தோழமையுடன்

Monday, November 4, 2013

தாஜ் தந்த உண்மை கலந்த நாட்குறிப்புகள்

 ‘பால்ய விவாஹம்’ என்ற சிறுகதையை ஆபிதீன் பக்கங்களில் படித்தேன். அதைப் பற்றிய சில எண்ணப் பகிர்வுகள் இவை.

 ‘பால்ய விவாஹம்’ என்ற உடனே அட்ட பழசு – ஹப்பி காலத்து கதை இப்ப எதுக்கு என அவசரப்பட வேண்டாம். விசயம்... புதுசு கண்ணா புதுசு!.

கதைக்குள் புகுமுன் சில முன் குறிப்புகள்….

“இந்த நாவலில் உள்ள அனைத்தும் என் மூளையில் உதித்த கற்பனை. அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டு பிடித்தால் அது தற்செயலானது. அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.” – (அ.முத்துலிங்கம் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ நூலின் முன்பக்கத்தில் எழுதிய வரிகள் இவை) 

அ.முத்துலிங்கம் எழுதிய “உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற நூலை ‘சுயசரித தன்மைக் கொண்ட புனைவு’ என அறிமுகம் செய்கிறது உயிர்மை பதிப்பகம். 

Saturday, October 19, 2013

இஸ்லாம் - காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து

 காலச்சுவடு, அக்டோபர் 2013 இதழில் வந்த  கட்டுரையின் சுட்டி இதோ :  

 இஸ்லாம் சில புரிதல்களை நோக்கி” - களந்தை பீர்முகம்மது


கட்டுரையை படித்து விட்டீர்களா? 

இனி, அதைப் பற்றிய சில கருத்து பகிர்வுகள் உங்கள் பார்வைக்கு: “நபிகள் நாயகத்தின் ஈகை, தனி மனித உறவுகள், அறச்செயல்கள் போன்றவை நபிகள் நாயகத்தின் இரக்க உணர்வு என்பதாகக் குறுக்கப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் அழகிய முன் மாதிரி, இஸ்லாம் ஓர் அற்புதம் என்று பல்லாயிரமானோர் நிகழ்த்திவரும் விளக்கப் பிரச்சாரங்கள் இன்னமும் அதன் தொடக்க நிலையிலேயே நிற்கின்றன; இவ்வாறான சமயப் போதனைகளால், நடைமுறையில் நம் மனதுக்குள் எழும் சித்திரம் இஸ்லாம் - ஓர் ஆன்மீகத் தூய்மைஎன்பதாம். ஆனால் இதுவல்ல இஸ்லாம்!என கூறும் பீர் முகம்மது

Wednesday, October 9, 2013

விழி பிதுங்கும் எழுத்தாளர்… கண்டு கொள்ளாத தமிழ் இலக்கிய உலகம் - என். சுவாமிநாதன்


 தமிழ் படைப்பாளி குளச்சல் மு.யூசுப்புக்கு அறிமுகம் தேவையில்லை. நாவல்கள், சுய சரிதைகள், அனுபவம் பகிர்வுகள் என 28 நூல்களை, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.
குளச்சல் மு.யூசூஃப்

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்காக இவர், சங்க இலக்கிய நூலான நாலடியாரைமலையாளத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். 

அந்த நூலை, பிழைத்திருத்தம் செய்து தருவதாகக் கேட்டு வாங்கிய மலையாளஎழுத்தாளர் ஒருவர், அதை தனது பெயரிலேயே வெளியிட்டு விட்டார், இச் சம்பவம் நடந்து
ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்றைய தேதி வரை, தமிழ் இலக்கிய உலகில், அது ஒரு விவாதத்தைக் கூட ஏற்படுத்தாதுதான் சோகம்.
மு.யூசுப்பை நாகர்கோயில் அருகே உள்ள புத்தன்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

 பொதுவாகவே இலக்கிய உலகில் புத்தகங்கள் எழுதியதும் சக இலக்கியவாதிகளில் பிழை திருத்தம் செய்யக் கொடுப்பது வழக்கம்.

