தோழமையுடன்

Thursday, February 13, 2014

விடுதலை பெற்ற அறிவு!The Diffusion of Ibn 'Arabi's Doctrine   என்ற Michel Chodkiewicz ன் கட்டுரையின் ஒரு பகுதி இது. இதை வாசித்து பாருங்கள்;
 
இரண்டாம் உலகப் போருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக, புகழ் பெற்ற எழுதாளர் நிக்கல்ஸன் தன்னுடைய எகிப்திய மாணவராகிய ஒருவரிடம் இப்னு அரபி (ரஹ்) அவர்களின் படைப்புகளை படிக்கச் சொன்னார். இந்த மாணவர் தான் பின்பு வெளியான பிரபல்யமான “The Mystical Philosophy of Muhyid Din Ibnul 'Arabî” எனும் நூலின் ஆசிரியர் A.A.அஃபிஃபீ. 


அஃபிஃபீ ‘ஃபுஸுஸ்’ நூலை பல முறை படித்தும், கஷானியின் (Qashan)  விளக்கத்தைப்  படித்தும் கூட தன்னால் அதில் இருக்கும் எந்த விஷயத்தையுமே பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று தானே ஒப்புக் கொண்டார்கள். மேலும், இவர்கள் நிக்கல்ஸன் அவர்களிடம் தனக்கு இதுவரை அரபு மொழியில் எழுதப்பட்ட எந்த நூலும் இது போன்று கடினமாக இருந்ததில்லை என்றும் இதுவே முதன் முறை என்றும் கூறினார்கள். 

பல ஓரியன்டலிஸ்டுகளும் கூட ஷெய்குல் அக்பர் (ரஹ்) அவர்களின் எழுத்துக்களை எதிர்கொள்ளும் போதும் இதே போல் குழப்பங்களையே சந்தித்தார்கள். 

Michel Chodkiewicz  மேலும் சில எழுத்தாளர்களின் நிலையை இப்படி விவரிக்கிறார்:

Clement Huart does not hide the trouble that their "disordered fantasy" inspires in him;

 Arberry deplores the "confusion of the mental universe of Ibn 'Arabi", and "his heterogeneous and incoherent technical vocabulary".

The subtlety of a doctrine which embraces, in a vertiginous synthesis, all the domains of the traditional sciences, from fiqh to metaphysics, the often paradoxical or enigmatic turns of phrase that the Shaykh al-Akbar gives them, the immensity, in short, of a work which comprises tens of thousands of pages, seems a priori well suited to discourage the diffusion of akbarian doctrine. 

இந்த ஆய்வாளர்களின் கருத்து சொல்லும் உண்மை ஆன்மீக நுட்பம் என்பது புத்தக அறிவால் கிடைப்பதல்ல. புத்தக ஆய்வு ஒரு சில வெளிச்சங்களை நம் மீது வாறி இறைக்கும். அதை நம் பகுத்தறிவால் ஊதி பெருக்கும் போது உண்மை நம்மை விட்டு ஓடி ஒளிந்து விடும். இங்கு தான் ஆத்மீக குருவின் தேவை  ஏற்படுகின்றது.

ஒரு நல்ல ஆசான் நம் அறிவால் சேகரித்த முன் முடிவுகளை உடைத்துக் கொண்டே இருப்பார். தன் அறிவின் திறமையில் ஆணவம் கொண்ட உள்ளம் அதை எதிர்த்து புறம் தள்ளும். ஆணவமற்ற உள்ளத்திலோ புரிதலின் போதாமை விளங்கும் நிலையில் அறிவின் திறமையால் ஏற்பட்ட மறைவான கர்வமும் உடைக்கப்படும். அந்த நிலையில் நமக்கு  ஒன்றுமே விளங்கவில்லையே என்ற அலுத்து ஓயும் மனது அறிவின்  எல்லா தளைகளிலிருந்தும் விடுபட்டு நிற்க்கும்

பள்ளத்தை நோக்கி வெள்ளம் வருவது போல் அந்தஅறியாமைநிலை தான் ஞானத்தை உள்வாங்கும் திறனை – receptivity நமக்குத் தரும்.

அல்லாஹ்வைத் தவிர இலாஹ் இல்லைஎன்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர். (37:35) என்கிறது இறைவேதம்.

லா இலாஹ இல்லல்லா என்பது மறைவான ஒரு ஞானத்தை திறந்து சொல்கிறது. குர்ஆன் என்ற இறைவேதத்தின் ஆரம்பமே மறைவானவற்றின் மீதான நம்பிக்கை கொண்டோர்களுக்கான நேர் வழி என்ற விளக்கத்துடன் தான் ஆரம்பிக்கிறது. அது புலன் உணர்வுகள், இன்னும் ஆராய்ச்சி சிந்தனையால் ஊட்டம் பெற்ற பகுத்தறிவிற்கு அதன் அடுத்தகட்டத்தை  நோக்கிய நகர்தலுக்கான அழைப்பு. 

காலந்தோறும் வந்த நபிமார்கள் கொண்டு வந்த இந்த ஞானத்தை பகுத்தறிவால் கர்வம்  கொண்டு பெருமையடித்தவர்கள் புறக்கணித்தார்கள். கர்வங் கொண்ட பகுத்தறிவே அவர்களுக்கு திரையானது. இதையே:

உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள். (2:87)

பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்40:35 என்கிறது இறைவேதம்.

நபிமார்களின் காலம் முடிந்து விட்டது.அந்த நபிமார்களின் சேவை கலிமாவின் ஞான விளக்கத்தை கொண்டு உள்ளங்களை பரிசுத்தப்படுத்தும் வலிமார்களின் மாறலாய் தொடர்கின்றது.

0 0 0

அஞ்ஞானிகளிடம் இரண்டு அறியாமைகள் இருகின்றன ஒன்று அறியாமை என்ற அறியாமை. மற்றொன்று அறிவு என்ற அறியாமை. இவ்விரண்டும் நீங்க வேண்டும். தவிர ஒரு அறியாமை நீங்கி மற்றொன்று மிஞ்ச வேண்டும் என்பது அஞ்ஞானம் என்கின்றார் ரமணர் என்ற இந்து மத ஞானி. ஜே.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்பதும் இதையே குறிக்கின்றது. பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இமாம் கஸ்ஸாலி என்ற மகத்தான இஸ்லாமிய ஞானியின் சொல்லும் இதையே வலியுறுத்துகின்றது. நாம் அறிந்தவற்றிலிருந்து விடுதலை பெறுவதால் என்ன கிடைக்கும் என்ற கேள்விக்கு விடையாக மகத்தான மெய்யறிவு என்னும் இறையருள் ஞானம்என்கிறது ஆன்மீகம்

மேலும் விளக்கம் பெற கீழ் கண்ட சுட்டிகளில் உள்ளதை திறந்த மனதுடன் படித்து பாருங்கள்.

குர்ஆன் கூறும் ஏகத்துவ மெய்ஞானம் ஓர் எளிய விளக்கம் – 4


உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: