தோழமையுடன்

Tuesday, February 11, 2014

அன்பான சூஃபி வழி பயணிகளுக்கு சில வார்த்தைகள்.

 இந்த கட்டுரை ஆன்மீக ஞான பயணிகளை  ஓர் நுட்பத்தின் பக்கம் சிந்திக்க அழைக்கும்  கவன ஈர்ப்பு. அதனால் அதில் பரீட்சயம் இல்லாதவர்கள்  படிக்கும் போது சில கலைச் சொற்கள் புரியாவிட்டால் தகுந்த ஆன்மீக அறிஞர்களின் வாயிலாய் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். சிரமத்திற்கு என்னை மன்னிக்கவும்.
 
குர்ஆனில்  இலாஹ் என்ற சொல்லும், ரப்பு என்ற சொல்லும் மிகவும் நுட்பமான வேறுபாட்டுடன் பயன் படுத்தப்பட்டுள்ளது. உலூஹிய்யத் – ருபூபிய்யத் இரண்டின் வேறுபாடு பற்றி உங்கள் சிந்தனைக்கு சில சுருக்கமான வார்த்தைகள்:


உலூஹிய்யத்தில் இன்னொருவருக்கு இடமே இல்லை. லா அனைத்து சிருஷ்டியிலிருந்தும் உலூஹிய்யதை நஃபி செய்து சிருஷ்டிகளை தன் ஐனியத்தினால் காட்சியளிக்க செய்யும் ஹக்கின் உஜுதில் இஸ்பாத் செய்து விடும்.

ஐனியத் என்பது குர் ஆனிய மொழியில் குர்பியத், அக்ரபியத் எனும் வார்தைகளுக்கான சூஃபி வழக்குச் சொல்.

அல்லாஹு என் ரப்பு அவனுக்கு நான் இணைவைக்க மாட்டேன். அல்லாஹு ரப்பு அவனுக்கு நீங்கள் இணைவைக்க வேண்டாம் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள். அதே நேரத்தில்

ரூபூபிய்யத்தில் –

‘ரப்பையானி’ என பெற்றோர்களையும,

ஹைருர் ராஜிகீன், அஹ்ஸ்னுல் ஹாலிகீன் என ஏனைய சிருஷ்டிகளையும் தன்னுடன் சேர்த்து கூறும் மஜாஸான இரவல் இணைப்பும் உண்டு.

இங்கு தான் இருமையின் நுட்பம் ஆரம்பமாகிறது.

நமது ஈமான் : அல்லாஹ் தவிர இலாஹ் இல்லை என்பது.

ஆனால் ஆலமே அர்வாஹில் கேட்கப்பட்ட கேள்வி : ரப்பு யார் என்பதை பற்றி.

வாழும் காலத்தில்....

தொழும் போது, நின்ற நிலையில் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ 

அடுத்த நிலையான ருக்கூவிலும் ‘சுப்ஹான ரப்பியல் அளீம்’ 

நிமிர்ந்ததும் ‘ரப்பனா! லக்கல் ஹம்து’ 

 ‘சுப்ஹான ரப்பியல் அஃலா’ 

ஆக நம் ஒவ்வொரு நிலையிலும் நம்முடன் இருந்து நம்மை நிலை மாற்றும் ரப்பை புகழுமாறு இறைவன் நமக்குத் தொழுகையை அமைத்துள்ளான். இதன் தத்துவம் என்ன?

நமது மரணத்திற்குப் பிறகு மண்ணறையில் கேட்கப் படும் முதல் கேள்வியும் ‘உன் ரப்பு யார்?’ என்பது தான். ஏன் உன் இலாஹ் யார்? என கேட்கப்படுவதில்லை? - இது உங்கள் யோசனைக்கு.

ஆக இலாஹ் என்பதற்கும் ரப்பு என்பதற்கும் நுட்பமான வேறுபாடுகள் அறியப்பட வேண்டும்.

திடமாக மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில் மிக தாழ்ந்தவனாக்கினோம். எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை(செயல்களை) செய்கிறார்களோ அவர்களைத் தவிர (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு. (95:4-6)

நப்ஸின் மீதும், இன்னும் அதனை செவ்வையாக்கியவன் மீதும் சத்தியமாக!
அப்பால் அதன் (நமது நப்ஸிற்கு அதன் வளர்ச்சியைக் கெடுக்கும்) தீமையையும் (அதனை அல்லாஹ் அளவில் முன்னேறச் செய்யும்) தக்வாவையும் உணர்த்தினான்.
திட்டமாக (நப்ஸாகிய) அதைத் தூய்மை படுத்தியவன் வெற்றியடைந்து விட்டான். அதை (பாவச் செயலில்) எவன் களங்கப் படுத்தி விட்டானோ அவன் திட்டமாக நாசமடைந்து விட்டான்.(91: 7-10)

மேலே கூறியுள்ள ஆயத் (95:4-6) தனஜ்ஜுலாத்தை பற்றிய இஷாரா.


