தோழமையுடன்

Wednesday, December 19, 2012

அப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி' - எஸ்.கிருஷ்ணகுமார்

 
கீற்று இனைய இதழில் திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (26 நவம்பர் 2012 ) எழுதிய கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

அப்பாவிகளை குறிவைக்கும் ‘துப்பாக்கி' 

வைத்தியம் தெரியாதவன் கையில் கத்தியை கொடுத்து, ஆபரேஷன் தியேட்டருக்கே அனுப்பியும் வைத்த கதையாக இருக்கிறது தமிழ் சினிமாவின் இன்றைய கதி. சமீபத்திய உதாரணம், துப்பாக்கி. மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய, மக்களின் எண்ண ஓட்டங்களுக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொடர்பியல் துறையில் இருப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றவேண்டிய பால பாடங்கள், மரபுகள் இருக்கின்றன. பொழுதுபோக்குவதற்காக என நேரத்தை ஒதுக்கி, பணத்தை செலவழித்து, உள்ளே வந்திருப்பவர்கள் மூளைக்குள் எதிர்மறை சிந்தனைகளை ஏற்றி அனுப்பாதிருக்கவேண்டும் என்பது அதில் முதன்மையானது. அதை, தப்பாக்கி விட்டது துப்பாக்கி! 

Sunday, December 16, 2012

கொத்தனாரின் நோட்டுசு - பா.ராகவன்


இலவசக் கொத்தனாரின் 'ஜாலியா தமிழ் இலக்கணம்' என்ற நூலுக்கு பா.ராகவன் எழுதியிருந்த இந்த புத்தக அறிமுகம் அதன் நோக்கம் சார்ந்து எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும், இந்த நூல் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற ஆவலுடன் இதை மீள்பதிவு செய்துள்ளேன். சூட்டோடு சூடாக என் மகனை அலைபேசியில் அழைத்து எனக்கு ஒரு பிரதி வாங்கி வருமாறும் சொன்னேன். நீங்களும் வாங்கி பிள்ளைகளுக்கு பரிசளிக்கலாமே! 

Thursday, December 6, 2012

நிம்மதி அது உங்கள் Choice!

சிந்தனையின் கால்கள் மரக்கால்கள்.
மரக்கால்களின் நடை பலகீனமானது.
                           _ மௌலானா ரூமி (ரஹ்)

சிந்திக்க மாட்டீர்களா? உங்கள் உள்ளங்கள் பூட்டியா வைக்கப்பட்டுள்ளது? என்பது சிந்தனைக்கான இறைவேதத்தின் அழைப்பு.
 
சிந்தனை செய் மனமே! என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அருமையான உபதேசம். அதை விட அவசியம் எதை சிந்திப்பது என்பது!.

எதிரே மனைவி இருக்கும் போது அலுவலக சிந்தனை. அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டின் சிந்தனை.

இறைவனை முன்னோக்கி தொழுகையில் நின்றால் கூட பக்கத்தில் தொழுபவர் னிப்படி விரலை அசைக்கின்றார்?.  வாசலில் கழற்றி வைத்த புது செருப்பு பத்திரமாக இருக்குமா?. இந்த ஹஜ்ரத் ஏன் இவ்வளவு பெரிய சூரா ஓதுராரு?.

 இப்படி சிந்தனை…சிந்தனை….சிந்தனை ….எண்ணங்களின் இடை விடா கூக்குரல்.

