தோழமையுடன்

Wednesday, February 15, 2012

வலிமார்கள் சகவாசம் தேவையா?


 “குர்ஆனும், ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறதுஎன இரண்டு தினங்களுக்கு முன் ஒரு  பெயரில்லா பின்னூட்டம் வந்திருந்தது. நீங்கள் யாராயிருந்தாலும் உங்களுக்களுக்கு என் தாழ்மையான  பதிலிது. கொஞ்சம் அன்புடன் சிந்திக்க வேண்டியவனாய்….

 முதலாவதாக, குர் ஆனில் வந்துள்ள மூஸா(அலை) அவர்கள் கிள்ரு(அலை) அவர்களை சந்தித்த இந்த நிகழ்வை படியுங்கள்:

அவ்விருவரும் (மூஸா நபியும் அவர்களின் பணியாளரும்) நம் அடியார்களில் ஓர் அடியாரை (கிள்ருவை) கண்டார்கள். (அவர் எத்தகையவர் என்றால்) நமக்கு (சொந்தமான) அருளை அளித்து இருந்தோம். மேலும் நம்முடைய ஞானத்தையும் நாம் அவருக்கு கற்றுத் தந்திருந்தோம். (18:65)

மூஸா(அலை) அவரிடம்  “உமக்கு கற்பிக்கப்பட்ட நன்மையானவற்றை நீர் எனக்கு கற்று கொடுப்பதற்காக நான் உங்களை பின் தொடரட்டுமா?” என்று கேட்டார். (18:66)

சிந்தித்து பாருங்கள் மூஸா நபி யாரு? வேதம் கொடுக்கப்பட்ட விஷேசமான நபி.
கிள்ரு( அலை) அவர்கள் நபியா? அல்லது வலியா என்ற சர்ச்சை இன்றும் தொடர்கின்றது.ஆக குறைந்த பட்சம் ஹிள்ரு அவர்கள்  இறைவனின் நேசத்துக்குரிய ஒரு நல்லடியார்.

 ஹிள்ரு அவர்களை விட பல மடங்கு உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள மூஸா நபி இறைவன் அளித்த ஞானத்தை பெற ஓர் இறைநேசரிடம் பின் தொடரட்டுமா என கேட்கின்றார்கள் என்பது தான் இங்கே சிந்திக்க வேண்டிய விசயம்.

இதில் நமக்கு படிப்பினை இல்லையென்றால் இறைவன்  இதை சொல்லிக்காட்டுவானா? என்பதையும் சிந்தித்து பாருங்கள்.

அடுத்து நபி(ஸல்) அவர்களின் மூலம் முழுமையான மார்க்கம் தரப்பட் பின்னும் இன்னொருவரிடம் செல்லும் தேவை என்ன என்பதைப் பார்ப்போம்.

நாமாக அப்படி செய்தால் தவறு தான். குர்ஆனே அப்படி வழிகாட்டினால் அது எப்படி தவறாக இருக்க முடியும்.

ரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.” (25:59) என்கிறது இறைவேதம்.

குரானும், ஹதீஸும் இருக்க இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ள அந்த விளக்கத்தை வைத்திருக்கும் ஒருவரை அணுக சொல்லி இறைவனே உத்தரவிடுவதன் காரணம் என்ன?

1.       எந்த சிருஷ்டியையும் போல் இல்லாத இறைவனை சுயமாக அறிவது என்பது இயலாது. ஞானத்தின் பட்டினமான நபி (ஸல்) அவர்களும் தன் சொந்த ஆராய்சியால் இறைஞானத்தை பெறவில்லை. இறைவன் வஹியின் மூலம் அறிவித்து கொடுத்த மகத்தான பாக்கியமது. ஆக  இறைவனை அறிவதில் சுயஆராய்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

2.       குரானையும், தீஸிலும் கூறப்பட்ட விளக்கத்தை தெளிவாக அறியும் நபிவழி என்ன?
பெருமானாரிடமிருந்து சஹாபாக்கள் அறிந்தார்கள்,
சஹாபாக்களின் வழியாகத் தாபியீன்கள்,
தாபியீன்களிடமிருந்து தபவுத்தாபியீன்கள்,

இப்படி சங்கிலித் தொடராக வந்த இந்த ஞானஜோதியை தங்களின் இதயங்களில் தாங்கிக் கொண்டிருக்கும் ஒருவலியே முர்ஷிதைஅணுகுவது தான் வேதம் காட்டும் நேர்வழி. இதை பின் வரும் இறைவசமும் உறுதி செய்கிறது.