‘எவ்வளவு இறங்கி வந்தாலும் ரப்பு ரப்பு தான்.
எவ்வளவு உயர்ந்தாலும் அடியான் அடியான் தான்’

அர் ரப்பு ரப்பு வஇன் தனஜ்ஜுல்

அல் அப்து அப்துன் வஇன் தரக்கா 


தனஜ்ஜுல், உரூஜை குறிக்கும்  போது ஷெய்குல் அக்பர் இப்னு அரபி ரல்யல்லஹு அவர்கள் " ரப்பு - அப்து" என்ற இருமை நிலையை கூறுவது விசேஷமாக கவனிக்க வேண்டியவை.


தாழ்ந்த நிலை என்பது தன்னை அல்லாஹ்வை விட்டும் தனித்த மௌஜுதாக விளங்குவதில் ஆரம்பிக்கிறது.

‘ஃபிஸ்கு’ எனும் பிரிவினை பற்றி குர்ஆன் கூறுகின்றது.

அன்றியும் அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று ஆகி விடாதீர்கள். ஏனெனில் அவர்கள் தங்களை மறக்கும் படி (அல்லாஹ்) செய்து விட்டான்.அத்தகையோர் தான் ஃபஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவர்கள்.59:19

To forget God is to forget the only Reality. As we are only reflected realities how can we understand or do justice to or remember ourselves when we forgot the very source of our being. (Allama Yousus Ali (rah) Quran translation Page 1527.)

ஃபாஸிக் என்பது ஃபிஸ்க் என்பதிலிருந்து வந்தது ஃபிஸ்க் என்றால் பிரிவினை என பொருள்.(தப்ஸீர் ஹமீது)

இப்போது பிரிவினையால் அடைந்த தாழ்விலிருந்து உயரும் மீட்சிக்கு வழி என்ன? குர்பு எனும் நெருக்கம் தான் மீட்சியின் பாதையும். பயணமும். இது தான் சுலூக்  (பயணம்) என்பதன் அடிப்படை.

அதன் வழிமுறை அமலே சாலிஹா எனும் நல்லமல்கள்.

நான் சுயமாக செய்தேன் என்ற இணை வைப்பும், தற்பெருமையும் இல்லாதவை தான் நல்லமல்கள். லா குவ்வத்த இல்லா பில்லாஹ்.

அமலே சாலிஹா :

1.   பர்லான வணக்கங்களைக் கொண்டு அடையும் குர்பு – குர்பே பராயிழ்.

2.   நபிலான வணக்கங்களைக் கொண்டு அடையும் குர்பு – குர்பே நவாஃபீல் என இருவகைப்படும்.

அன்புஸில் (தன்னில்) யாஃப்தும் இன்னும் ஆஃபாக்கில் (தனக்கு வெளியே)ஷுஹுது என்பதும் இந்த அமல்களின் உயிரான இஹ்ஸானுடைய நிலையாகும்.

 இஹ்ஸான் என்பது: அல்லாஹுவை அவனைப் பார்ப்பது போன்று நீ வணங்குவதாக இருக்கும், அப்படி (அகப்பார்வையினால்) நீ அவனைப் பார்ப்பவனாக ஆகியிருக்கவில்லையானால், அவன் உன்னை நிச்சயமாக பார்த்தவனாகவே இருக்கின்றான்.” இது (புகாரி, முஸ்லிம் ஷரீஃபில் உள்ள) பிரபலமான நபிமொழி.

இந்த ஹதீஸை ‘ஹதீஸே இஹ்ஸான்’ என்றும் ‘ஹதீஸே ஜிப்ரயீல்’ என்றும் கூறுவர்.

தன் நிலையில் எந்த மாற்றமும் இன்றி பிற உருவத்தில் காட்சியளிக்கும் தமஸ்ஸுல் என்ற முறையில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பகிரங்கமாக மனித உருவத்தில் காட்சியளித்து வெளிப்படுத்தப்பட்ட இதன் வித்தியாசமான பின்னணி நம் கவனத்தை your attention please எனக் கவர்ந்திழுக்கிறது.