இந்த சிந்தனை வழியே மனம்  பேசிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையை முன்வைத்துமனதின் உள்ளே ஒரு வாய் சதா பேசிக் கொண்டே இருக்கின்றது கவனித்தீர்களா!” என்பார்கள் என் குருநாதர் ஃபைஜிஷாஹ் நூரி(ரஹ்)

Tuesday, October 30, 2012

சிந்தனை செதுக்கிய சிற்பம் ‘நான்’


 நாம் வளரும் சூழலுக்கு ஏற்ப நம்மைப் பற்றியும் நமக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றியும் நம் கருத்துருவாக்கம் (conception) இன்னும் கொள்கைகள்(idealogy) நமது மனதில் உருவாகின்றன. நமது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், கேட்ட பிரசங்கங்கள், படித்த புத்தகங்கள், பார்த்த டி.வி., சினிமாக்கள், பழகிய சூழ்நிலைகள், சந்தித்த வெற்றி, தோல்வி அனுபவங்கள் அனைத்திலிருந்தும் நாம் கற்றுக் கொண்ட அல்லது கற்பித்துக்கொண்ட செய்திகள் மனதில் பிம்பங்களாக பதியப்படுகின்றன.

Monday, October 22, 2012

பூச்செண்ட்டுடன் வந்திருக்கும் பச்சைப் பொய் - கவிஞர் தாஜ்‘வெல்கம் அத்வானிஜி!’ என்ற எனது கட்டுரையை படித்து கருத்து தெரிவிக்க நண்பர் தாஜ் அவர்களை கேட்டிருந்தேன். பதிலுக்கு தாஜ் ஒரு கட்டுரையே எழுதிவிட்டார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட  தாஜின் இந்த கட்டுரை ஒரு விதத்தில் என் கட்டுரைக்கு எதிர்வினையாக ‘கேப்பையில் நெய்வடிகிறது என்றால் கேட்பாருக்கு எங்க போச்சு புத்தி?’ என சாடுகின்றது. அத்வானிஜியின் வார்த்தைகள் அரசியல் காய் நகர்த்தல் என்றாலும் அதை அவர்கள் உண்மையாக்கினால் எவ்வளவு நல்ல விசயம் என்பதை சிந்திக்க தூண்டுவது தான் என் கட்டுரையின் நோக்கம்.யார் ஆரம்பித்து வைத்திருந்தாலும் மதவெறி என்கின்ற புற்று நோய் ஒழிக்கப்பட வேண்டும், மனிதநேய வெறி தளைக்க வேண்டும் என்பதில் என்னை விட தாஜுக்கு அக்கறை அதிகம் என்பதே என் நம்பிக்கை. இருந்தும் மனதால் பலமடங்கு என்னை விட இளையவர் என்பதால் மிகவும் உணர்ச்சி வசப்படுகின்றார். வார்த்தைகளில் இத்தனை கடுமை தேவையில்லை என்றாலும் தாஜ் பொய் சொல்லவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய உண்மை.

Wednesday, October 17, 2012

டெங்கு தடுக்க... தகர்க்க... தப்பிக்க 10 வழிகள் - டாக்டர். நாகராஜன்ஒவ்வொரு முறை இந்தியாவிற்கு செல்லும் போதும் விமான நிலையத்திலிருந்து துவங்கி ஊர் செல்லும் வரை தொடரும் சுகாதாரமற்ற சூழல் கூட எனக்கு என் தாய்மண்ணின் என்றும் மாறா அடையாளமாகவும், புழுதியுடன் புரண்டெழுந்த என் பால்யத்தின் நினைவு சின்னமாக ஒரு மகிழ்வூட்டும் விஷயமாகவே இருந்திருக்கிறது. சுத்தமான சூழலை மனது விரும்பினாலும் அப்படி சுத்தம், சுகாரத்துடன் பளிச்சென்று இருந்திருந்தால் என் தேசமே எனக்கு அன்னியமாக கூட தோன்றியிருக்கலாம்.