Tuesday, October 8, 2013

என் தந்தை ஒரு ஹீரோ! - தாரிக் அன்வர்

 சாமன்யர்களின் ஒருவராய் தன் வாழ்வைத் துவங்கி தன் முயற்சியாலும், பிறருக்கு உதவும் நற்குணத்தாலும் இன்று ஏர் இந்தியாவில் ஒரு மேனேஜராக வளர்ந்து நிற்க்கும் நூர்முஹம்மது என் நெருங்கிய நண்பர். அவரது 50ஆவது
இடது கோடியில் இருப்பது நூர் முஹம்மது
பிறந்த நாளின் போது அவரது மகன் தாரிக் எழுதிய கடிதம் என் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. தாரிக்கின் வார்த்தைகள் கொஞ்சம் கூட மிகைப்படுத்தப்படவில்லை. எல்லோருக்கும் உதவும் அவர் இனிய குணத்தை நானே என் குடும்பத்தினருடன் பல முறை பகிர்ந்ததுண்டு. அந்த நற்குணம் தான் அவருக்கு இறையருளை பெற்றுத் தந்தது. இறைவன் அவருக்கு வழங்கிய முதல் அருட் கொடை
அவரது குணத்திற்க்கு தோதாக அமைந்தஅவரது அன்பு மனைவி நூர்ஜஹான்.

 இறைவன் என் அன்பு நூருக்கும் அவரது இனிய குடும்பத்தினருக்கும் ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளும், இறை நம்பிக்கையுடன் கூடிய இனிய நல்வாழ்வையும் மென்மேலும் தருவானாக! ஆமீன்!  அவரது அர்த்தமுள்ள வாழ்க்கை நமக்கும் படிப்பினை என்பதால் தாரீக்கின் கடிதத்தை பதிந்துள்ளேன். சிரமம் பாராது இதை படித்து நீங்களும் இறைவனை இறைஞ்ச வேண்டுகின்றேன்!.

தாரிக் - இஞ்சினியர்  working in சிங்கப்பூர்
Dear Atha,

An Honest Message For You On Your 50th Birthday...

I ask dua to Allah SWT to grant you long, healthy and peaceful life. I am kind of an introvert. I always keep my feelings to myself. I think it is time to tell my feelings to my loved ones. People say “my father is my Hero”, this phrase is good to hear, yet only few fathers really deserve it. I am going to justify why you deserve it. When I think about you, the first thing which comes to my mind is your sacrifice to our family. I am going to split yourself in to different characters and going to find out in which character you score the most. Let’s split you into a husband, a father, a son, a brother, a friend, an uncle, a teacher/guide, an employee, a student, and a Muslim.

Tuesday, July 9, 2013

வார்த்தைகளான கடல்!

 (நபியே!) நீர் கூறுவீராக:
என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக
கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும்,
என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!” (18:109)

இறைவேதமாம் குர்ஆன் மகத்தான இறைவனின் வார்த்தைகள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சங்கை மிகுந்த இதயத்தில் இறங்கியது.

அவர்களது புனித நாவால் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

இன்று நம் கைகளில் இருப்பது
 
மனித மொழியில் வெளிப்பட்ட இறைவனின் பேச்சு.

 வார்த்தைகளான கடல்.

Saturday, June 15, 2013

நபியிடம் பெற்ற பேறு!


ஷெய்குல் அரபி வல் அஜம் ஃபைஜிஷாஹ் நூரி(ரலி)
முஹய்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி(ரலி), காஜா முய்னுத்தீன் (ரலி), ஜுனைதில் பக்தாதி(ரலி). அபுபக்கர் ஷிப்லி(ரலி) என இறைநேசர்களின் சரித்திரத்தை படித்திருக்கின்றோம். அந்த வழியில் வந்த ஒரு இறைநேசரின் சகவாசத்தில் வாழும் மகத்தான பாக்கியம் என் போன்றோருக்கு கிடைத்தது  இறைவன் வழங்கிய பெரும்பேறு."அவ்லியாக்களின் தரிசனம் பெற்றால் ஆன்மாவிற்கே சுகம் சுகம்" என்று பாடிய மறைந்த கவிஞர் நாகூர் சலீம் அவர்களின் பாடல் வரிகள் தான் இங்கே நினைவில்  வருகின்றது.

வலிகள் கோமான் முஹய்யத்தீன் ஆண்டகையின் சரிதத்திலிருந்து பெரியோர்கள் எடுத்துக் கூறிய ஒரு சம்பவம்:

கௌதுனா தன் சீடர்களுடன் ஆன்மீக சபையில் அமர்ந்திருக்கின்றார்கள். அப்போது சீடர் ஒருவர் “  இப்போது நாம் அமர்ந்திருப்பது  பெருமானாருடன் சஹாபாக்கள் வீற்றிருப்பது போல் இருக்கிறது” என கூறவும் கௌதுனாவின் அழகிய முகம் சிவந்து விட்டது.

Monday, June 10, 2013

இறைகாதல் - கலாநிதி தீன்முகம்மதுவுடன் ஓர் நேர் காணல்

மப்றூக்


லங்கையின் கல்வித்துறைசார் இஸ்லாமிய அறிஞர்களில் குறித்துச் சொல்லத்தக்க ஒருவர் கலாநிதி தீன்முகம்மத்! இவரின் சொந்த ஊர் அம்பாரை மாவத்திலுள்ள அக்கரைப்பற்றுப் பிரதேசம். இலங்கையில் வாழ்ந்ததை விடவும் கற்கவும், கற்றுக் கொடுக்கவுமென இவர் வெளிநாடுகளில் வசித்த காலமே அதிகமாகும்!

