தோழமையுடன்

Showing posts with label ஜே.கிருஷ்ண மூர்த்தி. Show all posts
Showing posts with label ஜே.கிருஷ்ண மூர்த்தி. Show all posts

Thursday, February 13, 2014

விடுதலை பெற்ற அறிவு!



The Diffusion of Ibn 'Arabi's Doctrine   என்ற Michel Chodkiewicz ன் கட்டுரையின் ஒரு பகுதி இது. இதை வாசித்து பாருங்கள்;
 
இரண்டாம் உலகப் போருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக, புகழ் பெற்ற எழுதாளர் நிக்கல்ஸன் தன்னுடைய எகிப்திய மாணவராகிய ஒருவரிடம் இப்னு அரபி (ரஹ்) அவர்களின் படைப்புகளை படிக்கச் சொன்னார். இந்த மாணவர் தான் பின்பு வெளியான பிரபல்யமான “The Mystical Philosophy of Muhyid Din Ibnul 'Arabî” எனும் நூலின் ஆசிரியர் A.A.அஃபிஃபீ. 

Friday, June 29, 2012

ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும் - அ.முத்துகிருஷ்ணன்


நம் தாயகத்தின் தவப்புதல்வர்களில் ஒருவரான தத்துவ மேதை திரு. ஜே.கிருஸ்ணமூர்த்தி அவர்கள் கேட்பது, உன்னிப்பாக கேட்பது (hearing and listening) என்பதன் வித்தியாசத்தை இப்படி விளக்குவார் :

கவனத்துடன் கேட்பது என்பதில் ஒப்புக் கொள்ளுதலோ மறுத்தலோ இல்லை. உங்களிடம் பேசுபவர் எதை சொல்ல விழைகிறார் என்பதை பேச்சளவில் மட்டுமின்றி ஆழமாக புரிந்து கொள்ளவே நீங்கள் கவனத்துடன் கேட்கிறீர்கள். அவர் சொல்வதை எதிர்த்து பேசினாலோ, உங்கள் தனிப்பட்ட கருத்தை திணிக்கப் பார்த்தாலோ கவனமாக கேட்பது என்பது இல்லாமல் போகிறது. விமர்சனங்களோ, மொழிபெயர்ப்புகளோ செய்யாமல் சொல்லப்படும் விசயத்தை கவனத்துடன் கேட்பதால் அடிப்படை மாற்றம் பெற்ற முழுமையான புரட்சி, உள்ளாழ் மனதில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அத்தகைய புரட்சி மட்டுமே மதிப்பிற்குரியது. அடையத் தக்கது என்பார் ஜே.கே.



உயிர்மையில் வெளிவந்த அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் இந்த அருமையான கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துகிருஷ்ணனின் இந்த கட்டுரை நம் அகசெவியின் கவனமாக கேட்டலை வேண்டி நிற்கிறது.

Thursday, January 12, 2012

மெலிதாக ஒரு தற்கொலை


ஒரு நடிகை சொன்னாள் : நான் குளித்து கொண்டிருக்கும் போது ஒரு பெரிய அலையில் என் மேலாடை போய் விட்டது. அப்புறம்வெட்கமாய் இருந்துச்சு. கண்ணை மூடி கொண்டு ஓடி வந்துட்டேன்.” 

அஷ்ரஃப் இதற்கெல்லாம் சிரிக்கமாட்டான் என்று தெரிந்தே அந்த ஹைதர் காலத்து நகைச்சுவை துணுக்கை சொன்னான் இக்பால்.

என் மனக்கண்ணை மூடிக் கொண்டு ஓடிய நிர்வாண ஓட்டங்களின் reality என்னை சுடுகிறது இக்பால்என்றான் அஷ்ரஃப்.

Thursday, October 28, 2010

ஏகத்துவம் என்னும் ஒருமையின் தரிசனம்



Hindutva is understood as a way of life or a state of mind and is not to be equated with or understood as religious Hindu fundamentalism”.- Supreme Court of India. 
- தமிழ் ஹிந்து என்ற தளத்திலிருந்து. 

Friday, August 13, 2010

உள்ளுணர்வு என்னும் ஒளி விளக்கு


அஞ்ஞானிகளிடம் இரண்டு அறியாமைகள் இருகின்றன ஒன்று அறியாமை என்ற அறியாமை. மற்றொன்று அறிவு என்ற அறியாமை. இவ்விரண்டும் நீங்க வேண்டும். தவிர, ஒன்று நீங்கி மற்றொன்று மிஞ்ச வேண்டும் என்பது அஞ்ஞானம் என்கின்றார் ரமணர் என்ற இந்து மத ஞானி. ஜே.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்பதும் இதையே குறிக்கின்றது. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இமாம் கஸ்ஸாலி என்ற இஸ்லாமிய ஞானியின் சொல்லும் இதையே வலியுறுத்துகின்றது. நாம் அறிந்தவற்றிலிருந்து விடுதலை பெறுவதால் என்ன கிடைக்கும் என்ற கேள்விக்கு விடையாக ‘மகத்தான மெய்யறிவு என்னும் இறையருள் ஞானம்’என்கிறது ஆன்மீகம்.

Friday, July 30, 2010

கடவுளை காண முடியுமா?


டெல்லி சாந்தினி சௌக்கில் மத்திய அரசில் பணிபுரியும் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் இரண்டு பேர் பேசிகொண்டிருந்ததை கவனித்தார்.
‘கடவுளை காண முடியுமா?’ என்று ஒருவன் கேட்க,
‘ஓ முடியுமே உன் கோட்டை கழற்றி விட்டு பத்தடி முன்னால் சென்று பார் கடவுள் தெரிவார்’ என்றான் மற்றவன்.