ஆனால் இன்று சிக்கன் குன்யா, பன்றிக் காய்ச்சல், டெங்கு என தொடரும் ஆரோக்கியமற்ற சூழல் சுற்றுப்புறச் சுத்தம் எவ்வளவு அவசிய தேவை என்பதை நம்மை தெளிவாக உணரச் செய்திருக்கிறது. அந்த  உணர்வை பேசி, எழுதி தீர்த்துக் கொண்டு ஓய்ந்து விடாமல் சுற்றுபுற சுகாதாரத்திற்கான நம் பங்களிப்பை செயலில் காட்ட   தூண்டும் வகையில் விகடன் இனையதளத்தில் (16 ஜூன் 2012) வெளிவந்த கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

Tuesday, October 16, 2012

அனைவருக்குமான அசோகமித்திரன்! - லதா ராம கிருஷ்ணன்எளிமை – இலக்கியத்தரம் வாய்ந்த ஆபசமற்ற இலக்கியம் படைக்க விரும்பும் 'தீன்குலத்' தமிழர்கள்  அவசியம் படிக்க வேண்டிய ஒரு முன்னோடி எழுத்தாளர் அசோகமித்திரன். 


 


ஆரோக்கியமான இலக்கியம் எது? என்ற கேள்விக்கு ‘என் பயணம்’ என்ற தன் நூலில் அசோகமித்திரன் கூறிய பதில் :


‘மனதில் குழப்பம், கிளர்ச்சி உண்டுபண்ணக்கூடாது. மனிதனை மனிதனிடமிருந்து பிரிப்பதாக இருக்கக் கூடாது. மனிதனைப் பற்றி மேலும் அறிய தூண்டுவதாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் நம்பிக்கையும்,தெளிவும் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.' என்பது தான்.

82வது வயது நடக்கும் அசோகமித்திரன் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுவதுடன் அவரைப் பற்றி சகோ. லதாராம கிருஷ்ணன் திண்னையில் எழுதியிருந்த கட்டுரையை நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.

Sunday, October 14, 2012

கரண்ட் "கட்'டைப் பற்றிக் கவலையில்லை!


வெல்டன் விஜயகுமார்!
விவசாயம் செய்ய முடியாமல், அதை விட்டுவிட்டு 
வேறு தொழிலுக்குப் போகிற விவசாயிகள் இந்தக் காலத்தில் அதிகம். ஆனால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ஒருவர், விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, தனது வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கிவிட்டார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதுவும் தனது தோட்டத்துக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்கிறார் என்றால் வியப்பு இன்னும் அதிகமாகிறது. 

(தினமணியில் வெளிவந்த இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள் சகோதரர் விஜயகுமார் போன்றவர்கள் தான் நமது தாயகத்தின் உண்மை கதாநாயகர்கள்.வெல்டன் விஜயகுமார்!. _ ஒ.நூருல் அமீன்)

Friday, October 12, 2012

அல்லாவின் தொழுகையில் நிழலாடும் அனுஷ்காவின் முகம்
‘நஜீர், எனக்கு தொழுகையில் நிண்டா அல்லாட நினைவு வரலை. அனுஷ்காட முகம் தான்டா நினைவுல வருது. ஹாரிஸ் ஜெயராஜுட பாடல் வரிகள் தான் மனசுல ஓடுது. எத்தனையாவது ரக்காயத் தொழுறேன்ங்கிறது கூட பல சமயம் குழப்பமாயிடுதுடா   என்று சொன்ன சாதிக்கிடம் “ நாளைக்கு என் வீட்டுக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரியவங்க வற்றாங்க நீயும் வா. அவர்கள் மூலம் உனக்கு அல்லாஹ் ஒரு நல்ல வழிய காட்டுவான். இன்ஷா அல்லாஹ்” என்றான்.

Monday, October 1, 2012

வெல்கம் அத்வானிஜி!

 இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு பாஜக எதிரான கட்சியல்ல என்பதை நாம் மீண்டும் உணர்த்த வேண்டும். காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், முஸ்லீம்களின் ஓட்டுக்களையும் பெறும் வகையில் கட்சியை நாம் முன் நிறுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான அத்வானி கூறியுள்ளார் என்பதை படித்ததும் திரு.ராமகோபாலன் மீலாது விழா மேடையில் பேசுவது போலும், நோன்பு விருந்தில் கஞ்சி குடிப்பது போலும் மனதில் ஒரு காட்சி வந்தது.

