 |
| ஷெய்குல் அரபி வல் அஜம் ஃபைஜிஷாஹ் நூரி(ரலி) |
முஹய்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி(ரலி), காஜா முய்னுத்தீன்
(ரலி), ஜுனைதில் பக்தாதி(ரலி). அபுபக்கர் ஷிப்லி(ரலி) என இறைநேசர்களின் சரித்திரத்தை
படித்திருக்கின்றோம். அந்த வழியில் வந்த ஒரு இறைநேசரின் சகவாசத்தில் வாழும் மகத்தான
பாக்கியம் என் போன்றோருக்கு கிடைத்தது இறைவன்
வழங்கிய பெரும்பேறு."அவ்லியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவிற்கே சுகம்
சுகம்" என்று பாடிய மறைந்த கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் பாடல் வரிகள் தான் இங்கே நினைவில் வருகின்றது.
வலிகள் கோமான் முஹய்யத்தீன் ஆண்டகையின் சரிதத்திலிருந்து பெரியோர்கள்
எடுத்துக் கூறிய ஒரு சம்பவம்:
கௌதுனா தன் சீடர்களுடன் ஆன்மீக சபையில் அமர்ந்திருக்கின்றார்கள். அப்போது
சீடர் ஒருவர் “ இப்போது நாம் அமர்ந்திருப்பது பெருமானாருடன் சஹாபாக்கள்
வீற்றிருப்பது போல் இருக்கிறது” என கூறவும் கௌதுனாவின் அழகிய முகம் சிவந்து விட்டது.