தோழமையுடன்

Saturday, December 24, 2011

ஒரு பைசா செலவளிக்காமல் உங்கள் நோய் குணமாக வேண்டுமா?


ஹீலர் பாஸ்கர்
என்ன இது புல்லாங்குழல் ஆன்மிக தளம் என நினைத்தால் லேகிய வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டதாக தெரிகிறதே என சிலர் அவசரமாக முடிவெடுத்து விட கூடாது என்பதால் தான் தலைப்பில் 'ஒரு பைசா செலவளிக்காமல்' என முன்னெச்சரிக்கையாக சேர்த்தேன்.

இறைநம்பிக்கைக்குப் பிறகு உடல் நலத்திற்காக   இறைவனை இறைஞ்ச சொல்கின்றார்கள் நபிகள் நாயகம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் ஆக உடல் நலம் பேணுவது ஆன்மிகத்தின் தலையான அம்சம். சரி விசயத்துக்கு வருகின்றேன்.

Wednesday, December 21, 2011

பூட்டிக் கிடந்த கோயிலை திறக்க உத்தரவிட்ட பாக்கிஸ்தான் நீதிமன்றம்!பாக்கிஸ்தானில் நடக்கும் கொலையை ‘இந்து வியாபாரி வெட்டிக் கொலை’ ‘இந்து மருத்துவர் வெட்டிக் கொலை’ ‘இந்து வியாபாரியிடம் வழிப்பறி’ என்று
60 ஆண்டுகள் மூடியிருந்த கோயிலின் திறப்பு விழா
எழுதி அங்கே கொலையோ, கொள்ளையோ அதனால் பாதிக்கப்படுவது இந்துக்கள் மட்டுமே என்ற தேற்றத்தை ஊடகங்கள் விதைக்கின்றது. 
ஆனால் உண்மை என்னவோ நேர்மாறானது அங்கு நடக்கும் கொலையும், கொள்ளைகளும் இனம் பார்த்து நடப்பதில்லை என்பதற்கு நாளும் வெடிகுண்டுகளால் சாகும் இஸ்லாமியர்களின் சடலங்கள் சான்றாக உள்ளன.


Sunday, December 18, 2011

சிறுகதை எழுதுவது எப்படி?ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்  எழுத துவங்கியபோது என்னை refresh பண்ணிக் கொள்வதற்காக சுஜாதா,ஜெயமோகன் என பலர் சொல்லி காட்டியதிலிருந்து எனக்கு நானே எழுதி கொண்டவை இவை. உங்களில் சிலருக்கும் பயன்படலாம் என்பதால் சுஜாதாவுக்கும், ஜெயமோகனுக்கும் நன்றியுடன் இதை பகிர்ந்து கொள்கின்றேன்.

Tuesday, December 13, 2011

அல் குர்ஆனின் ஒளியில் அகப்பார்வை


 “குர்ஆனை வாசித்தால் நன்மை கிடைக்கும். விளங்கினால் (இறை நேச) பதவிகள் கிடைக்கும். ஆராய்சி செய்தால் இறைவனே கிடைப்பான்.”- என்பார்கள் ஷெய்குனா நூரி ஷாஹ் (ரஹ்) அவர்கள்.

குறிப்பு:  யார் அந்த விநோத மனிதர்? கட்டுரையை வாசித்து விட்டு தொடர்வது நலம்.

வேதத்தை வாசித்தால் இறையருள் கிடைக்கும் என்பது சரி இறைவனே கிடைப்பானா?

Monday, December 12, 2011

புலிகள் துரத்துகின்றன – சூஃபி ஞானம் பற்றி பா.ராகவன்


டாக்டர் நாகூர் ரூமியின் சூஃபி வழி ஒரு எளிய அறிமுகம் நூல் குறித்து  பிரபல எழுத்தாளர் பா.ராகவன் அவர்களின் அறிமுக உரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

உறக்கத்துக்கு பதிலாக உறக்கமின்மை, செழுமைக்கு பதிலாக வறுமை, பெருமைக்கு பதிலாக எளிமை என நீங்கள் மாற்றிக் கொள்ளாதவரை நீங்கள் சூஃபிகளின் கூட்டத்தில் இணைய முடியாது - இப்ராஹீம் இப்னு அத்ஹம்.

Wednesday, December 7, 2011

'நிலவு ததும்பும் நீரோடை' - கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்! - கவிஞர் தாஜ்கீற்று இணைய இதழில் முன்பு வெளிவந்த கவிஞர் தாஜின் விமர்சனம் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. இதோ தாஜின் அருமையான விமர்சன வரிகள் உங்கள் பார்வைக்கு....

ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு சென்னை சென்றிருந்தபோது, மணிமேகலைப் பிரசுர அலுவலகத்திற்குப் போகவேண்டிய சூழல். அவர்கள் பிரசுரித்த ஓர் கவிதைத் தொகுப்பு குறித்து அங்கே செய்தி பரிமாறப்பட்டது. நிலவு ததும்பும் நீரோடை / கவிதைத் தொகுப்பு / பஜிலா ஆசாத் / புதுக்கவிதை உலகத்திற்கு மேலும் ஓர் புதிய கவிஞர் என்றார்கள். அந்த கவிஞரின் கவிதையை நேற்றுவரை நான் வாசித்தது இல்லை. நம் சிற்றிலக்கிய இதழ்களில் எழுதியதாகவும் தெரியவில்லை. கவிஞரின் பெயரே கூட அந்த தருணம்தான் அறிய வந்தேன். பாராத அந்த கவிதைகளை வாசிக்க ஆர்வம் கூடியது. மணிமேகலையில், அந்தத் தொகுப்பு வேண்டுமே என்றபோது, என் ஆர்வத்திற்கேற்ற பதிலைத் தந்தார்கள். "அது சென்ற வருடத்தியப் பிரசுரம், விற்றுத் தீர்ந்து விட்டது!"

Monday, December 5, 2011

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லிம்கள் - வாஸந்தி


"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக,  மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)

மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது பயங்கரவாத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் வெளிப்படுத்திய இந்த நியாய உணர்வினை “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லிம்கள்”  என்ற தலைப்பில் எழுத்தாளர் வாஸந்தி  எழுதியிருந்தார். உயிர்மை நடத்தும் உயிரோசை டிசம்பர் 2008 வார இணைய இதழில் வெளி வந்த அந்த கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.


Sunday, December 4, 2011

இஸ்ரேல் : அநீதியின் மீது கட்டப்பட்ட தேசம் - க. திருநாவுக்கரசு - புதுதில்லிநம் நீதியுணர்வின் சுரணை என்பது இன்றைய புத்தம் புதிய அநீதிகளுக்கெதிராக மட்டும் தற்காலிகமாக குரல் எழுப்பும். 70 வருடங்களாய் பலஸ்தீனத்தின் மீது இழைக்கப்படும் அநீதி என்பதோ டூத்பேஸ்ட் விளம்பரத்தைப் போல நமக்கு  சகஜமான ஓரு நிகழ்வாகி விட்டது.

காலச்சுவடு மார்ச் 2009ல் க.திருநாவுக்கரசு எழுதிய  இந்த கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது. நீண்டகாலமாய் தொடரும்  துயரம் என்பதால் கட்டுரை சிறிது நீள்கிறது. பொறுமையுடன் படிக்கும் உங்கள் சிரத்தையை வேண்டிய வண்ணமாய்..

இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டல்!


 "இலவச ஆன்லைன் கல்வி"க்காக ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்காக அனைத்து பாடநூல்களையும் தொகுத்து அழகாக ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.