இவர் பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில்:

0 இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாகவும்
0 மதங்கள் ஒப்பியல்துறைத் தலைவராகவும்
0 கல்வி நிர்வாகப் பணிப்பாளராகவும்

நீண்ட காலம் சேவையாற்றியிருக்கின்றார்.

அதற்கு முன்னர், 1988 இல் எகிப்திலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுப் பிரிவில் விரிவுரையாளராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றியிருந்தார்!

தற்போது கட்டார் பல்கலைக்கழகத்தின் சரீஆ கற்கைத்துறை இணைப் பீடாதிபதியாக இருக்கின்றார். இந்தப் பதவிக்கு முன்னராக, இதே பல்கலைக்கழகத்தின் தவ்வா அல் இஸ்லாமியக் கலாசாரத்துறை தலைவராகவும் கடமையாற்றினார்.

Tuesday, May 28, 2013

சிறுகதை - அதன் அகமும் புறமும் - சுந்தர ராமசாமி தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில்  சுந்தர ராமசாமி ஆற்றிய உரை ( 25.03.95) நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆர்வம் இருந்தால் எழுதலாம். எல்லோரும் அதைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.அப்படியொரு கட்டாயம்,
சமூகத் தேவை எதுவுமே இல்லை.  சிறுகதை எழுதாமல் சிறந்த பிரஜையாக வாழமுடியும். சிறுகதை எழுதுபவர்களைவிட, படிப்பவர்களைவிட உயர்ந்த மனிதர்களாக அவர்கள் இருக்கவும் கூடும். சிலர் சிறுகதைகள் படிக்காமல் வேறு அற்புதமான நூல்களைப் படித்திருப்பார்கள். சிலர் திருக்குறள் படித்திருப்பார்கள். சிலர் சிலப்பதிகாரம் படித்திருப்பார்கள். கம்பராமாயணம் படித்திருப்பார்கள். நமது தலைவர் திரு. ஹமீத் அவர்களின் தகப்பனார் ஆன செய்க்குத்தம்பிப் பாவலர் இருக்கிறார். மிகப்பெரிய புலவர். இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரிய புலவர்களில் ஒருவர் என்று சொல்லலாம். ஆனால் அவர் சிறுகதையை விரும்பிப் படித்திருப்பாரா என்பது சந்தேகம் தான். அதை வைத்து ஒருவரை நாம் மதிப்பிட முடியாது. 

Wednesday, May 15, 2013

மோடி மந்திரம் - சமஸ் (காலச்சுவடு)

கர்நாடகத்தில் பலிக்காமல் போன மோடி மந்திரம் குஜராத்துக்கு வெளியே செல்லுபடியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நேரத்தில். ஊதி பெருக்கப்படும் மோடியின் வளர்ச்சி! மந்திரமல்ல கார்பொரேட் தந்திரம் என்பதை அலசும் திரு. சமஸ் அவர்களின் கட்டுரை (மே 2013, காலச்சுவடு) நன்றிடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. 
 
தலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . - இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்னஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.

Sunday, May 12, 2013

திரை நீக்கும் தொழுகை! - 2Shibli (rah) said : Wadu is separation and Salat is adhesion. 

Man lam yanfasal lam yattasal. “ He who did not separate did not adhere".

அபுபக்கர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் சொல்கின்றார்கள் : ஒலு என்பது பிரிவு. தொழுகை என்பது இணைப்பு. யார் பிரியவில்லையோ அவர்கள் இணைப்பை பெற மாட்டார்கள்.

என்ன பிரிவுஇது? என்ன இணைப்புஇது?

Saturday, May 11, 2013

திரை நீக்கும் தொழுகை!

 தொழுகை “பாவம்” எனும் அழுக்குகளையும் வேற்றுமையினால் (கைரியத்*) ஏற்படும் மனகளங்கங்களையும் அல்லாஹ்தாலாவின் தரிசனையை விட்டும் தூரப்படுத்தும் சிருஷ்டிகள்(அனைத்தையும்) விட்டு மனதை பரிசுத்தபடுத்துகிறது. 

வேற்றுமைகளை விட்டும் சுத்தமாகும் தருணம் கல்பின் திரைகள் நீங்கிவிடுகின்றன.- (நூல்:ஹிகம்).

