தோழமையுடன்

Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts
Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts

Monday, November 4, 2013

தாஜ் தந்த உண்மை கலந்த நாட்குறிப்புகள்

 ‘பால்ய விவாஹம்’ என்ற சிறுகதையை ஆபிதீன் பக்கங்களில் படித்தேன். அதைப் பற்றிய சில எண்ணப் பகிர்வுகள் இவை.

 ‘பால்ய விவாஹம்’ என்ற உடனே அட்ட பழசு – ஹப்பி காலத்து கதை இப்ப எதுக்கு என அவசரப்பட வேண்டாம். விசயம்... புதுசு கண்ணா புதுசு!.

கதைக்குள் புகுமுன் சில முன் குறிப்புகள்….

“இந்த நாவலில் உள்ள அனைத்தும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டு பிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.” – (அ.முத்துலிங்கம் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ நூலின் முன்பக்கத்தில் எழுதிய வரிகள் இவை) 

அ.முத்துலிங்கம் எழுதிய “உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற நூலை ‘சுயசரித தன்மைக் கொண்ட புனைவு’ என அறிமுகம் செய்கிறது உயிர்மை பதிப்பகம். 

Tuesday, May 28, 2013

சிறுகதை - அதன் அகமும் புறமும் - சுந்தர ராமசாமி



 தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில்  சுந்தர ராமசாமி ஆற்றிய உரை ( 25.03.95) நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆர்வம் இருந்தால் எழுதலாம். எல்லோரும் அதைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.அப்படியொரு கட்டாயம்,
சமூகத் தேவை எதுவுமே இல்லை.  சிறுகதை எழுதாமல் சிறந்த பிரஜையாக வாழமுடியும். சிறுகதை எழுதுபவர்களைவிட, படிப்பவர்களைவிட உயர்ந்த மனிதர்களாக அவர்கள் இருக்கவும் கூடும். சிலர் சிறுகதைகள் படிக்காமல் வேறு அற்புதமான நூல்களைப் படித்திருப்பார்கள். சிலர் திருக்குறள் படித்திருப்பார்கள். சிலர் சிலப்பதிகாரம் படித்திருப்பார்கள். கம்பராமாயணம் படித்திருப்பார்கள். நமது தலைவர் திரு. ஹமீத் அவர்களின் தகப்பனார் ஆன செய்க்குத்தம்பிப் பாவலர் இருக்கிறார். மிகப்பெரிய புலவர். இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரிய புலவர்களில் ஒருவர் என்று சொல்லலாம். ஆனால் அவர் சிறுகதையை விரும்பிப் படித்திருப்பாரா என்பது சந்தேகம் தான். அதை வைத்து ஒருவரை நாம் மதிப்பிட முடியாது. 

Friday, July 27, 2012

இலக்கிய வாசிப்பும் குர்ஆன் வாசிப்பும்

இது ரமலான் மாதத்திற்கு முன்பு எழுதியது. 
வேலை பளுவினால் சற்று தாமதமாக வெளியிடப்படுகின்றது.

 சுந்தரராமசாமி தமிழ் இலக்கியத்தில் ஒரு மகத்தான ஆளுமை. அவரது ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ என்ற நாவல் என்னை கவர்ந்த அளவு அவரது ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்னை கவரவில்லை. எழுத்தாளர் ஜெயமோகனோ புளியமரத்தின் கதையை தமிழின் முக்கியமான நாவலாக குறிப்பிடுகின்றார். நல்ல இலக்கியம் என்று சொல்ல பட்ட வேறு சில நூல்களும் வாசிக்க சலிப்பூட்டுபவைகளாக எனக்கு இருப்பதை கண்டேன். சிந்தித்து பார்த்ததில் என் புரிதலின் போதாமை இது. இலக்கிய வாசிப்பில் எனக்குள்ள பயிற்சி குறைவின் விளைவு இது  என்பதை உணர்ந்தேன். 

Friday, July 30, 2010

கடவுளை காண முடியுமா?


டெல்லி சாந்தினி சௌக்கில் மத்திய அரசில் பணிபுரியும் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் இரண்டு பேர் பேசிகொண்டிருந்ததை கவனித்தார்.
‘கடவுளை காண முடியுமா?’ என்று ஒருவன் கேட்க,
‘ஓ முடியுமே உன் கோட்டை கழற்றி விட்டு பத்தடி முன்னால் சென்று பார் கடவுள் தெரிவார்’ என்றான் மற்றவன்.