தோழமையுடன்

Tuesday, September 21, 2010

கொலைக்களம் குவாண்டனாமோ! -- வெ. ஜீவகிரிதரன்வெ.ஜீவகிரிதரனின் கட்டுரையை ஈமான் டைம்ஸ் மூலம் ராஜகிரி கஜ்ஜாலி அனுப்பியுள்ளார். பெண்களும், சிறுவர்களும் படிக்க வேண்டாம் என்ற கோரிக்கையுடன் அதிர்ச்சியூட்டும் இந்த கட்டுரை வாசகர்களின் பார்வைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது

Monday, September 20, 2010

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்.


ஜான் பெர்கின்ஸின் இந்த நூலை இரா. முருகவேளின் அற்புதமான மொழிபெயர்பில் விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜான் பெர்கின்ஸ் இந்த புத்தகத்தை வெளியிடுவதானால் தனக்குள்ள ஆபத்தை பற்றி தன் ஒரே மகள் ஜெஸிகாவிடம் பகிர்ந்து கொண்டபோது    “கவலைப்பட வேண்டாம் அப்பா!. அவர்கள் உனக்கு முடிவு கட்டினால் நான் தொடர்வேன். உனக்கு ஒரு நாள் பெற்றுத் தரப்போகும் பேரக்குழந்தைகளுக்காகவாவது இதை நாம் செய்தே ஆக வேண்டும்” என்ற ஜெஸிகாவின் வரிகளுக்காகவாது அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

Saturday, September 18, 2010

எல்லாம் அவன்? எல்லாம் அவன் செயல்?


-->
இறைவனின் அருட் கொடையாய் கிடைத்த என் ஞானாசிரியர் (ஷெய்கு நாயகம்) சில ஆண்டுகளுக்கு முன் வெளிரங்கமாக எங்களை விட்டு பிரிந்தார்கள். என் போன்ற பலரின் வாழ்வில் இறைநேசமும், மனித நேயமும் பெருக காரணமாய் இருந்த அந்த மகத்தான தோழமையின் இழப்பு அதைப் போன்ற அறிஞர்களின் சகவாச பாக்கியம் பெற்றவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். சரித்திரத்தில் மட்டுமே படிக்க நேரும் ஒரு மகத்தான ஆளுமையுடன் உயிரும் உணர்வுமாய் வாழ கிடைத்தது மகத்தான வரப்பிரசாதம். 

Saturday, September 11, 2010

என்றென்றும் காதலுடன்


நம் மனைவி, மக்களை விட ஏன் நம் உயிரையும் விட இறைத்தூதரை நேசிக்காதவரை நம் இறை நம்பிக்கை முழுமையடையாது என்பது ஒரு பிரபலமான நபிமொழியின் சாரம். ஏன் அந்த அளவு நபியை நேசிக்க வேண்டும்?
000
ஒரு ஞானாசியரிடம் எனக்கு இறைஞான பாடங்களை சொல்லித் தாருங்கள் என ஒரு மனிதன் வந்தான். அவனிடம் “என்னிடம் மாணவனாக ஆகுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்றார்” அந்த குரு.
“என்ன தகுதி… சொல்லுங்கள்” என அவன் ஆவலாய் கேட்க,
உன் வாழ்க்கையில் யாரையாவது அல்லது எதையாவது நீ காதலிசிருக்கியா? என்றார்.