"கைரியத*" என்பது  இறைவனை விட்டு மனதால் பிரிந்து தனியே தன்னை விளங்கும் நிலையை குறிக்கும். இதை பற்றிய ஆழமான விளக்கத்தை முறையான இறைஞான அறிஞர்களை அணுகி பெறுதல் நலம். இந்த கட்டுரையை விளங்க இந்த அளவு விளக்கமே போதுமானது.

 0 0 0

இந்திய பெருங்கடலில் உள்ள சிசெல்ஸ் தீவில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது என் சங்கைக்குரிய குருநாதர் ஃபைஜிஷாஹ்(ரஹ்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார்கள். அப்போது அவர்கள் செய்யும் வணக்கங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது.  தனியே தொழக் கூடிய   தொழுகையில் வேத வசனங்களை ஓத ஆரம்பித்தால் உலகை மறந்த பேரின்பத்தில்  லயித்து விடுவார்கள். இறைவேதத்தின் ஆழமான அர்த்தங்களில் மூழ்கிய பேரின்ப நிலையில் ஒவ்வொரு வசனத்தையும் மீண்டும் மீண்டும் பல முறை ஓதுவார்கள்.  அவர்கள் தொழுது முடிக்க வெகு நேரமாகிவிடும். இதை பல முறை பார்த்து வியந்திருகின்றேன்.

அப்போதெல்லாம் அவர்கள் இவ்வளவு லயித்து தொழுகின்றார்கள். நாம் எத்தனை அலங்கோலமாய் தொழுகின்றோமே! அதன் காரணம் என்ன என்ற சிந்தனை என்னை வாட்டும்.

Saturday, March 9, 2013

தன்னை அறிதல்

 தன்னை அறிந்தவன் தன் நாயனை (ரப்பை) அறிவான்என்பது ஆன்மீகத்தின் அடிப்படைப் பாடம். உங்களில் (பல அத்தாட்சிகள் உள்ளன) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா? (51:21)  என்கிற வேதவரிகளின் விளக்கமேயிதுபல  நூற்றண்டுகளாக ஆன்மீக அறிஞர்களால் எடுத்தாளப்படும் இந்த வாசகம் நபிமொழி எனவும், அலி ரலியல்லாஹுத்தாலாவின் கூற்று எனவும் இரு வகை கருத்துகள் உண்டு. இதன் விளக்கமாய் அமைந்த பாடமோ மிகவும் ஆழ்ந்த கருத்துகளடங்கியது. அதில் ஒரு சிறு பகுதி அதன் முக்கியத்துவம் கருதி உங்கள் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றது:

Friday, February 15, 2013

சில நேரங்களில் பல மனிதர்கள்!என் ஆறாம் வகுப்பு படிக்கும் சின்ன மகளுக்கு என்னால் சொல்லிக்காட்ட முடியாத இந்த செய்தியை சகோதரி அனோஷ்கா ரவிஷங்கரின் வார்த்தைகள் மூலம் பகிர்ந்து கொள்கின்றேன். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுடன் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற கோரிக்கையுடன்:


Thursday, January 31, 2013

கமல்ஹாசனுக்கு இஸ்லாமிய சமூகத்தின் நன்றி! நன்றி! நன்றி!


அன்புள்ள கமல்ஹாசனுக்கு
இஸ்லாமிய 'பொதுஜனங்களில்' ஒருவனாக...

 உங்களின் 'விஸ்வரூபம்' தொடர்பாக பதிந்த ஒரு  மடல்.
 தாலிபான்களின் தீவிரவாதத்தை வென்றெடுக்கும்டாலர் தேசங்களின் உள்ளங்கவர் 'ஃபார்முலாவை' மையப்படுத்தி நீங்கள் கதையமைத்தது ஆஸ்கரை நோக்கிய உங்கள் காய்நகர்த்தலாக இருக்கலாம்.
 
ஆனால் மனித நேயமிக்க கலைஞரான நீங்கள்
சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளக் கூடிய நீங்கள்


கமல் ....நீங்களா இப்படி செய்தது?

Wednesday, January 23, 2013

அழகிய முன் மாதிரிDr. Aaidh al-Qarni Most Prominent Salfi Scholar. He has Written Many of Books including "Don't Be Sad". this photowas taken Dr.Abdullah al Fadq's House in Jeddah On the day Of Meeladun Nawbi Function.


Fatwa from Dubai on celebrating the Mawlid

 நபிகள் நாயகத்தின் வரலாறு அடியானுக்கும், ஆண்டவனுக்கும் இடையே இருந்த திரைகள் விலக்கப்பட்ட வரலாறு என எழுத்தாளர் நாகூர் ரூமி  ஒரு நூலில் குறிப்பிடுவது எத்தனை அர்த்தம் பொதிந்த வாசகங்கள்.