 (நபியே!) யாரை (அவர்களின் மன அமைப்பின் கோரிக்கை படி) அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17)

அடுத்ததாக இறைநேசர்களுடனான ஆன்மீக சகவாசத்தின் நோக்கம் என்ன என்பதை பார்ப்போம்.

இறைநம்பிக்கையும், இறையச்சமும் தான் இறைநேசத்தின் (விலாயத்தின்) அடையாளமாக குர் ஆன் கூறுகின்றது. அத்தகைய இறைநேசர்களுடன் இருந்து இறையச்ச நிலையை நாமும் அடைவதுதான் ஆன்மீக சகவாசத்தின் முக்கிய பகுதியாக கருதப்படுகின்றது. ஆகவே இறைநேசர்களின் சகவாசம் என்பது வாழ்வில் மிகமிக அவசியம்.

இந்த இறைவசனத்தை பாருங்கள்:

ஈமான் கொண்டவர்களே! தக்வா செய்யுங்கள்.அல்லாஹ்வின் பக்கம் உங்களை நெருக்கி வைக்கும் வஸீலாவைத் தேடுங்கள். மேலும் அவனுடைய பாதையில் (குறிப்பாக நப்ஸுடன்) போர் செய்யுங்கள்.(அப்போது) நீங்கள் வெற்றி பெறலாம்.(5:35)

இங்கு வஸீலா என்பது ஏகத்துவ மெய்ஞானத்தை கற்றுக் கொடுத்து இறைவன் மீது அன்பையூட்டி நம்மை அவன்பால் நெருக்கி வைக்கும் வலியே முர்ஷித்களையே குறிக்கிறது. எனவே அத்தகைய உண்மையான காமிலான ஷெய்குமார்களை தேடியடையும் பொறுப்பு நமக்குள்ளது என்னும் அறிஞர்களின் கருத்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். மேலும், நம் வாழ்வியல் கண்ணோட்டத்தை வடிவமைப்பதில்  தோழமையின் பங்கு மகத்தானது என்பதால் நம் இறைநம்பிக்கை உறுதி பெறவும், இயன்றவரை தக்வா செய்யவும் நமக்குத் தூண்டுதலாக இருக்கும் மெய்யடியார்களின்  தொடர்ச்சியான தோழமை வாழ்நாளெல்லாம் நமக்குத் தேவை என்பதை

ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹுவை அஞ்சுங்கள்(தக்வா செய்யுங்கள்) மேலும் சாதிக்கீன்களுடன் (தோழமை கொண்டு) இருங்கள்.(9:119) என்னும் திருவசனம் வலியுறுத்துகிறது.

இறுதியாக இந்த ஹதீஸை உங்கள் பார்வைக்கு தருகின்றேன்

புகாரி ஷரீஃப் பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3470
 
பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்றவர். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, '(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?' என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், 'கிடைக்காது" என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒருவர், '(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!" என்று அவருக்குக் கூறினார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.

அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) தர்கித்தனர். உடனே இறைவன் அதை நோக்கி, 'நீ நெருங்கி வா!" என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, 'நீ தூரப்போ!" என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, 'அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்" என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்

நூறு கொலை செய்த ஒருவர். நல்லடியார்களின் சகவாசத்தை பெறவில்லை. மன்னிப்பை நோக்கமாக வைத்து இறைநேசர்களின் சகவாசத்தில்  ஆசைவைத்தார். அவருக்கு இறைவன் பொழிந்த கருணையை பாருங்கள். 

இதுவரை நல்லடியார்களின் சகவாசத்தின் நோக்கமும் அவசியமும் சுருக்கமாக உங்கள் முன் வைக்கப்பட்டது. இதற்கு பின்னும் இருள் உங்களுக்கு வெளிச்சமாகவும், வெளிச்சம் உங்களுக்கு இருளாகவும் தோன்றினால்……

"இறைவன் தான் நாடியவர்களை தனது ஒளியின் பக்கம் செலுத்துகிறான்.”(24:35)
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! ஆமீன்!




28 comments:

கிளியனூர் இஸ்மத் said...

மாஷா அல்லாஹ் அருமையான விளக்கங்கள்...தொடருங்கள் சகோதரே!

புல்லாங்குழல் said...

உங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே!

nagoreismail said...

அன்புடன் சிந்திப்பதா...?

