தோழமையுடன்

Saturday, December 24, 2011

ஒரு பைசா செலவளிக்காமல் உங்கள் நோய் குணமாக வேண்டுமா?


ஹீலர் பாஸ்கர்
என்ன இது புல்லாங்குழல் ஆன்மிக தளம் என நினைத்தால் லேகிய வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டதாக தெரிகிறதே என சிலர் அவசரமாக முடிவெடுத்து விட கூடாது என்பதால் தான் தலைப்பில் 'ஒரு பைசா செலவளிக்காமல்' என முன்னெச்சரிக்கையாக சேர்த்தேன்.

இறைநம்பிக்கைக்குப் பிறகு உடல் நலத்திற்காக   இறைவனை இறைஞ்ச சொல்கின்றார்கள் நபிகள் நாயகம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் ஆக உடல் நலம் பேணுவது ஆன்மிகத்தின் தலையான அம்சம். சரி விசயத்துக்கு வருகின்றேன்.

Wednesday, December 21, 2011

பூட்டிக் கிடந்த கோயிலை திறக்க உத்தரவிட்ட பாக்கிஸ்தான் நீதிமன்றம்!



பாக்கிஸ்தானில் நடக்கும் கொலையை ‘இந்து வியாபாரி வெட்டிக் கொலை’ ‘இந்து மருத்துவர் வெட்டிக் கொலை’ ‘இந்து வியாபாரியிடம் வழிப்பறி’ என்று
60 ஆண்டுகள் மூடியிருந்த கோயிலின் திறப்பு விழா
எழுதி அங்கே கொலையோ, கொள்ளையோ அதனால் பாதிக்கப்படுவது இந்துக்கள் மட்டுமே என்ற தேற்றத்தை ஊடகங்கள் விதைக்கின்றது. 
ஆனால் உண்மை என்னவோ நேர்மாறானது அங்கு நடக்கும் கொலையும், கொள்ளைகளும் இனம் பார்த்து நடப்பதில்லை என்பதற்கு நாளும் வெடிகுண்டுகளால் சாகும் இஸ்லாமியர்களின் சடலங்கள் சான்றாக உள்ளன.


Sunday, December 18, 2011

சிறுகதை எழுதுவது எப்படி?



ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்  எழுத துவங்கியபோது என்னை refresh பண்ணிக் கொள்வதற்காக சுஜாதா,ஜெயமோகன் என பலர் சொல்லி காட்டியதிலிருந்து எனக்கு நானே எழுதி கொண்டவை இவை. உங்களில் சிலருக்கும் பயன்படலாம் என்பதால் சுஜாதாவுக்கும், ஜெயமோகனுக்கும் நன்றியுடன் இதை பகிர்ந்து கொள்கின்றேன்.

Tuesday, December 13, 2011

அல் குர்ஆனின் ஒளியில் அகப்பார்வை


 “குர்ஆனை வாசித்தால் நன்மை கிடைக்கும். விளங்கினால் (இறை நேச) பதவிகள் கிடைக்கும். ஆராய்சி செய்தால் இறைவனே கிடைப்பான்.”- என்பார்கள் ஷெய்குனா நூரி ஷாஹ் (ரஹ்) அவர்கள்.

குறிப்பு:  யார் அந்த விநோத மனிதர்? கட்டுரையை வாசித்து விட்டு தொடர்வது நலம்.

வேதத்தை வாசித்தால் இறையருள் கிடைக்கும் என்பது சரி இறைவனே கிடைப்பானா?

Monday, December 12, 2011

புலிகள் துரத்துகின்றன – சூஃபி ஞானம் பற்றி பா.ராகவன்


டாக்டர் நாகூர் ரூமியின் சூஃபி வழி ஒரு எளிய அறிமுகம் நூல் குறித்து  பிரபல எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் அறிமுக உரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

உறக்கத்துக்கு பதிலாக உறக்கமின்மை, செழுமைக்கு பதிலாக வறுமை, பெருமைக்கு பதிலாக எளிமை என நீங்கள் மாற்றிக் கொள்ளாதவரை நீங்கள் சூஃபிகளின் கூட்டத்தில் இணைய முடியாது - இப்ராஹீம் இப்னு அத்ஹம்.

Wednesday, December 7, 2011

'நிலவு ததும்பும் நீரோடை' - கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்! - கவிஞர் தாஜ்



கீற்று இணைய இதழில் முன்பு வெளிவந்த கவிஞர் தாஜின் விமர்சனம் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. இதோ தாஜின் அருமையான விமர்சன வரிகள் உங்கள் பார்வைக்கு....

ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு சென்னை சென்றிருந்தபோது, மணிமேகலைப் பிரசுர அலுவலகத்திற்குப் போகவேண்டிய சூழல். அவர்கள் பிரசுரித்த ஓர் கவிதைத் தொகுப்பு குறித்து அங்கே செய்தி பரிமாறப்பட்டது. நிலவு ததும்பும் நீரோடை / கவிதைத் தொகுப்பு / பஜிலா ஆசாத் / புதுக்கவிதை உலகத்திற்கு மேலும் ஓர் புதிய கவிஞர் என்றார்கள். அந்த கவிஞரின் கவிதையை நேற்றுவரை நான் வாசித்தது இல்லை. நம் சிற்றிலக்கிய இதழ்களில் எழுதியதாகவும் தெரியவில்லை. கவிஞரின் பெயரே கூட அந்த தருணம்தான் அறிய வந்தேன். பாராத அந்த கவிதைகளை வாசிக்க ஆர்வம் கூடியது. மணிமேகலையில், அந்தத் தொகுப்பு வேண்டுமே என்றபோது, என் ஆர்வத்திற்கேற்ற பதிலைத் தந்தார்கள். "அது சென்ற வருடத்தியப் பிரசுரம், விற்றுத் தீர்ந்து விட்டது!"

Monday, December 5, 2011

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லிம்கள் - வாஸந்தி


"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக,  மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது பயங்கரவாத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் வெளிப்படுத்திய இந்த நியாய உணர்வினை “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லிம்கள்”  என்ற தலைப்பில் எழுத்தாளர் வாஸந்தி  எழுதியிருந்தார். உயிர்மை நடத்தும் உயிரோசை டிசம்பர் 2008 வார இணைய இதழில் வெளி வந்த அந்த கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.


Sunday, December 4, 2011

இஸ்ரேல் : அநீதியின் மீது கட்டப்பட்ட தேசம் - க. திருநாவுக்கரசு - புதுதில்லி



நம் நீதியுணர்வின் சுரணை என்பது இன்றைய புத்தம் புதிய அநீதிகளுக்கெதிராக மட்டும் தற்காலிகமாக குரல் எழுப்பும். 70 வருடங்களாய் பலஸ்தீனத்தின் மீது இழைக்கப்படும் அநீதி என்பதோ டூத்பேஸ்ட் விளம்பரத்தைப் போல நமக்கு  சகஜமான ஓரு நிகழ்வாகி விட்டது.

காலச்சுவடு மார்ச் 2009ல் க.திருநாவுக்கரசு எழுதிய  இந்த கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. நீண்டகாலமாய் தொடரும்  துயரம் என்பதால் கட்டுரை சிறிது நீள்கிறது. பொறுமையுடன் படிக்கும் உங்கள் சிரத்தையை வேண்டிய வண்ணமாய்..

இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டல்!


 "இலவச ஆன்லைன் கல்வி"க்காக ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்காக அனைத்து பாடநூல்களையும் தொகுத்து அழகாக ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Wednesday, November 30, 2011

‘மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையமாட்டாது’ - அனார் பேட்டி


கவிதை எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு சகோதரி அனாரின் பேட்டியில் விசயமிருக்கிறது என்பதால் வார்ப்புகள் இதழிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.

Tuesday, November 29, 2011

இஸ்லாத்தில் இசை – நூல் அறிமுகம் : ஏபிஎம். இத்ரீஸ்


இஸ்லாத்தில் இசைஎன்ற கருத்தாக்கம் அறபு முஸ்லிம் சிந்தனைப் பரப்பில் மட்டுமல்ல இஸ்லாம் பரவிய ஆசிய சமூகங்களிலும் பெரும் வாதவிவாதங்களை இன்றுவரை கிளறிவிட்டுள்ள ஒரு விவகாரம் என்பதை நாம் நன்கறிவோம்.

Saturday, November 26, 2011

கடவுளுக்கு உருவம் இல்லை - வாரியார் சுவாமிகள்


கடவுளுக்கு உருவம் இல்லை என்பது தான் இந்து மத கொள்கை என்கிறார் வாரியார் சுவாமிகள்.  

