது இறைவேதம்.
இறைத்திருமுகத்தை (வஜ்ஹுல்லாவை)
முன்னோக்க இறைஞானம் அவசியம்.இறைஞானம் பெற்றவர்கள் ஐவேளை தொழுகையில் மட்டுமல்ல. தொழுகைக்கு
வெளியிலும் இறைவனை முன்னோக்கியே வாழ்கின்றார்கள். இந்நிலையை 'ஸலாத்திஹிம் தாயிமூன் (Eternal Prayer)' என்கிறது இறைவேதம்(70:23). சுருக்கமாக
சொன்னால் எல்லா நிலையிலும் இறைவனையே முன்னோக்கி தன் வாழ்வின் அனைத்து தேவைகளையும் இறைவனிடமே பெற்றுக் கொள்கின்றார்கள்.
"நாயனான அல்லாஹ்வைப் பற்றியல்லாத
வேறு சிந்தனை எதுவும் எழாவண்ணம் தூய்மையுடையவனே சூஃபியாவான் என்கின்றார்கள்" கௌதுல் அஃலம்
முஹைய்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) (நூல்: பத்ஹுர் ரப்பானி).
அத்தகைய இறைக்காதலர்கள் பாடும் இந்த கவிதையை பாருங்கள்:
ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்!
மாஃபி கல்பி கைருல்லா!
நூரே முஹம்மது ஸல்லல்லாஹ்!
நூரே முஹம்மது ஸல்லல்லாஹ்!
ஹக் லாயிலாஹா இல்லல்லாஹ்!.
“ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்!”
என்று இறைவனை புகழும் இறைகாதலர்கள்
“மாஃபி கல்பி கைருல்லா!” என்று
தங்கள் உள்ளத்தில் அல்லாஹ் அல்லாதவற்றிற்கு இடமில்லை என அறிவிக்கின்றார்கள்.
ஏன் அவர்கள் உள்ளத்தில் அல்லாஹ்
அல்லாதவற்றிற்கு இடமில்லையாம்?
ஏனென்றால் அவர்கள் உள்ளம் முழுவதும்
நிறைந்திருப்பது - “நூரே முஹம்மது ஸல்லல்லாஹ்”
ஒளிபொருந்திய விளக்கு (சிராஜும் முனீர்) என இறைவனே குறிப்பிடும் நபியவர்களை அகத்தில் பெற்ற
காதலர்கள்.
“எங்கு திரும்பினாலும் இறைவன்
திருமுகம் (Being) ” என்ற இறையுண்மைக்கு சாட்சியாளர்களாய் மெய்யுறுதியுடன் சொல்கின்றார்கள்
ஹக் லாயிலாஹா இல்லல்லாஹ்.
தன்னைத் தவிர இலாஹ் யாருமில்லை
என அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.அவ்வாறே வானவர்களும், வேதஞானம் உடையவர்களும் சாட்சி சொல்கின்றனர்.(3:18)
இறைவா! எங்களுக்கும் அந்த பாக்கியத்தை வழங்குவாயாக! ஆமீன்!
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
No comments:
Post a Comment