சிந்திப்பார்களா இவர்கள்...?

சிந்தனையுடன்....

புல்லாங்குழல் said...

திறந்த மனதுடன் சிந்திக்கக் கூடிய நல்லவர்கள் நிறையவே இருக்கின்றார்கள். இன்ஷாஅல்லாஹ் சிந்திப்பார்கள் சகோதரரே!

Anonymous said...

Awesome reply to WAHHABEES

kalifa said...

Great article.good job brother.keep it up.

kalifa said...

great article.good job brother.keep it up.

Hasan Bilali said...

Very nice explanation Brother!!!

புல்லாங்குழல் said...

அன்பின் கலிபா, ஹஸன் பிலாலி உங்கள் கருத்துக்கு நன்றி நண்பர்களே. யாரையும் புண்படுத்துவது நமது நோக்கமல்ல. புரியவைத்தலே நமது நோக்கம்.அல்லாஹ் கிருபை செய்வானாக! ஆமீன்

haja18002 said...

vaseela theduvathin thelivana sattangal entra nuulai padikavum

புல்லாங்குழல் said...

1.சுன்னத் வல் ஜமாத்துடைய கருத்துடன் பல இடங்களில் முரண்படும் இப்னு தைமியா அவர்களின் நூலின் மொழிபெயர்ப்பான அந்த நூலில் கூட உயிருடன் இருக்கும் இறைநேசசெல்வர்களிடம் செல்வதை அவர் தடுக்கவில்லை.

2.மேற்கூறிய கட்டுரையை மீண்டும் படியுங்கள். இது நீங்கள் கூறும் வஸீலாவைப் பற்றிய கட்டுரை அல்ல.

varusai ibrahim said...

alhamdu lillah miga payanulla katturai

Anonymous said...

Bjf said

மிக மிக அருமையான கட்டுரை அல்லா உங்கள் குரான் ஹதிஸ் விளக்கத்தை மேம்மேலும் அடிகபடுதுவானாக
அதிக படுத்ஹுவானாக ஆமின்

Anonymous said...

alhamdu lillah

Anonymous said...

என்ன தலைப்பு இது?லட்டு திங்க ஆசையா என்று கேட்பதுப்போல்!!பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை மகான்களுடன் சேர்ந்திருக்கும் மனித பதர்களும் புனிதர்களாக மாறுவது!!!ரப்புல் இஜ்ஜத்,எல்லாம் அறிந்தவன் அவனே கட்டளையிடுகிறானே'வ கூனு மாஸாதிக்கீன்' என்று!!அனுபவத்தின் மீது உண்டான நம்பிக்கையே எகீன் என்று அழைக்கப்படுவதுப்போல் உங்களது எழுத்தில் உள்ள உயிரோட்டமும் உணர்வு பூர்வமானதே!!!அல்ஹம்துல்லில்லாஹ்!!அல்லாஹ்வை வணங்குவோம் அவ்லியாக்களை கொண்டாடுவோம்!!
HM Rashid

Anonymous said...

He said, “O counsellor, be silent! How long, how long (wilt thou chide)?
Do not give advice, for the bonds (on me) are very grievous.
My bonds are more grievous than thy advice: thy doctor (who taught thee) was not acquainted with love.
In that quarter where love was increasing (my) pain, Bú Hanífa and Sháfi‘í gave no instruction.
Do not thou threaten me with being killed, for I thirst lamentably for mine own blood.”
For lovers, there is a dying at every moment: verily, the dying of lovers is not of one sort.

Mevlana Jalaluddin Rumi (k.s.) / MATHNAWI III,3830-3834

மனைச்சையுடன் போரிடுவதைப் பற்றி கண்மணி நாயகம்(ஸல்) 'சிறிய போரிலிறிந்து பெரிய போருக்கு தயாராகுங்கள் ' என்று சஹாபாக்களை நோக்கி கட்டளையிட்டார்கள்.ஏனெனில் வெழிப்படையான போர்களில் எதிரியால் ஒரே ஒரு முறை தாக்கப்பட்டு இறந்துவிடுகிறான் ஆனால் மன இச்சை என்று அழைக்கப்படும் நஃப்சுடன் போராடுவது என்பது மீண்டும் மீண்டும் வெட்டப்பட்டு உயிர் வாழ்ந்துகொண்டிருப்பது!!அதனால்தான் மவ்லானா கூருகிறார்கள் ஒவ்வொரு வினாடியும் இறந்துகொண்டிருப்பது என்று இறைநேசத்தையும்!!இத்தகைய இறைநேசம் இறைநேசர்களின் சகவாசத்தில் இல்லாமல் கிட்டுவதற்க்கு அறியதே என்பது எனது தாழ்மையான கருத்து!!ஜஷாக்கல்லாஹ்!!
HM Rashid

Sham Faizee said...