Monday, September 24, 2012

நாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்


பக்ரீத்து பாய் வீட்டு பிரியாணி நம் வீட்டிற்கும் நம் வீட்டு தீபாவளி பலகாரம் பாய் வீட்டுக்கும் பரிமாற்றப்பட்ட காலங்கள் ஏக்கத்திற்குரிய இறந்த காலங்களாகி விட்டன.”என்று சகோ. ராஜாராம் கோமகன்  தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்த ஆதங்கத்தை ஆபிதீன் பக்கங்களில்  கண்டேன்.


 இன்றைய இந்த மோசமான சமூக சீரளிவிற்கு தனிமனிதனாகிய நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்ற குற்ற உணர்வும் அதன் மீட்சிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற சிந்தனையும் மனதில் ஓடியது. சற்றே அந்த வேதனைக்கு ஒத்தடமாக அமைந்த இந்த பதிவை படித்ததும் இது போன்ற செய்திகள் அதிகமானவர்களை சென்றடைய வேண்டும் என எண்ணம் எழுந்தது. அந்த நோக்கத்துடன் எளிமையாகவும், நகைசுவையாகவும் எழுதும் கவிஞர் அப்துல்கையூமின்  “ நாகூர் மண்வாசனை” பக்கத்திலிருந்து இந்த பதிவை நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளேன்.

Sunday, September 16, 2012

மடமையின் தந்தைகள் மண்ணாய் போகட்டும்!

வழக்கம் போல் தனிதனி குழுவாய் தான்

என்றாலும்

எல்லா முஸ்லிம்களும் கருத்தொறுமித்து

பெருமானாரின் மேலுள்ள காதலை காட்டும் இந்நாளில்

எங்கள் வேதனை நிஜம்,

எங்கள் கோபம், கைசேதம் எல்லாம் நிஜமென நீ அறிவாய்!


உன்னையே வணங்குகின்றோம்!
உன்னிடமே உதவி தேடுகின்றோம்!.


Wednesday, September 12, 2012

ஆன்மீகத்தை வசைபாடும் பெயரில்லாத உங்களுக்கு!

 மாற்று கருத்துகளை வைக்கும் பெயர் வெளிடாத சகோதருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முதலில் ஒரு சின்ன வேண்டுகோள்: குர்ஆன், ஹதீஸின்  பொருளை விருப்பம் போல திரித்து கூறி இஸ்லாமியர்களிடையே கொள்கை குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போலிபெயர்களில் சிலர் உலாவி வரும் நேரத்தில் உங்கள் இஸ்லாமிய அடையாளத்தை - குறைந்தபட்சம் பெயர், மின்னஞ்சல் என்ற அளவிலாவது வெளியிடுங்கள். நீங்கள் வலைத் தளம் வைத்திருப்பவர் என்றால் அதன் முகவரியை தருவது இன்னும் சிறப்பு.

Thursday, September 6, 2012

முரீது எனும் ஆன்மீகப் பயணி Vs. ஷைத்தான்

 நீங்கள்லாம் முரீது முரீதுன்னு சொல்றீங்களே  அதுக்கு என்ன அர்த்தம் என்பது ஒரு FAQ (Frequently Asked Question).
 
முரீது என்ற வார்த்தை இராதத் என்பதிலிருந்து வந்தது. இராதத் என்றால் நாட்டம் என பொருள்.

முரீது என்றால் நாடக் கூடியவர் ன்பது பொருள்.

எதை நாடக் கூடியவர்?

செய்யதுனா கௌதுல்அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி(ரலி) அவர்கள் நாடக்கூடியவரை குர்ஆனில் மூன்று வகையாக கூறப்பட்டிருக்கிறது என வகைப்படுத்துகிறார்கள்.

Saturday, August 18, 2012

என் இதயமதின் இன்னுயிரே செய்யிதே நூரி!

ஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்)
 எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான்  என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள். (த்ஹுர் ரப்பானி பக்கம் 87)

அதனால் தான் 

"அன்தல் ஹாதி அன்தல் ஹக்கு லைஸல்  ஹாதி இல்லாஹு"  என  அல்லாஹ்வைத் தவிர வழிகாட்டி இல்லை என்ற ஏகத்துவ பண் பாடினார்கள் ஆன்மீக நாதர்கள். 