அருட்கொடையாளர்கள் என்ற தலைப்பில் மகத்தான ஆளுமைகளைப் பற்றி ஆபிதீன் பக்கங்களில் தொடர் கட்டுரை எழுதி வரும் மஞ்சக்கொல்லை ஹமீது ஜெஹபர்அண்ணன் அவர்கள் தந்துதவிய தினமணி கட்டிங் இணைப்பு நன்றியுடன் கீழே தரப்பட்டுள்ளது.

நக்கீரர் குலாம் காதிறு நாவலர் - ஜே.எம். சாலி


'சமநிலைச் சமுதாயம்' இதழுக்கும், அதில் வந்த இந்த தகவலை மின்னஞ்சலில் அனுப்பிய  நண்பர் ஈமான் டைம்ஸ் முதுவை ஹிதாயத்துக்கும் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

Saturday, November 19, 2011

இறந்தவர் பேசிய வார்த்தைகள்


நான் எவ்வளவு உரக்க கத்தி பேசினாலும் மனிதர்கள் யாருக்கும் கேட்கப் போவதில்லை. நான் இறந்து போய் எத்தனை காலம் கடந்தது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை இப்போது தான் நான் இறந்து போனேனோ…..

Thursday, November 17, 2011

மாலேகான் குண்டுவெடிப்பு: அப்பாவிகளை சிறையில் அடைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா?


 இஸ்லாமிய தீவிரவாதி, இந்து தீவிரவாதி என தீவிரவாதிகளுக்கு மதவர்ணம் பூசி நேசமும், பகையும் பாராட்டும் நோய் மனப்பான்மை ஒழியட்டும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபடுவோம். அதே நேரத்தில் ஆயிரம் குற்றவாளிகள் தப்பி விடலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதையும் நினவில் கொள்வோம். ஒரு சாதாரண மனிதனின் நிம்மதியான வாழ்வு தவறான குற்றச்சாட்டுகளால் சிறைகம்பிகளுக்கிடையே சிதைக்கப்படும் போது அவனும் அவன் குடும்பமும் படும் வலியை,வேதனையை போக்கி எது தான் ஈடு செய்யும்.  

Wednesday, November 16, 2011

கலைந்து போன கனவு ராஜ்ஜியம் –சிதம்பர பிள்ளை சிவக்குமார்


 'ஆபிதீன் பக்கங்களில்' வந்த இந்த சிறுகதையை படிப்பதுடன் கட்டாயமாக அதன் பின்னூட்டங்களையும் அவசியம் படியுங்கள். இலங்கையை சேர்ந்த நம் அன்பு சகோதர சகோதரிகளின் உணர்வுகள் மாம்சம் வார்த்தையானது போல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 


Thursday, November 10, 2011

வழிகாட்டுகிறது கோவை! - ஆளுர் ஷா நவாஸ்



நாடு அதை நாடு
இந்தியா…
என் தாய்நாடும் அல்ல
தந்தைநாடும் அல்ல
இந்தியா…
என் நாடு!
                   கவிஞர் இஜட். ஜபருல்லா

இந்து, கிருஸ்தவ சகோதரர்களுடன் முஸ்லிம்கள் கைகோர்த்து சகோதரர்களாக இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும்  என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அதே நேரத்தில் கல்வி, வேலை வாய்ப்பு என எல்லா வகையிலும் போதிய பிரதி நிதித்துவம் இல்லாமல் பின் தங்கி நிற்கும்  சிறுபான்மை சமுதாயம் ஒருங்கிணைந்த ஓட்டு வங்கியாக தங்களை நிறுவிக் கொள்வதை நியாய உணர்வு உள்ளவர்கள் பிரிவினைவாதமாக கருதமாட்டார்கள். 


Thursday, October 20, 2011

அன்னா ஹஸாரேவின் ஜனலோக்பால் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்!

 
ஆபிதீன் பக்கங்களின் வெளிவந்த எனது இந்த கட்டுரையை அவரது அறிமுகம் மற்றும் போனசாக இணைத்த குறிப்புகளுமாய் நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன். 


Wednesday, October 19, 2011

ஆன்மீக குரு சகவாசத்தின் நோக்கம்

ஆன்மீக குரு சகவாசத்தின் நோக்கம் என்ன? அனுமதிக்கபட்ட உலக இன்பங்களை துறக்கும் துறவறமா? என்றால் பதில் நிச்சயமாக இல்லை என்பது தான்.  