Poonai kannai moodiathum ulahamae irundu vittathu enru ninaipathu pol thaan evargal nilaiyum.Evargalin emanirkaha Ellam valla nayanidam dua ketpomaha.

Sham Faizee

Sha said...

Alhamdhu lillah.. Very nice article

abdul said...

ippadi solliye manithane iraivanaha aakividungal.

புல்லாங்குழல் said...

அப்துல் அருமை சகோதரரே,

நம்மோடு முரண்படும் எதிர்கருத்துகளை வாசிப்பது எப்போதும் நம்மை ஒரு சமநிலையில் வைத்திருக்க உதவும் என்பதில் நீங்கள் நம்பிக்கை உள்ளவர் என கருதுகிறேன். ஏகத்துவம், அகப்பார்வை சம்பந்தப்பட்ட இடுகைகளை மீண்டும் படித்து பாருங்கள். இணைவைத்தலை விட்டு தப்பித்தல், தனிமனித ஸ்துதியை விட்டு தப்பிக்க ஷெய்கின் சகவாசம் அவசியம் என்பது என்பது புரியும்.

Anisha Maraikayar said...

Nowadays Particular tribes of islamic youths, they need proof for every thing and they are convincing themselves with " page no & verses" . According to them they are ready to accept valiiullah which specified in Quran context, not in real life. Because they need proof for it. Are they know which are all hadith and which are all verses of Quran? Since those holy verses both are sentenced by prophet s.a.w , he was the one& only pointed out Hadith and Quran verses. However rasoolullah s.a.w orally described , Shahabaas all are obeyed themselves rasoolullah s.a. w without any contradiction. They never care about proof or evidence , they have submitted themselves to rasool s.a.w, beloved brothers ! There is no question or doubt about shahabaas life because they are saalihins , likewise there is no doubt on followers of shahabaas (valiiullah), our rasoolullah s.a.w & and his companions are our roll model, let's follow them without any conflict.
Mohamed Riyas Faizee(kottaippattinam )
Singapore

Anonymous said...

Wonderful article. really good.. thanks and salam Kalifa sahib. Nagore.

புல்லாங்குழல் said...

அஸ்ஸலாமு அலைக்கும் கலிஃபா சாஹிப் உங்கள் துவாவில் ஆதரவு வைக்கின்றேன்.

Nagoor Meeran said...

assalamu alaikkum....

mikavum alakaga vilakkam alitheerkal...aanal neenkal alittha quran matrum hadees anaithume uyirudan iruppavaiye kurikkirathu...irantha oruvaridam nesam kolla solli matrum vaseelavai theda solli entha arivippil koorappattullathu...ippothu neenkal sollum valimaarkal anaivarume tharpothu uyirudan iruppavarkal alla... valimaarkal endra peyaril enna enna anaacharam nadakkirathu....naan solla vendiya avasiyam thevai illai...andraiya kaala irai nirakarippaalarkal ithaiye than seitharkal ...unkalin iraivan yar endral "allah" endru than solluvarkal...silaikal ellam iraivanidam thammai nerunka vaikkum endre sonnarkal...avarkalai than inai vaithavarkal endru islam sollukirathu...valaimarkalidam nesam theduvathaka sollupavarkalukkum andraiya niraakaripporkalukkum enna vithiyasam enpathai neenkal than thelivu padutha vendum..meendum oru murai koorukiren...neenkal kooriya anaithu aatharamum uyirudan ullavakalaiye kurikkirathu..
"இறைவன் தான் நாடியவர்களை தனது ஒளியின் பக்கம் செலுத்துகிறான்.”(24:35)
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக! ஆமீன்!

புல்லாங்குழல் said...

