தோழமையுடன்

Showing posts with label திக்ர். Show all posts
Showing posts with label திக்ர். Show all posts

Sunday, October 11, 2015

பொக்கிசக் கடல்!


என் குருநாதரின் அருமை புதல்வர் ஆரிஃப்பில்லா நூராணிஷாஹ் ஃபைஜி அவர்கள் முன்னிலையில் இந்த வார திக்ரு மஜ்லீசில் பேசிய எனது சிற்றுரையின்  கட்டுரை வடிவம்:

பாதுகாப்பு வேண்டும் என்றால் கரையில் நில்.
பொக்கிசம் வேண்டும் என்றால் கடலினுள் செல் என்றார்கள் இமாம் சஆதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி.

அது என்ன கடல்?
ஆரிஃப்பில்லா நூராணிஷாஹ் ஃபைஜி

Saturday, May 11, 2013

திரை நீக்கும் தொழுகை!

 தொழுகை “பாவம்” எனும் அழுக்குகளையும் வேற்றுமையினால் (கைரியத்*) ஏற்படும் மனகளங்கங்களையும் அல்லாஹ்தாலாவின் தரிசனையை விட்டும் தூரப்படுத்தும் சிருஷ்டிகள்(அனைத்தையும்) விட்டு மனதை பரிசுத்தபடுத்துகிறது. 

வேற்றுமைகளை விட்டும் சுத்தமாகும் தருணம் கல்பின் திரைகள் நீங்கிவிடுகின்றன.- (நூல்:ஹிகம்).

"கைரியத*" என்பது  இறைவனை விட்டு மனதால் பிரிந்து தனியே தன்னை விளங்கும் நிலையை குறிக்கும். இதை பற்றிய ஆழமான விளக்கத்தை முறையான இறைஞான அறிஞர்களை அணுகி பெறுதல் நலம். இந்த கட்டுரையை விளங்க இந்த அளவு விளக்கமே போதுமானது.

 0 0 0





இந்திய பெருங்கடலில் உள்ள சிசெல்ஸ் தீவில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது என் சங்கைக்குரிய குருநாதர் ஃபைஜிஷாஹ்(ரஹ்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார்கள். அப்போது அவர்கள் செய்யும் வணக்கங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது.  தனியே தொழக் கூடிய   தொழுகையில் வேத வசனங்களை ஓத ஆரம்பித்தால் உலகை மறந்த பேரின்பத்தில்  லயித்து விடுவார்கள். இறைவேதத்தின் ஆழமான அர்த்தங்களில் மூழ்கிய பேரின்ப நிலையில் ஒவ்வொரு வசனத்தையும் மீண்டும் மீண்டும் பல முறை ஓதுவார்கள்.  அவர்கள் தொழுது முடிக்க வெகு நேரமாகிவிடும். இதை பல முறை பார்த்து வியந்திருகின்றேன்.

அப்போதெல்லாம் அவர்கள் இவ்வளவு லயித்து தொழுகின்றார்கள். நாம் எத்தனை அலங்கோலமாய் தொழுகின்றோமே! அதன் காரணம் என்ன என்ற சிந்தனை என்னை வாட்டும்.

Thursday, December 6, 2012

நிம்மதி அது உங்கள் Choice!

சிந்தனையின் கால்கள் மரக்கால்கள்.
மரக்கால்களின் நடை பலகீனமானது.
                           _ மௌலானா ரூமி (ரஹ்)

சிந்திக்க மாட்டீர்களா? உங்கள் உள்ளங்கள் பூட்டியா வைக்கப்பட்டுள்ளது? என்பது சிந்தனைக்கான இறைவேதத்தின் அழைப்பு.
 
சிந்தனை செய் மனமே! என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அருமையான உபதேசம். அதை விட அவசியம் எதை சிந்திப்பது என்பது!.

எதிரே மனைவி இருக்கும் போது அலுவலக சிந்தனை. அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டின் சிந்தனை.

இறைவனை முன்னோக்கி தொழுகையில் நின்றால் கூட பக்கத்தில் தொழுபவர் ஏனிப்படி விரலை அசைக்கின்றார்?.  வாசலில் கழற்றி வைத்த புது செருப்பு பத்திரமாக இருக்குமா?. இந்த ஹஜ்ரத் ஏன் இவ்வளவு பெரிய சூரா ஓதுராரு?.

 இப்படி சிந்தனை…சிந்தனை….சிந்தனை ….எண்ணங்களின் இடை விடா கூக்குரல்.

இந்த சிந்தனை வழியே மனம்  பேசிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையை முன்வைத்து “மனதின் உள்ளே ஒரு வாய் சதா பேசிக் கொண்டே இருக்கின்றது கவனித்தீர்களா!” என்பார்கள் என் குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்).