 "யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட நாடி விட்டானோ அவர்களுக்கு நேர்வழியை காட்டும் வலிமார்களை (நபியே!) நீங்கள் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்" என்கிறது இறைவேதம். 

அல்லாஹ்வே வலிமார்கள் மூலம் நேர்வழியில் செலுத்தும்  ஏகத்துவ மெய்ஞானத்தை அறிய இங்கே சொடுக்கி உள்நுழையுங்கள்.


Sunday, August 12, 2012

ஜகாத் ஒர்எளிய அறிமுகம் - பேரா. இஸ்மாயீல் ஹஸனீ

 அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஜகாத்,  இது ரமலான் காலங்களின் நாம் காதுகளில் அதிகமாக ரீங்காரமிடும் ஒரு வார்த்தை.

ஜகாத் என்பது  தொழுகையை போன்று கடமையாக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், நாம் ரமலானில் மட்டுமே அது பற்றி ஆலோசிக்கிறோம்.


Friday, August 10, 2012

அவமரியாதையை & போலிகுற்றச்சாட்டுகளை எப்படி கையாள வேண்டும் – ஃபஜிலா ஆசாத்

 ஃபஜிலா ஆசாத்தின் இந்த மனோதத்துவ உரையை சகோதரர் முதுவை ஹிதாயத் (ஈமான் டைம்ஸ்) அனுப்பி இருந்தார். நம் பக்கத்து வீட்டு சகோதரி நம்முடன் உரையாடுவது போன்று இஸ்லாமிய வழக்குத் தமிழும், சரளமான ஆங்கிலமும் கலந்த அருமையான உரை.  

என் மனைவி மிகவும் ரஸித்து கேட்டதுடன் புண்பட்ட மனங்களுக்கு மருந்திட புல்லாங்குழலிலும் இதை வெளியிடுங்கள் என உத்தரவிட்ட போது மறுபேச்சில்லாமல் இணைத்துவிட்டேன். 

பயப்பட வேண்டாம் really worth listening கேட்டு நீங்களும் மனதை ஆற்றிக் கொள்ளுங்கள். 

Saturday, July 28, 2012

படைப்பதனால் என் பெயர் இறைவன்!

 படைத்தல் என்றால் சிருஷ்டிகளுக்கு இருப்பை (existence) வழங்குதல் என பொருள்

எந்தப் பொருளையும் படைக்க முடியாதவற்றையா (இறைவனுக்கு) இணை வைக்கின்றனர்?அவைகளும் (இறைவனால்) படைக்கப்பட்டவையே.(7:191) என்கிறது இறைவேதம்.

‘படைக்குதல்’ என்பதை இறைத் தன்மையென்கிறது இந்த இறைவசனம்.

அதே நேரத்தில், இறைவன் தன்னை ‘படைப்பாளர்களில் அழகிய படைப்பாளன்’ என பல படைப்பாளர்களை தன்னுடன் ஒப்பிட்டு கூறுகின்றான்.

அப்படி என்றால் படைக்கும் சிருஷ்டிகளும் இறைத் தன்மை பெற்றவையா? 

Friday, July 27, 2012

இலக்கிய வாசிப்பும் குர்ஆன் வாசிப்பும்

இது ரமலான் மாதத்திற்கு முன்பு எழுதியது. 
வேலை பளுவினால் சற்று தாமதமாக வெளியிடப்படுகின்றது.