அன்புள்ள நாகூர் மீரான்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). உங்கள் கேள்விக்கு நன்றி!
உங்கள் கேள்விக்கு குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஷேக் அப்துல்லா ஜமாலி போன்ற பலர் பதிலளித்திருக்கிறார்கள் முடிந்தால் கேட்டு பாருங்கள்.
எல்லோர் கருத்துகளையும் விருப்பு, வெறுப்பு இன்றி சீர்தூக்கி பார்ப்பவர் நீங்கள் என நம்புகின்றேன்.
இப்போதைக்கு என் சுருக்கமான சில வரிகள் உங்கள் அன்பான சிந்தனைக்கு:
இறந்த ஒருவரை நேசம் கொள்ளக் கூடாது என்றால் மரணித்த பெற்றோர்களிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்களைக் கூட நேசம் வைக்க முடியாது.
தவறான வழிபாடுகள் செய்தாலும் இறைவனின் நெருக்கம் நோக்கமாக இருந்ததால் அன்றைய குறைசிகளில் பலருக்கு இஸ்லாம் நஸீபாகி சஹாபாக்களானார்கள். அமல்கள் நிய்யத்தை பொருத்தவை சகோதரரே!
மேலும் நிராகரிப்பாளர் செய்தது இபாதத். நாம் செய்வது சுன்னத்தான ஜியாரத்.
சாலையில் விபத்து நடக்கிறது என்பதற்காக கார் ஓட்டாமல் இருப்பதில்லை. ஜியாரத் செய்பவர்கள் சிலர் தவறாக செய்கிறார்கள் என்பதற்காக ஜியாரத்தே தவறென்பது சரியல்ல. நபிவழி சுன்னத்தை பேணி ஜியாரத் செய்பவர்களுக்கு அல்லாஹ் அந்த நல்லடியார்களின் பொருட்டு கருணை செய்வான் என்பது எங்கள் அனுபவ உண்மை.
இறைவன் நாடினால் பின்பு இது பற்றி விரிவாக எழுதுகின்றேன். எனது எல்லா கட்டுரைகளயும் முடிந்த வரை படியுங்கள் சகோதரரே!

NAGORE FLASH said...

வலிமார்கள் சகவாசம் மறுமை வெற்றிக்கு தேவையா..?
(இறைவனிடத்தில் சென்றுவிட்ட முன்னோர்களை மதிக்கிறோம் , அவர்கள் எப்படி மார்க்க விஷயங்களில் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தார்களோ அவ்வாறு நாமும் நடக்க முயற்சிக்கிறோம் – ஆனால் அவர்களின் பெயரால் மார்க்கத்தில் புகுத்திய புதுமையை எதிர்க்கிறோம் ,புறக்கணிக்கிறோம்)
ஆதாரம் 1 : அவ்விருவரும் (மூஸா நபியும் அவர்களின் பணியாளரும்) நம்அடியார்களில் ஓர் அடியாரை (கிள்ருவை) கண்டார்கள்.(அவர்எத்தகையவர் என்றால்) நமக்கு (சொந்தமான) அருளை அளித்துஇருந்தோம். மேலும் நம்முடைய ஞானத்தையும் நாம் அவருக்கு கற்றுத்தந்திருந்தோம். (18:65)

மூஸா(அலை) அவரிடம் “உமக்கு கற்பிக்கப்பட்டநன்மையானவற்றை நீர் எனக்கு கற்று கொடுப்பதற்காக நான்உங்களை பின் தொடரட்டுமா?” என்று கேட்டார். (18:66)

ஒருவரை இறைநேசர் என்று (அதாவது இறைவனை பொருந்திகொண்டவர் என்று ) கூறுவதாக இருந்தால் அவரை பற்றி அல்லாஹ் கூறியிருக்க வேண்டும் அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்க வேண்டும்.
1. இந்த இறைவசனத்தில் இறைநேசர் என்று அல்லாஹ் ஒருவரை கூறுகிறான் இந்த வசனத்தை வைத்துக்கொண்டு நாம் விரும்பும் ஒருவரை (உயிரோடு இருப்பவரோ , மரணித்து விட்டவரோ) இறைநேசர் என்று நாமாக எப்படி சொல்ல முடியும் ? (அல்லாஹ் அவரை பொருந்திகொண்டானா என்பது நமக்கு எப்படி தெரியும்)

