தோழமையுடன்

Thursday, July 28, 2011

'ரோல் மாடல்' கதை பற்றி கவிஞர் தாஜின் பார்வை



புல்லாங்குழலில் வந்த ரோல் மாடல் சிறுகதைப் பற்றி கவிஞர் தாஜ் என்னும் அன்பரின் விமரிசனப்பார்வை. ஆபிதீன் பக்கங்களில் வெளிவந்தது நண்பர்களும் எழுத முன்வர வேண்டும் என தூண்டுதலுக்காக உங்கள் பார்வைக்கு. 

Tuesday, July 12, 2011

பிரியாவிடை - சபீர்


சுஜாதாவும் அதே பிரியத்துடன் முத்து காமிக்ஸும் விழுந்து விழுந்து படிக்கும் சபீர் புதுகல்லூரியில் என் விடுதித் தோழன். படிப்பில் அதிபுத்திசாலி மாணவன். பல வருடங்களுக்கு பின் அருமையான கவிஞனாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அவன் தொடர்பு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கிட்டியது. 

Monday, July 11, 2011

தேநீர் கடையில் கடவுள்

கடவுளைத் தேடி தேநீர் கடைக்கு செல்லும் முன் முன்னோட்டமாக சில விசயங்கள் இருக்கிறது. அதை பற்றிய ஆரம்பத்தை பிரபல எழுத்தாளர் ஜெயமோகனிலிருந்து ஆரம்பிப்போம்.

Sunday, July 10, 2011

சமூக மாற்றத்தில் கலையின் பங்கு

ஒரு மனிதர் எனது குருநாதர் பைஜிஷா நூரி அவர்களிடம் தொலைக்காட்சி பார்ப்பது ஆகுமானதா? விலக்கப்பட்டதா? (ஹலாலா? ஹாராமா?) என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலாக என் குருநாதர் அவரிடம், “நாக்கு என்ற ஒரு உறுப்பு இருக்கிறதே அது ஹலாலா? ஹராமா?” என கேட்க அவர் “என்ன ஹஜ்ரத் இப்படி கேட்கிறீங்க” என்றார். அதற்கு என் குருநாதர் “ இந்த நாக்கு பொய்யும் சொல்லுது, புறமும் பேசுது, கோளும் சொல்லுது, குர்ஆனும் ஓதுது இப்ப சொல்லுங்க நாக்கு ஹலாலா? ஹராமா?” என்றதும் அவர் தன் கேள்விக்கு பதில் கிடைத்த மகிழ்வுடன் புன்னகைத்தார்.


Monday, July 4, 2011

ஒசாமா பின் லேடன் படுகொலை: மாறிவரும் அமெரிக்க மனசாட்சி க. திருநாவுக்கரசு

 ‘காலச்சுவடு’ ஜூன் 2011 இதழில் க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள இந்த கட்டுரை வியப்பூட்டும் ஒரு புதிய பார்வையை முன் வைக்கிறது. காலச்சுவடுக்கும், சகோதரர் திருநாவுக்கரசு அவர்களுக்கும்  நன்றியுடன் இந்த கட்டுரையை மீள்பதிவு செய்கின்றேன்.
 மாறி வரும் அமெரிக்க மனசாட்சி என்பதை "நாறி வரும்" என சொல்லி இருக்கலாமோ என கேட்கத் தூண்டுகிறது இந்த கட்டுரை.