அதற்கும் மேலான அதன் ருசிகரமான ஆழ்ந்த நுட்பங்களை ஆன்றோர்களை அணுகி விளக்கம் பெறுவது நலம். அதன் மூலம், இந்த ஹதீஸ் எதற்காக? (contextual circumstance) நபிகள் பெருமான் எம் முறையில் இதை திருவுளமானார்கள் என்பது புரிய வரும். இவ்வகையில் இந்த நபி மொழி ஆழ்ந்து அறிய வேண்டிய பாடமாக இருக்கிறது. மேலும் இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டும் இலக்கு (objective core point) என்னவெனில் :

1.     இறைவனை வணங்குதல் (இபாதத்).

2.     வணக்கத்தின் தரத்திற்கான வழி முறை (Qualitative aspect of devotion)  

3.     “இபாதத்” என்றால் எது என்ற விளக்கம்.

இந்த ஹதீஸின் இறுதியில் ஜிப்ரீல் (அலை) நம் மார்க்கத்தைப் பற்றி நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக வந்தார்கள் என்ற பெருமானாரின் முத்தாய்பான விளக்கம் இந்த இஹ்ஸான் என்ற அகப்பார்வை நிலை இல்லாமல் நம் மார்க்கம் (தீன்) முழுமையடையாது என்பதை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.

இஹ்ஸானுடைய நிலை என்பது மர்த்தபே ஹக்கும், மர்த்தபே ஹல்கும் பேணும்  நிலை. 

மர்த்தபாக்களில் உள்ள வேறுபாடுகளை அறிந்து பேணாதவன் – ஜிந்திக் என்பது வலிமார்களின் தீர்ப்பு.

மர்த்தபாக்களை பற்றி பேசும் தனஜ்ஜுலாத்தை பற்றிய இல்ம் ஒரு காமிலான ஷெய்கின் மாறலாக ஆழ்ந்து அறியப்பட வேண்டியது. இது மூளையால் ஆராய்ந்து அறியும் விசயமல்ல.

மர்த்தபாக்களின் வேறுபாடு பற்றிய சுருக்கம் இதோ:

மர்தபாக்கள் 7 அவை அஹதியத், வஹதத், வாஹிதியத், ரூஹ், மிஸால், ஜிஸ்ம், இன்ஸான்

தனஜ்ஜீல்கள் 6 அவை , வஹதத், வாஹிதியத், ரூஹ், மிஸால், ஜிஸ்ம், இன்ஸான்.  

மராதிபே இலாஹிய்யா 3 அவை அஹதியத், வஹதியத், வாஹிதியத்

மராதிபே கவ்னிய்யா 3 அவை  ரூஹ், மிஸால், ஜிஸ்ம்.

மர்தபாயே ஜாமிஆ 1 அதுவாகிறது இன்ஸான்.

ஹஜராதே கம்ஸா 5 அவை வஹதத், வாஹிதியத், ரூஹ், மிஸால், ஜிஸ்ம்.

ஜுஹுரே இல்மீ 2 அவை வஹதத், வாஹிதியத்

ஜுஹுரே அய்னீ 4 அவை ரூஹ், மிஸால், ஜிஸ்ம், இன்ஸான்.

மர்த்தபாக்களை விளக்கும் பாணியினால் விளைந்தது தான் உஜுது ஒன்று. தாத் ஒன்று என்பதும் உஜுது ஒன்று தாத் இரண்டு என்பதும். 

உஜுது ஒன்று. தாத் ஒன்று என்பது ஹகீகத்தை முன்னோக்கிய பார்வை.

உஜுது ஒன்று தாத் இரண்டு என்பது ஷரீஅத்தையும், தரீகத்தையும் ஒன்று படுத்தி கூறும் தகாயிக்கின் அடிப்படையில் அமைந்த விளக்கம்.

அயானே தாபிதா’ பற்றிய விளக்கம் தான் இதில் தெளிவை தரும்.

வார்த்தைகளிலேயே சிக்கி மூழ்கி விடாமல் அர்த்தத்தின் பக்கம் நகர வேண்டும்.

அந்த நூரை நம் கல்பினில் ஏற்ற காமிலான ஷெய்கின் தர்பியத் அவசியம் என்பதும் இன்னும் ஹகீகத்துடைய இல்மை அடைந்த பிறகு அதை ஷரீஅத்திற்க்கு நேர்பாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் தான் மிகமிக அவசியம்.




உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.

No comments: