தோழமையுடன்

Wednesday, September 24, 2014

ஒரு வேளை நீங்கள் காணாமல் போனால் அதற்கு நான் பொறுப்பல்ல!.


 படைக்கப் படும் முன் சிருஷ்டிகளின் நிலை நத்திங் (Nothing) அல்ல நோ திங் (No thing) _ ஆன்மீக குருநாதர் ஹக்கிமிஷாஹ் ஃபைஜி
 

இதன் விளக்கத்தில் சீரியசாக உள்ளே புகும் முன் கொஞ்சம் முல்லா…

தி கிரேட் முல்லா நாஸீருத்தின்…

ஒரு முறை முல்லா நஸீருத்தீன் ஒரு விழாவுக்கு சென்றிருந்தார். அந்த விழாவில் கூட்டம் நிரம்பி வழிந்தது, அன்று இரவு சத்திரத்தில் எல்லோரும் படுத்துறங்கினர். அந்த கூட்டத்தில் நாம் காணாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலை முல்லாவிற்கு வந்தது. அதனால், தூங்கும் முன் தன் காலில் ஒரு கருப்பு கயிறை கட்டிக் கொண்டார். கயிறை கட்டிக் கொண்டிருப்பது தான் “நான்” என தன் அடையாளத்தை தனக்குத்  தானே சொல்லிக் கொண்டு, இனி நான் காணாமல் போனாலும் கயிறை வைத்து கண்டு பிடித்துவிடுவேன் என்று மன நிறைவுடன் படுத்துறங்கத்  துவங்கினார்.

 பக்கத்திலிருந்து இதை கேட்டு கொண்டிருந்த ஒருவர், முல்லா நன்கு உறங்கியவுடன் முல்லாவின் காலில் இருந்த கயிற்றை கழற்றி தனது காலில் கட்டிக் கொண்டு  உறங்கிவிட்டார்.

Monday, September 15, 2014

முகநூலும் ஆன்மீகத் தேடலும்

 ஃபேஸ்புக் எனும் முகநூல் ஆன்மீகம் பகிர்வதற்கான ஊடகமா?
 
ஆன்மீகத்தின் உயர்வை வைத்து பார்த்தால் இதற்கு ‘இல்லை’ என்பது தான் மிகவும் சரியான பதில்.

ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று முகநூல் நல்லதையும் கெட்டதையும் மிக விரைவாக பரப்பும் ஓர் ஊடகமாக சகல துறைகளிலும் கிளைபரப்பி நிற்கிறது. 

அதில் அற்ப விசயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் எத்தனையோ பேர்களுக்கு மத்தியில் ஆன்மீகம் தேடும் என் முகநூல் நண்பர்களை விசேசமாக பாராட்டாமல் இருக்க முடியாது.

அவர்கள் ஆன்மீகம் அறிந்தவர்கள், அறிய முயல்பவர்கள் என ஆன்மிகத்தின் பல தரப்பட்ட நிலையில் உள்ளவர்கள். 

அவர்களுக்காகவும் இன்னும் எங்களைப் போன்ற உங்கள் அனைவருக்காகவும் இந்த பகிர்வு……