இறைனிடம் லட்சக்கணக்கில் வேண்டுமென பிட்சைக்காரத்தனமாக கேட்காமல் கோடி கணக்கில் வேண்டுமென கோரிக்கை வையுங்கள். நம் அல்லாஹ் பிச்சைகாரனல்ல சர்வலோக சக்கரவர்த்தி என்பார்கள் என் ஆன்மீக குருநாதர்  ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள்.

Tuesday, September 27, 2011

How to learn? எளிமையாக படிக்கும் முறை!!

கல்வி களஞ்சியம் ஒரு பயனுள்ள தளமாக தெரிகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு. எளிமையாக படிக்கும் முறை  பற்றிய இந்த  கட்டுரை கல்வி களஞ்சியம் வலைதளத்திலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

 All credit goes to Kalvikalanchiyam.com only.

Wednesday, September 14, 2011

இறை கருணை - ஒரு சூஃபி ஞானியின் விளக்கம்

  
சங்கைகுரிய என் குருநாதர் ஆரிபுபில்லாஹ் பைஜீ ஷாஹ் நூரி (ரஹ்)
அவர்களின் சங்கைக்குரிய கலீபா ஆரிபுபில்லாஹ்  சுபூரிஷாஹ் ஃபைஜி - பொரவச்சேரி அவர்கள் அல்லாஹ்வின் கருணை மற்றும் வணக்கம் வழிபாடு நப்ஸ் என்ற தலைப்புக்களில் ஆற்றிய உருக்கமான உரைகள்


Sunday, September 4, 2011

பயணங்கள்


 திண்ணை.காமில் வந்த என் கதை நன்றியுடன் மீளபதிவு செய்யப்பட்டுள்ளது_ ஒ.நூருல் அமீன்

கடுமையான டிராபிக் ஜாமில் ஹனீஸ்.

எப்படியும் பள்ளிகூடத்தை சென்றடைய குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும்.

+2 கணித தேர்வு இன்னும் 10 நிமிடத்தில் ஆரம்பித்து விடும்.

Saturday, August 20, 2011

இறைஞான ஒளிவிளக்கு


நேற்று புல்லாங்குழலுக்கு 'பெயரில்லாமல்' ஒருவரிடமிருந்து இரண்டு கேள்விகள் வந்திருந்தன. மொட்டை கடிதாசி போன்று பெயரில்லாமல் வெளியிடும் கருத்துகளை தவிர்த்து விடலாமா என எண்ணினேன். ஆயினும் அவர் என் ஷைகு அவர்களைப் பற்றி அவர்களுடன் நேரடி அறிமுகம் இல்லாதவர் கூறிய கருத்தினால் மனம் குழம்பியிருப்பதை போல் தோன்றியது. உங்கள் ஷைகு அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டிருந்தார். யாரைப் பற்றி யார் கருத்து சொல்வது என நினைத்தாலும். அதை சொல்லாமல் இருப்பதும் தவறாகலாம் என்பதால் இந்த பதிவு. மற்றபடி வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை.



Wednesday, August 17, 2011

நோன்பு என்பது….


சங்கை மிகும் "நூரியா தரீக்கா"(ஷிஸ்தியுல் காதிரி) ஆன்மீக பாதையில் நடைபயிலும் முனைவர் ரமீஸ் பிலாலி அவர்களின் ஞானம் தோய்ந்த சிந்தனைகள் அவரது பிரபஞ்சக்குடில் தளத்திலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Monday, August 15, 2011

நாடு அதை நாடு

அழுத்தமான நேசத்தை வெளிப்படுத்தும் இஜட்.ஜெபருல்லாவின் இந்த கவிதை ஆபிதீன் பக்கங்களிலிருந்து நன்றியுடன் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நோன்பாளியின் படித்தரங்கள்



நோன்பு வைப்பவர்களை மூன்று படித்தரமாக வகைப்படுத்தி கூறுகின்றார்கள் ஆன்மிக பெரியார்கள்.  

  1. உண்ணல், பருகல், உடலுறவு இவைகளை மட்டும் தடுத்து கொள்ளுதல் பாமரர்களின் நோன்பு.
  2.   உண்ணல், பருகல், உடலுறவு இவைகளை தடுத்து கொள்ளுதலுடன் அதிகமதிகம் நற்செயல்கள் புரிவதும், பொய் பேசுதல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல் போன்ற பாவச்செயல்களை விட்டும் தன்னை காத்து கொள்ளுவது நல்லடியார்களின் நோன்பு.  
  3. மேற் கூறிய இரண்டு நிலைகளுடன்  இறைவனைத் தவிர வேறு பக்கம் தங்கள் கவனம் திரும்புவதை விட்டும் காத்து கொள்ளுதல் நபிவழியில் அகப்பார்வை அடைந்த ஆரிஃபீன்கள் என்னும் இறைஞானிகளின் நோன்பு.