 சுந்தரராமசாமி தமிழ் இலக்கியத்தில் ஒரு மகத்தான ஆளுமை. அவரதுஜே.ஜே. சில குறிப்புகள்என்ற நாவல் என்னை கவர்ந்த அளவு அவரதுஒரு புளியமரத்தின் கதைஎன்னை கவரவில்லை. எழுத்தாளர் ஜெயமோகனோ புளியமரத்தின் கதையை தமிழின் முக்கியமான நாவலாக குறிப்பிடுகின்றார். நல்ல இலக்கியம் என்று சொல்ல பட்ட வேறு சில நூல்களும் வாசிக்க சலிப்பூட்டுபவைகளாக எனக்கு இருப்பதை கண்டேன். சிந்தித்து பார்த்ததில் என் புரிதலின் போதாமை இது. இலக்கிய வாசிப்பில் எனக்குள்ள பயிற்சி குறைவின் விளைவு இது  என்பதை உணர்ந்தேன்

Wednesday, July 18, 2012

ரமளான் வருகிறது உன் கோப்பையில் காதல் தீயை ஊற்றிக் கொள்!

 ரமளான்!
இது இறைக்காதலர்களின் மாதம்.
எட்டா? இருபதா? என்ற கத்திச் சண்டை எல்லாம்
சற்றே நிறுத்தி வைப்போம்.
முகத்தோடு முகம் நோக்கும்
காதலர்களின் நந்தவனமிது!
தயவு செய்து இந்த குளத்தில் யாரும் கல் எறிய வேண்டாம்.

Friday, June 29, 2012

ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும் - அ.முத்துகிருஷ்ணன்


நம் தாயகத்தின் தவப்புதல்வர்களில் ஒருவரான தத்துவ மேதை திரு. ஜே.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் கேட்பது, உன்னிப்பாக கேட்பது (hearing and listening) என்பதன் வித்தியாசத்தை இப்படி விளக்குவார் :

கவனத்துடன் கேட்பது என்பதில் ஒப்புக் கொள்ளுதலோ மறுத்தலோ இல்லை. உங்களிடம் பேசுபவர் எதை சொல்ல விழைகிறார் என்பதை பேச்சளவில் மட்டுமின்றி ஆழமாக புரிந்து கொள்ளவே நீங்கள் கவனத்துடன் கேட்கிறீர்கள். அவர் சொல்வதை எதிர்த்து பேசினாலோ, உங்கள் தனிப்பட்ட கருத்தை திணிக்கப் பார்த்தாலோ கவனமாக கேட்பது என்பது இல்லாமல் போகிறது. விமர்சனங்களோ, மொழிபெயர்ப்புகளோ செய்யாமல் சொல்லப்படும் விசயத்தை கவனத்துடன் கேட்பதால் அடிப்படை மாற்றம் பெற்ற முழுமையான புரட்சி, உள்ளாழ் மனதில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அத்தகைய புரட்சி மட்டுமே மதிப்பிற்குரியது. அடையத் தக்கது என்பார் ஜே.கே.உயிர்மையில் வெளிவந்த அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் இந்த அருமையான கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துகிருஷ்ணனின் இந்த கட்டுரை நம் அகசெவியின் கவனமாக கேட்டலை வேண்டி நிற்கிறது.

Thursday, June 21, 2012

என் பெயர் பஷீர் ( நகைச்சுவை கதை)

 “நகைச்சுவையாக எழுதி தாருங்கள் அமீன்” என ஆபிதீன் நானா கேட்டுக் கொண்டதற்காக எழுதப்பட்ட கதை. ‘ஆபிதீன் பக்கங்களில்’ வெளியிடப்பட்டது. 

“சிரிக்க தெரிந்தவர்கள் இந்த கதையை வாசியுங்கள்” என எழுத்தாளர் ஆபிதீன் நானாவும்,  “கோடையின் அவஸ்த்தையிலிருந்து கொஞ்சம் விடுப்பு தந்த சுகத்தை அனுபவித்தேன்” என எழுத்தாளர் தாஜும் பாராட்டிக் கூறியதால் சிற்சில மாற்றங்கள், கூடுதல் சம்பவத்துடன் புல்லாங்குழலில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Thursday, June 14, 2012

இன்னுமொரு தரிசனம்! - தாஜ்

 

மலையாளக் கவிஞர் ஐய்யப்பன் அவர்களது, 'ஐய்யப்பன் கவிதைகள்' தொகுப்பிற்கான எழுத்தாளர் தாஜின் மதிப்புரை. உன்னதம் நவ, டிச 2005 இதழில் வெளி வந்தது. அவரே செய்த சில மாற்றங்களுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் நண்பரும் படைப்பாளியுமான ஜெயமோகனால் எனக்கோர் பின்னடைவு ஏற்பட்டது. சிற்றிதழ்களின் வழியே, தமிழ் மொழியில் மாற்றம் காணும் மலையாளக் கவிதைகளைத் தேடி ஆர்வமாய் வாசிப்பதிலிருந்து நேர்ந்த பின்னடைவு அது.

Sunday, June 10, 2012

கடந்த கால காட்சி யாவும் கண்ணில் அலையாய் மோதிடும்!

“கடந்த கால காட்சி யாவும் 
கண்ணில் அலையாய் மோதிடும்
சிறந்த காலம் எம்மை விட்டு
சென்றதை மனம் நொந்திடும்”


எங்கள் குருநாதர் (ஷைகு) ஃபைஜிஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் பிரிவினால் விளைந்த இழப்பை எண்ணி வருந்தும் உள்ளங்ளில் ஒலிக்கும் பாடல் வரிகள் இவை.


Sunday, June 3, 2012

பிரம்மராஜன் - வேறொருப் புதுக்கவிதை! - தாஜ்..

 புது கவிதை எழுத பயின்ற விதத்தை சுவராஸ்யமாக எழுதியுள்ளார் கவிஞர் தாஜ்.  தாஜ் எழுதும் கவிதைகளை விட சுவராஸ்மானவை அவரது கவிதைகளை பற்றிய கட்டுரைகள். அத்துடன் பிரம்மராஜன் அவர்களின் சுவையான பேட்டியையும் இணைத்து வ.ந. கிரிதரனின் 'பதிவுகள்' (டிசம்பர் 2006) இதழில் வெளியானது நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

Saturday, June 2, 2012

அன்பு சகோதரி அஸ்மாவுக்கு!

நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரி அஸ்மாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாங்கள் கேட்டிருந்த  கேள்விக்கு எழுத ஆரம்பித்த பதில் சற்றே நீண்டு விட்டதால் தனி இடுகையாய் பதிந்து விட்டேன்.

முந்தைய காலத்தில் ராபியா பஸரிய்யா ரலியல்லாஹு அன்ஹா போன்ற மகத்தான பெண்மணிகள் மார்க்க சேவையாற்றியுள்ளார்கள். இந்நாளில் பெண்கள் மார்க்க சேவைக்கு வருவது எவ்வளவு மகத்தானது!. அந்த வகையில் உங்கள் மார்க்கப் பற்றும், சேவையையும் மகிழ்ச்சியான ஒன்றாகும். தாங்கள் புல்லாங்குழலுக்கு வருகை தந்ததற்கு கூடுதல் மகிழ்ச்சி! நன்றி!

Friday, June 1, 2012

திரை விலகட்டும்!


ரகசியங்கள் பகிரங்கமாகும் மறுமை நாளில் இறைவன் பிரகடனம் செய்வான்:

 “இன்று ஆட்சியதிகாரம் யாருடையது? எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுடையதே”. (40:16)

மிஸ்காத்துல் அன்வார் எனும் நூலில் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இப்படி எழுதியுள்ளார்கள்.
இறைவனின் வஜ்ஹை(being) தவிர யாவும் அழிபவையாய் இருக்கின்றன. இந்த ஆத்ம ஞானம் பெற்றவர்கள், “இன்று ஆட்சியதிகாரம் யாருடையது? எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுடையதே”. என்று இறைவன் பிரகடனம் செய்வதை கேட்க மறுமை நாளில் எழுப்பப்படும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் அந்த அழைப்பு சதாவும் அவர்களின் செவிகளில் ஒலித்த வண்ணமே இருக்கிறதுஎன்று.