தோழமையுடன்

Thursday, April 21, 2011

அல்லாஹ் என்பது யார்?அல்லாஹ் என்ற வார்த்தைக்கு இறைவன், கடவுள் என்பது பொருள்.  அல்லாஹ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெயர் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக அல்லாஹ் என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும். இதை தான் வலைப்பக்கத்தின் முகப்பிலேயே போட்டிருக்கின்றீர்களே பின் ஏன் ரிபிட்டேஷன் அவனைப் பற்றி வேறு ஏதாவது சொல்லுங்கள் என்கின்றீர்களா!

Wednesday, April 20, 2011

ஆத்திக நாத்திக ஹம்பக்!

 ‘ஆபிதீன் பக்கங்களில்’ வந்த என் கட்டுரையை மீள்பதிவு செய்துள்ளேன்:

ஆத்திகம்  அல்லது ஆன்மீகம் என்பது ஹம்பக் என்கிறது ஒரு கூட்டம்.
நாத்திகம் என்பது ஹம்பக் என்கிறது ஒரு கூட்டம்.

’ஹம்பக்’ என்றால் என்ன என்று சும்மா புரியாதவர் போல் கேட்கின்றீர்களா? இந்த ஹம்பக்கெல்லாம் நம்ம கிட்ட வேணாம் சாரே!  சரி! சரி! கோபம் வேண்டாம் விஷயத்துக்கு வருவோம்.