2. ஒரு வேளை நமக்கு ஒருவரை இறைநேசர் என்று தீர்கமாக தெரிகிறது என்று வைத்துகொள்வோம் – நாம் என்ன செய்ய வேண்டும் ? அவரை போலவே நாமும் இறைநேசர் ஆகவேண்டும் என்று நினைக்க வேண்டும் முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்படி நபி (ஸல்) அவர்களை பின்பற்றி அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு வாழ்ந்துகாட்டினாரோ அப்படி நாமும் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டும். இது தான் ஒருவரை பின்பற்றுவது இதில் எந்த தவறுமில்லை.
ஆனால் அல்லாஹ்வும் , அவனுடைய தூதரும் இட்ட கட்டளைக்கு மாற்றமாக ஒருவர் செய்தால் யார் செய்தாலும் அது நிராகரிக்க படவேண்டிய ஒன்றாகும். அப்படி ஒருவர் இஸ்லாத்திற்கு மாற்றமாக செய்கிறார் என்பதை நாம் எதை வைத்து மதிப்பிடுவது ??
அல்லாஹ்வின் வேதத்தையும் – நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் மூலமாக தானே.
அதை தானே நாமும் சொல்கிறோம். நான் உங்களிடம் இரண்டு விஷயத்தை விட்டு செல்கிறேன் ஒன்று அல்லாஹ்வின் வேதம் , இரண்டு எனது வழிமுறை – இதை பற்றி பிடிக்கும் காலம் வரை நீங்கள் வழிதவறமாடீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் எதற்கு சொன்னார்கள் ??
வாழையடி வாழையாக மார்க்கத்தை பின்பற்றுகள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே ?
எதற்கு திருக்குரானை அல்லாஹ் பாதுகாக்கிறேன் என்று சொல்கிறான் ?
திருக்குரான் உலகமக்களுக்கு நன்மை – தீமையை பிரிதரிவிகின்ற வழிகாட்டி என்று ஏன் சொல்கிறான் ? வலிமார்களுக்கு மட்டுமே குரான் என்று எங்காவது சொல்லப்பட்டு இருக்கிறதா ?

புல்லாங்குழல் said...

அன்பான நாகூர் ஃபிளாஸ்,

நான் ஈமான், இஹ்ஸான், தக்வா, தவ்ஹீத் என்றால் என்ன? அதன் அமல்கள் யாவை என்பதை குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் நான் அறிந்து கொண்டது மற்றும் முடிந்தவரை அமல் செய்ய காரணம் ஒரு இறைநேசரின் சகவாசம் தான்.

எனது மற்ற கட்டுரைகளை படித்து பாருங்கள்.மாற்று கருத்தை சிந்தித்து சீர்தூக்கி பார்ப்பவர் என நம்புகின்றேன்.

(நபியே!) யாரை (அவர்களின் மன அமைப்பின் கோரிக்கை படி) அல்லாஹ் வழிக்கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேரான வழியினை அறிவிக்கக் கூடிய வலியே முர்ஷிதை நீர் காணவே மாட்டீர்.(18:17)

இந்த ஆயத்தை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

sahib said...

அன்பு ஜனாப் ஒ . நூருல் அமீன் அவர்களுக்கு , அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக !! உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் !! சுப்ஹானல்லாஹ் !!! இந்த வஹ்ஹாபிகளுக்கு நீங்கள் விளங்க வைக்க வேண்டுமென்றால் இந்த ஆயுள் போதாது .. எவ்வளவு தெளிவான உண்மையான ஆதாரங்களை எடுத்து வைத்தாலும் அவர்களுடைய வறட்டு வாதங்களையும் வஹ்ஹாபிய ஆதாரங்களையும் பக்கம் பக்கமாக எழுதி உங்களை சோர்வடைய வைத்து விடுவார்கள் . தாங்கள் மட்டும் சொர்க்கம் செல்வோம் என்று சொல்லும் இவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் தருவானாக !! நீங்கள் இரண்டு வரிகளில் பதிலளித்தால் அவர்கள் இருநூறு வரிகளில் மறுபதில் அளிப்பார்கள் . ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களாகிய சஹாபாக்களையே நையாண்டி செய்து கேவலப்படுத்தி விமர்சனம் செய்யும் ( நஊதுபில்லாஹ் ) இவர்களும் இவர்களின் இயக்க தலைவர்களும் எந்த வகையில் சஹாபாக்களை விட சிறந்தவர்கள் என்பதை அல்லாஹ் அறிவான் . தர்காக்களில் நடக்கும் அனாச்சாரங்களை சுட்டிகாட்டி தடுப்பது நம் கடமை . அதை விட்டுவிட்டு தர்கா வேண்டாம் என்பதும் , அவ்லியாக்களை இன்கார் செய்வதும் அறிவற்ற செயல் . உங்களுக்கு அல்லாஹ் பொறுமையைத் தந்து உங்கள் பணி சிறக்க துஆச் செய்கிறேன்.