இது வேறு வேறு மூன்று வகை பிரிவினரை பற்றி கூறுவதாக  காட்சியளித்தாலும் யோசித்து பார்க்கும் வேளையில் நாமே சில நேரம் பாமர நிலையிலும், சில நேரம் நல்லடியார்களின் நிலையிலும் இருப்பதை உணர முடிகிறது. அத்துடன் இறைவனைத் தவிர வேறு பக்கம் தங்கள் கவனம் திரும்புவதை விட்டும் காத்து கொள்ளும் ஆரிஃபீன்கள் என்னும் இறைஞானிகளின் நிலையை நோக்கி முடிந்த அளவு முன்னேற முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் அது தான் நபிவழி அகப்பார்வையாய் இருக்கின்றது. அதைப் பற்றி இந்த கட்டுரையில் சுருக்கமாக பார்ப்போம்.

எது கவிதை?

நேற்று இலங்கை வானொலியினரால் வாசிக்கப்பட்ட “எது கவிதை..?” எனும்  சபீரின் கவிதையை படிக்குமுன் ஆரம்பமாக 'கவிதைப் புரிதல்' பற்றி   சபீரின் சில விளக்கங்கள்:

அகப்பார்வை - ஓர் அறிமுகம்


மௌலவி டாக்டர் செய்யது மஸ்வூது ஜமாலி முதல்வர், புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி, வண்டலூர், சென்னை அவர்கள் வழங்கிய அணிந்துரை....

நாகூர் ரூமியின் பார்வையில் “சூஃபி கோட்பாடுகள்”



இமாம் குஷைரியின் ஓர் அற்புதமான ஆன்மிக நூல் “சூஃபி கோட்பாடுகள்” என்ற பெயரில் முனைவர் ரமீஸ் பிலாலி ( தமிழ் விரிவுரையாளர், ஜமால்முஹம்மது கல்லூரி, திருச்சி) அவர்களால் தமிழில் மொழிபெயர்பு செய்யப்பட்டுள்ளது. ரமீஸ் பிலாலி அவர்கள்  ஆன்மிக பாதையில் நடை பயில்பவர் (நூரியா ஆன்மிக தொடரில் உள்ள சங்கைக்குரிய  ஷெய்க். பிலாலி ஷாஹ் ஜுஹுரி என்னும் ஆன்மீக குருவின் சீடர்) என்பதால்  மொழிபெயர்ப்பு மிகவும் கவனமுடன் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தகங்களைப் போல் மிகவும் நேர்த்தியான வடிவில் வெளிவந்திருக்கும் இந்த நூலை பற்றி முனைவர் நாகூர் ரூமி அவர்களின் அறிமுகம் உங்கள் பார்வைக்கு…..


Sunday, August 14, 2011

காதலிக்க கற்றுக் கொள்ள ஒரு மாதம்


மனிதர்களை தன் காதலர்களாக – நேசர்களாக ஆக்குவதற்கு வருடந்தோறும் ஒரு மாதத்தையே கருணையுடன் தந்துள்ளான் இறைவன். அந்த மாதத்திற்கு பெயர் ரமளான்.
'இறையச்சம் கொண்டவர்களேயன்றி இறைநேசர்கள் இல்லை' என்கிறது இறைவேதம்.
அச்சம் கொண்ட இதயத்தில் எப்படி நேசம் இருக்கும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

Friday, August 12, 2011

தஸவ்வுப் - அதன் தோற்றம், வளர்ச்சி, பங்களிப்புகள்

குறிப்பிடத் தக்க இஸ்லாமிய அறிஞர்களில்  ஒருவரான டாக்டர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இலங்கையில் உள்ள நளீமியா கல்லூரியின் டைரக்டராவார்கள். 

இஸ்லாமிய ஆராய்சியாளரான அவர்களின் 'தஸவ்வுப்' பற்றிய  கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. இது தஸவ்வுப் பற்றிய தவறான புரிதல்களை உடையவர்களுக்கு விளக்கம் அளிப்பதாக உள்ளது.